//
you're reading...
latest news

LATEST TECHNICAL NEWS


———————————————————————————————————————
Auto Shutdown: கணணியை தானாகவே ஷெட்டவுண் செய்வதற்கு!!
———————————————————————————————————————
கணணியில் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது ஏதோ ஒரு அவசர வேலையாக கணணியை ஷெட்டவுண் செய்திட மறந்து விடலாம்.

அவ்வாறான குறையை நிவரத்தி செய்ய குறிப்பிட்ட நேரத்தில் கணணி தானாகவே நின்றுவிட உதவும் வகையில் ஒரு சின்ன மென்பொருள் உள்ளது.

இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளவும். இதில் Shut Down, Log Off, Stand by, Hibernate என பல ரேடியோ பட்டன்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

இதில் தேவையானதை தெரிவு செய்யவும், அடுத்தது எந்த நேரத்தில் கணணி நின்று விட வேண்டும் என நினைக்கின்றோமோ அந்த நேரத்தை தெரிவு செய்யவும்.

குறிப்பிட்ட நாளில் குறிபிட்ட நேரத்தில் நின்று விட வேண்டுமா அதனையும் நாம் தெரிவு செய்யலாம். இவை அனைத்தையும் தெரிவு செய்து பின்னர் இதில் உள்ள Start task கிளிக் செய்யவும். அவ்வளவுதான். இனி நீங்கள் மற்ற பணிகளை பார்க்கலாம். குறிப்பிட்ட நேரம் வந்ததும் உங்கள் கணணி தானாகவே நின்றுவிடும்.
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………
———————————————————————————————————————
விண்டோஸ் கணணிகளில் கடவுச்சொற்கள் கையாளப்படும் வழிமுறைகள்!!
———————————————————————————————————————

ஒவ்வொருவரும் தங்களது கணணி மற்றும் அதில் பதிந்துள்ள தகவல்களின் பாதுகாப்பிற்காக கடவுச்சொல்லை அமைத்திருப்பர்.

பெரும்பாலானவகள் இந்த கடவுச்சொல்லானது மிகவும் பாதுகாப்பானது, வலிமையனது எனவும் கணணிக்கு கடவுச்சொல்லை அமைத்துவிட்டால் யாராலும் அந்த கடவுச்சொல்லை மீறி கணணியை பயன்படுத்த இயலாது என எண்ணுகின்றனர்.

ஆனால் அது உண்மையில்லை. உங்கள் கணணியின் கடவுச்சொல்லை சில வழிகள் மூலமாக கைப்பற்ற இயலும்.

முதலில் கடவுச்சொற்கள் கணணியில் எவ்வாறு கையாளப்படுகின்றன என பார்க்கலாம். Security Accounts Manager(SAM) என்பது ஒரு Registry file ஆகும். இது கணணியில் “C:WINDOWSsystem32config” என்ற இடத்தில் சேமிக்கப்படும்.

இந்த File இல் தான் LM hash, NTLM hash போன்ற மறையாக்க முறைகளில் மாற்றம் செய்யப்பட்டு சேமிக்கப்படுகிறது.

இந்த SAM File இனை திறந்து படித்து விட்டால் கடவுச்சொல் தொடர்பான விடையங்களை அறிந்துவிடலாம். ஆனால் விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் பொழுது SAM File இனை கொப்பி செய்யவோ திறக்கவோ விண்டோஸ் அனுமதிக்காது. இதை திறப்பதற்கு நாம் வேறு ஒரு இயங்குதளத்திலிருந்து கணணியை Boot செய்ய வேண்டும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் Live booting என்பது பயன்படுகிறது. Live booting என்றால் நாம் சில மென்பொருட்களை பென்ரைவ் இல் போர்டபிளாக பதிந்து பயன்படுத்துவது போல இயங்குதளத்தை பென்ரைவில் அல்லது சிடி இல் பதிந்து அதை கணணியில் பதியாமலே பயன்படுத்துவது ஆகும்.

இந்த வேலையை செய்வதற்கென்றே உருவாக்கப்பட்டது Ophcrack என்ற மென்பொருளாகும். இதை சிடியிலோ அல்லது பென்ரைவிலோ பதிந்து பயன்படுத்த முடியும். இந்த மென்பொருளை Ophcrack இங்கு கிளிக் செய்து தரவிறக்கம் செய்யவும்.

1. இனி நீங்கள் தரவிறக்கம் செய்த ISO file இனை சிடி யில் பதியவும்.

2. கணணியை Restart செய்து விண்டோஸ் ஆரம்பிப்பதற்கு முன் F8 key இனை அழுத்தி Boot order இல் சிடியை தெரிவு செய்து என்டர் அழுத்தவும். (F8 அழுத்துவது சில கணணிகளுக்கு கீ மாறக்கூடும் கீ முடியாவிட்டால் BIOS மெனுவில் Boot order இல் 1st Boot Drove என்பதில் சிடி இனை தெரிவு செய்திடவும்.)

3. இனி மென்பொருள் இயங்க தொடங்கிவிடும், அடுத்து தோன்றுகிற செய்தியில் Ophcrack Graphic mode என்பதை தெரிவு செய்து என்டர் அழுத்தவும்.

4. சிறிது நேரத்தில்(2-3 நிமிடம்) உங்கள் கணணியின் கடவுச்சொல் காட்டப்படும்.
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………
———————————————————————————————————————
2011ல் வெற்றி பெற்ற தொழில் நுட்பங்கள்
———————————————————————————————————————

சென்ற 2011 ஆம் ஆண்டில், பல நிறுவனங்கள் அறிமுகப்படுத்திய புதிய தொழில் நுட்பங்களும், சாதனங்களும் தோல்வியைத் தழுவின. ஆனால் சில நிறுவனங்கள் கொண்டு வந்த தொழில் நுட்பத்திற்கு சிறந்த வகையில் வெற்றியும், மக்களிடையே அந்த சாதனங்களுக்கு வரவேற்பும் இருந்தன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

1. ஆப்பிள் நிறுவனத்தின் சிரி (Siri): ஆப்பிள் நிறுவனம் வழங்கிய ஐ போன் 4 எஸ் மக்கள் எதிர்பார்த்த பல மாற்றங்களுடன் வரவேற்பைப் பெற்றது. வேகமாக இயங்கும் ப்ராசசர், சிறந்த அம்சங்களுடன் கூடிய கேமரா ஆகியவை இருந்தன. ஆனால் ஒரு பெரிய மாற்றத்தைத் தந்து கொண்டிருக்கும் சிரி என்னும் தொழில் நுட்பத்தினை ஆப்பிள் இந்த போனில் கொடுத்தது.

நம் ஒலி வழி தரும் (Voice Command) கட்டளைகளைப் புரிந்து கொண்டு செயல்படுத்துவதுடன் பதில் அளிக்கவும் செய்கிறது. ஆண்ட்ராய்ட் மற்றும் விண்டோ போன்களில் இந்த வகை வசதி இருந்தாலும், ஒலி வழி தருவதில் அவை பல வரையறைகளைக் கொண்டுள்ளன. ஆனால், ஐபோன் இயற்கையான மொழி வழியை எளிதில் உணர்ந்து கொண்டு செயல்படுகிறது.

ஆர்ட்டிபிசியல் இன்டலி ஜென்ஸ் (Artificial Intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் திறன் இப்போது நம் பாக்கெட்டில் ஐ போன் 4 எஸ் உடன் கிடைக்கிறது. வரும் ஆண்டில் இது இன்னும் பல சாதனங்களில் கிடைக்கும். தொழில் நுட்பமும் மேம்பாடு அடையும். கம்ப்யூட்டர்களில் இதனைப் பயன்படுத்து கையில் பேசியே கட்டளைகளைத் தர முடியும்.

2. சாம்சங் கேலக்ஸி போன்கள்: ஸ்மார்ட் போன்களைத் தருவதில், ஆப்பிள் நிறுவனம் மட்டுமின்றி, சாம்சங் நிறுவனமும் சில சாதனைகளை ஏற்படுத்தியது. மிகக் குறைவான தடிமனில், ஆண்ட் ராட்ய்ட் சிஸ்டத்துடன் வடிவமைக்கப் பட்டு இவை வெளிவந்து சாதனையை ஏற்படுத்தின. இது வரும் ஆண்டிலும் தொடரும். மேலும் பல மேம்பாடுகளை அடையும்.

3. ஆப்பிள் ஐ-பேட் 2: தடிமன் குறைவாக, மிகக் குறைவான எடையில், ஐ-பேட் 2 சாதனத்தைக் கொண்டு வந்து, தன்னுடைய போட்டியாளர்களைக் கதி கலங்க வைத்தது ஆப்பிள் நிறுவனம். ஏனென்றால், மற்ற நிறுவனங்கள் அப்போது தான் தங்களுடைய டேப்ளட் பிசியை எப்படி வடிவமக்கலாம் என்பது குறித்து சிந்தித்து வந்தன.

அந்த போட்டி நிறுவனங்கள் விழித்துக் கொண்டு தங்களுடைய டேப்ளட் பிசிக்களைக் கொண்டு வந்த போது, ஆப்பிள் டேப்ளட் பிசி என்றால் ஐ-பேட் 2 தான் என ஒரு பிரமிப்பை ஏற்படுத்தியிருந்தது. அக்டோபர் 2011ல் இவற்றின் விற்பனை 4 கோடியை எட்டியது உலக சாதனை. இந்த ஆண்டிலும் இது தொடரும்.

4.விண்டோஸ் போன்: மைக்ரோசாப்ட் வழங்கிய விண்டோஸ் போன், ஆப்பிள் ஐ-போன் மற்றும் ஆண்ட்ராய்ட் எதிர்த்து இடம் பெறுமா என்பது ஐயம் என்றாலும், விண்டோஸ் போன் அறிமுகம், இவற்றிற்கு எதிராக, சரியான காய் நகர்த்தல் என்றே அனைவரும் கருதுகின்றனர்.

2010ல் முழுமை அடையாத ஒரு விண்டோஸ் போன் சாப்ட்வேர் தொகுப்பினை, மைக்ரோசாப்ட் வெளியிட்டாலும், அடுத்த ஆண்டில் முழுமையான போன் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக விண்டோஸ் போன் சிஸ்டத்தைக் கொண்டு வந்தது. காப்பி அண்ட் பேஸ்ட் வசதி, ஒரே நேரத்தில் பல செயல்பாடுகளை இயக்கும் திறன், எச்.டி.எம்.எல். 5க்கான சப்போர்ட், முன்பக்க கேமரா சப்போர்ட் ஆகியவை இதன் சிறப்பம்சங்களாக விளங்குகின்றன.

நோக்கியா நிறுவனத்துடன் விண்டோஸ் போன் சிஸ்டத்துடன் போன்களைக் கொண்டு வர மைக்ரோசாப்ட் மேற் கொண்ட ஒப்பந்தம் இதனை இன்னும் வேகமாக மக்களி டையே கொண்டு வரும் முயற்சி யானது. மைக் ரோசாப்ட் நிறுவனத்திற்கு மொபைல் உலகில் ஒரு திருப்புமுனையை விண்டோஸ்போன் ஏற்படுத்தியது. வரும் ஆண்டில் இது ஓர் ஆதிக்க நிலையை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப் படுவதற் கில்லை.

5. கூகுள் ப்ளஸ்: ஒருவழியாக 2011ல் பிரச்னை இல்லாத சமுதாய தளம் ஒன்றை கூகுள், கூகுள் ப்ளஸ் என்ற பெயரில் ஏற்படுத்தியது. சிறிது நாட்களிலேயே இதற்கு 4 கோடி வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைத்தது. இந்த வகையில் முன்னணியில் இயங்கும் தளமான பேஸ்புக் தளத்திற்கு இணையான, போட்டியான செயலாக இது அறியப்பட்டது.

ஆர்குட் போன்ற தளங்கள் தர முடியாத போட்டியை, கூகுள் ப்ளஸ், பேஸ்புக் தளத்திற்கு தந்தது. வரும் ஆண்டில் இவை இரண்டு மட்டுமே இந்த வகையில் போட்டியில் இருக்கும் நிலை ஏற்படும்.

6. கூகுள் குரோம்: மெல்ல மெல்ல தன் நிலையை உறுதி செய்து இன்று, பயர்பாக்ஸ் பிரவுசருக்குப் போட்டியாக, அதன் இடத்தைப் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது கூகுள் குரோம் பிரவுசர். நவம்பர் மாதம் பிரவுசர் போட்டியில் பயர்பாக்ஸைப் பின்னுக்குத் தள்ளி யுள்ளது உண்மை.

வரும் ஆண்டில், தன் பங்கினை மேலும் உயர்த்த பல புதிய பரிமாணங்களுடன் குரோம் பிரவுசர் வரலாம். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருக்கு நிச்சயமாய், குரோம் பிரவுசர் சரியான போட்டியைத் தரும் என்று எதிர்பார்க்கலாம்.
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………
———————————————————————————————————————
மானிட்டர், சிபியு, ஸ்விட்ச் ஆப் செய்திட வேண்டுமா?
———————————————————————————————————————
கம்ப்யூட்டரில் பணியாற்றிக் கொண்டிருக்கையில், ஏதேனும் வேறு ஒரு வேலைக்காக, எழுந்து செல்ல வேண்டியதிருக்கும். வேலையின் தன்மையைப் பொறுத்து, இந்த கால அவகாசம் இருக்கும். அப்போது கம்ப்யூட்டரில் பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை விட்டுவிட்டுச் செல்வோம். இடையே வந்த வேலையை முடித்து பின் மீண்டும் அதனைத் தொடர்வோம்.

இந்த கால நேரத்தில், மானிட்டரை ஸ்விட்ச் ஆப் செய்திட வேண்டுமா? என்ற கேள்வி பலருக்கு பதில் பெற முடியா நிலையில் உள்ளது. இச்சூழ்நிலை சார்ந்த தகவல்களை இங்கு பார்க்கலாம்.

வேலை பார்க்காத போது மானிட்டர்களை ஆப் செய்திட வேண்டிய கட்டாயம் சில ஆண்டுகளுக்கு முன்னால், நாம் மோனோகுரோம் எனப்படும் கருப்பு வெள்ளை திரை கொண்ட மானிட்டர்களைப் பயன்படுத்துகையில் இருந்தது.

இந்த மானிட்டர்களில் ஏதேனும் ஒரு காட்சியை அப்படியே விட்டுச் சென்றால், அது திரையிலேயே பதிந்து காட்டப்படும். ஆனால், காலப் போக்கில் இதற்கான மாற்று வழிகள் இருந்தன. ஸ்கிரீன் சேவர்கள் கிடைக்கப்பெற்று, அவை அசையும் தோற்றத்தைக் கொடுத்தன.

ஆனால் இப்போது எல்.சி.டி திரைகளுடன் மானிட்டர்கள் வடிவமைக்கப்பட்டு கிடைக்கின்றன. எனவே பழைய பிரச்னை இல்லை. இருந்தாலும், சிலர் ஸ்விட்ச் ஆப் செய்வதைப் பரிந்துரைக்கின்றனர். இதற்குக் காரணம் எல்.சி.டி. திரையின் பயன்பாட்டுக் கால ஆயுளை அதிகப்படுத்தத்தான்.

ஒரு எல்.சி.டி. திரை ஏறத்தாழ ஒரு லட்சம் மணி நேரங்கள் பிரச்னையின்றி இயங்கும். இது எவ்வளவு நாளாக இருக்கும்? உங்கள் எல்.சி.டி. திரையினை 24 மணி நேரமும் இயங்கும்படி வைத்தால், பத்து ஆண்டுகளில் அதன் பயன்பாடு 85 ஆயிரம் மணியாக இருக்கும்.

அப்படி என்றால், நாம் இதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதே இல்லை, அல்லவா. கம்ப்யூட்டர் பயன்படுத்தாத போது நாம் சிபியு எனப்படும் கம்ப்யூட்டரின் முதன்மைப் பகுதியை ஆப் செய்கிறோம்.

ஏனென்றால், அதன் தேய்மானத்தைக் குறைக்க இது உதவிடும். சிபியுவில் சிறிய நகரும் சாதனங்கள், மின்சக்தியைக் கடத்தும் பகுதிகள் உள்ளன. எந்த வேலையும் இல்லாத போதும், இவை குறிப்பிட்ட அளவில் இயங்கிக் கொண்டு தான் இருக்கும்.

இதனால் இவற்றின் தேய்மானம் தொடர்ந்து கொண்டே இருக்கும். மேலும் மின்சக்தி எந்நேரத்தி லும் அதிகமாகும் வாய்ப்பு உண்டு. அந்த நேரத்தில் சி.பி.யு.வின் பகுதிகள் எரிந்து போகும் அல்லது கெட்டுப் போகும் வாய்ப்புண்டு.

மேலும் நாம் புரோகிராம்களை இயக்குகை யில், அவற்றின் இயக்கத்தினை நிறுத்திய பின்னரும், சில பைல்கள் ராம் மெமரியில் தங்குகின்றன. இவை அடுத்தடுத்து நாம் மேற்கொள்ளும் செயல்பாட்டினை தாமதப்படுத்துகின்றன.

எனவே கம்ப்யூட்டரை ஸ்விட்ச் ஆப் செய்து இவற்றை ராம் மெமரியிலிருந்து நீக்கி, மெமரியை புத்தாக்கம் செய்வது நல்லது. இப்போது நமக்குக் கிடைக்கும் மின்சக்தி நிர்வாக புரோகிராம்கள் (Power Management Programs) இதனை செட் செய்திடும் வழிகளைத் தருகின்றன.

குறிப்பிட்ட நேரம் நாம் செயல்படாமல், கீ போர்ட் மற்றும் மவுஸ் இயக்காமல் இருந்தால் தானாகவே மானிட்டர் மற்றும் சிபியுவிற்குச் செல்லும் மின்சக்தியை நிறுத்தி வைக்கும் வகையில் ஆப்ஷன்கள் உள்ளன. இவற்றை செட் செய்து வைப்பதும், சிபியு மற்றும் மானிட்டர்களின் வாழ்நாளை நீட்டிக்கும்.
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………

———————————————————————————————————————
ஓன்லைன் மூலம் புகைப்படங்களை எடிட் செய்வதற்கு….
———————————————————————————————————————
ஓன்லைன் மூலம் புகைப்படங்களை எடிட் செய்ய பல இணையத்தளங்கள் வந்தாலும் ஒரு சில தளங்கள் மூலம் வெகு விரைவாக பல வகையான வேலைகள் செய்ய முடியும்.

இப்படி பலவிதமான வேலைகளை ஓன்லைன் மூலம் செய்ய நமக்கு ஒரு தளம் உதவுகிறது.

நம்மிடம் இருக்கும் புகைப்படத்தை எந்த வண்ணத்தில் எந்த Style-ல் வைத்தால் நன்றாக இருக்கும் என்று பார்த்து அதன் பின் ஒரே சொடுக்கில் புகைப்படத்தை மாற்ற நமக்கு ஒரு தளம் உதவுகிறது.

இத்தளத்திற்கு சென்று Start Editing என்ற பொத்தானை சொடுக்கி இந்த வேலையை செய்ய ஆரம்பிக்கலாம். அடுத்து வரும் திரையில் Open என்பதை சொடுக்கி நம்மிடம் இருக்கும் புகைப்படத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின் Touchup என்பதை சொடுக்கி படத்தின் Brightness மற்றும் color போன்றவற்றை மாற்றலாம். Effects என்பதை சொடுக்கினால், இதில் நமக்கு எந்த மாதிரியான எஃபெக்ட் தேவையோ அதை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டியது தான். எல்லாம் மாற்றியபின் Save என்ற பொத்தானை சொடுக்கி படத்தை சேமித்துக் கொள்ளலாம்.

இணையதள முகவரி
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………
———————————————————————————————————————
பயர்பொக்சில் யூடியூப் வீடியோக்கள் தெரிவதற்கு
———————————————————————————————————————

பயர்பொக்ஸ் உலாவியில் யூடியூப் வீடியோக்கள் பார்வையிடும் போது சிலருக்கு வீடியோ பாக்ஸுக்கு பதிலாக கறுப்பு நிற பெட்டி(black box) தெரியும்.

இதற்கு பயர்பொக்ஸ் உலாவியில் Offline Storage(Cache / தற்காலிக கோப்புக்கள்) அளவு அதிகரிக்கின்றமையே காரணம்.

இதனை சரிசெய்ய பயர்பொக்சில் Offline Storage(Cache) ஐ நீக்குவதற்கு Tools > Options > Advanced > Network > Offline Storage(Cache) சென்ற பின்னர் “Clear Now” என்பதை அழுத்துங்கள்.

அதன் பின் யூடியூப் வீடியோக்கள் தெரியும்.
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………
———————————————————————————————————————
பாதுகாப்புக் குறைபாடு உள்ள ஜி.எஸ்.எம் தொழிநுட்பம்! ஹக்கர்களால் கைப்பற்றப்படும் கைடக்கத் தொலைபேசிகள்!!
———————————————————————————————————————

உலகில் அதிகமானோர் பாவிக்கும் கையடக்கத்தொலைபேசிகள் ஜி.எஸ்.எம் எனப்படும் (Global System for Mobile Communications) தொழிநுட்பத்தின் மூலமே இயங்குகின்றது.

புள்ளிவிபரங்களின் படி உலகத் தொலைபேசிகளில் 80% இத்தொழில்நுட்பத்தின் மூலமே இயங்குகின்றது.

இந்நிலையில் ஜேர்மனிய நாட்டு ஆராய்ச்சி அமைப்பான Security Research Labs இன் தலைவரான கார்ஸ்டன் நோஹல் ஜி.எஸ்.எம். கையடக்கத்தொலைபேசிகளில் காணப்படும் பாதுகாப்புப் குறைபாடு தொடர்பில் ஆய்வறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார்.

அதன் படி ஜி.எஸ்.எம். தொழில்நுட்பத்தில் இயங்கும் அனைத்து கையடக்கத்தொலைபேசிகளிலும் பாதுகாப்புக் குறைபாடு காணப்படுவதாகவும் இதன் மூலம் எமது கையடக்கத்தொலைபேசிகளிலிருந்து நாம் அறியாதவகையில் அழைப்புகளை மேற்கொள்ளமுடிவதுடன்,

குறுந்தகவல்களையும் அனுப்பமுடியுமென நோஹல் எச்சரிகை விடுத்துள்ளார்.

அதாவது நமது கையடக்கத்தொலைபேசிகள் நாம் அறியாத வகையில் ஹெக்கர்களின் கைகளுக்குள் சிக்குவதாகும்

இப்பாதுகாப்புக் குறைபாட்டின் மூலம் குறைந்த மணித்தியாலத்தில் அதிக கையடக்கத்தொலைபேசிகளை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஹெக்கர்களால் முடியுமென நோஹல் குறிப்பிட்டுள்ளார்

பொதுவாக சி.டி.எம்.ஏ உட்பட மற்றைய வலையமைப்புகளை விட ஜி.எஸ்.எம் ஆனது பாதுகாப்பாகக் கருதப்படுகின்றது

எனினும் தற்போது வெளியாகியுள்ள செய்தியானது பாவனையாளர்களுக்கும், சேவை வழங்குநர்களுக்கும் சற்று அதிர்ச்சியளிப்பதாகவே உள்ளது.

ஸ்மார்ட் போன்களின் விற்பனையானது தற்காலத்தில் வெகுவாக அதிகரித்துள்ளமையானது ஹெக்கர்களின் கவனத்தினை மொபைல்உலகத்தினை நோக்கித் திருப்பியுள்ளது.
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………
———————————————————————————————————————
USB டிரைவ்களை போர்மட் செய்வதற்கு…
———————————————————————————————————————

நம்மிடம் உள்ள தகவலை வெளியே எடுத்துச் செல்ல பெரும்பாலும் நாம் பயன்படுத்துவது CD, DVD, Pen Drive, Usb Drive போன்றவைகள் ஆகும். நாம் வைத்துள்ள டிரைவ்களை வைரஸ் அல்லது வேறு சில காரணங்களினால் போர்மட் செய்ய நேரிடும்.

அப்போது வைரஸ் பிரச்சினையின் காரணமாக போர்மட் செய்வதில் பல பிரச்சினைகள் ஏற்படுவதால் போர்மட் செய்ய இயலாது. இதனை சரிசெய்ய ஒரு எளிய மென்பொருள் உள்ளது.

Disk Formatter என்னும் மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணணியில் நிறுவிக் கொள்ள வேண்டும். இந்த மென்பொருளை ஓபன் செய்ததும் தோன்றும் விண்டோவில் போர்மட் என்ற பொத்தானை அழுத்தி போர்மட் செய்து கொள்ள முடியும்.

இதன் சிறப்பு வசதி இந்த மென்பொருள் வெறும் 50kb அளவு உடையது ஆகும். மேலும் FAT32 and NTFS போர்மட்டுகளை உடையது ஆகும்.

எந்தவித மென்பொருளும் இல்லாமல் கணணியில் நிறுவியுள்ள இயங்குதளங்களின் மூலமாகவே USB டிரைவ்களை போர்மட் செய்து கொள்ள முடியும்.

முதலில் Start->Rum->cmd என்று தட்டச்சு செய்து command prompt யை ஓபன் செய்ய வேண்டும். பின் My computerயை ஒப்பன் செய்து டிரைவ் எந்த கோலன் என்பதை குறித்துக் கொண்டு command promptல் போர்மட் என டைப் செய்து F:G:H:I:J: இது போல எந்த கோலன் என்பதை Format கோலன், உதரணாத்திற்க்கு G: கோலன் என்றால் format g: என்று டைப் செய்து Enter Keyயை அழுத்தவும்.

அடுத்ததாக போர்மட் செய்ய ரெடி என்று Enter கீயை அழுத்த சொல்லும், அதன் பின் எண்டர் கீயை அழுத்தவும்.

அழுத்தியவுடன் போர்மட்டாக தொடங்கும், ஒரு சில வினாடிகளில் போர்மட் ஆகிவிடும். விரும்பினால் டிரைவுக்கு வேண்டிய பெயரை இங்கேயே எழுதலாம். அவ்வளவு தான் இனி டிரைவ்களை போர்மட் செய்வது எளிதாகும்.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………
———————————————————————————————————————

இணையத்தின் பயன்பாட்டினை அறிந்து கொள்வதற்கு…
———————————————————————————————————————

பிராட்பேண்ட் இணைய இணைப்பு இப்போது பலரிடம் வெகுவேகமாகப் பரவி வரும் பழக்க இணைப்பாக உள்ளது.

இதனை வழங்கும் சேவை நிறுவனங்கள் பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்யப்படும் தகவலின் அடிப்படையில் குறிப்பிட்ட அளவு ஜிபி வரை ஒரு கட்டணம் என்றும் அதன் பின்னர் ஒவ்வொரு எம்பி வரை தனித்தனியாக எனக் கட்டணம் வாங்குகின்றனர்.

சில நிறுவனங்களின் திட்டங்களில் நமக்கு எப்படி இந்த அளவினை மேற்கொள்கிறார்கள் என்று காட்டப்படுவது இல்லை. இதனால் இணைய இணைப்பினைப் பயன்படுத்தினால் ஒரு மணிக்கு இவ்வளவு என அந்த பயன்பாட்டு நேரத்திற்குமான கட்டணத்தினை மட்டும் செலுத்தும் திட்டத்தினைப் பலர் விரும்புகின்றனர். ஆனால் மணிக்கணக்கினாலான திட்டத்தினை சில நிறுவனங்கள் மட்டுமே அளித்து வருகின்றன.

எது எப்படி இருந்தாலும் நம் இணைய பயன்பாட்டினை நாம் அளந்து பார்த்து அறிய முடியாதா என்ற கேள்விக்கு விடையாகச் சில புரோகிராம்கள் இணையத்தில் உள்ளன. அவற்றில் ஒன்று BitMeter OS ஆகும். இதனை http://codebox.org.uk/bitmeterOs என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இது ஓர் ஓப்பன் மூலப்பொருள் புரோகிராம் ஆகும். விண்டோஸ், லினக்ஸ் மற்றும் மேக் இயங்குதளம் ஆகிய சிஸ்டங்களில் இயங்கும் வகைகளில் கிடைக்கிறது. இலவசமாய் இணையத்தில் கிடைக்கிறது.

இதனைத் தரவிறக்கம் செய்த பின்னர் இதன் ZiP கோப்பை விரித்து, அதனை ஒரு கோப்பறையில் வைத்துக் கொள்ளவும்.

பின்னர் அப்ளிகேஷன் கோப்பை இயக்கி இந்த புரோகிராமினை நிறுவச் செய்திடவும். கணணியில் நிறுவியவுடன், நமக்கு அது குறித்து ஒரு செய்தி கிடைக்கும்.

இதன் பின்னர் நாம் அறியாமலேயே இந்த புரோகிராம், கணணியின் பின்னணியில் இயங்கும். நீங்கள் எவ்வளவு தகவலை பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்கிறீர்கள் என்ற கணக்கை எடுத்துக் கொண்டிருக்கும்.

இந்த தகவல் எங்கிருந்து வந்தது என்ற தகவல் எதனையும் இந்த புரோகிராம் எடுத்துக் கொள்ளாது. எந்த நேரத்திலும், நீங்கள் இதனை இயக்கி, இதன் இணையத்தளம் சென்று உங்கள் இணையப் பயன்பாடு குறித்த தகவல்களைக் காணலாம். http://localhost:2605/ என்ற முகவரியில் உள்ள தளம் சென்று இந்த தகவல்களைக் காணலாம்.

இங்கு கிடைக்கும் பயனர்முகத்தில்(Interface) காட்டப்படும் மொனிட்டரில், பதிவேற்றம் மற்றும் பதிவிறக்க வேகம், கிராபிகல் மற்றும் டிஜிட்டல் வடிவில் கிடைக்கின்றன. கீழாக வலது புறம் உள்ள கடிகாரத்தில் stopwatch பயன்பாட்டினை மேற்கொள்ளலாம்.

இதன் மூலம் குறிப்பிட்ட கால அளவில் எவ்வளவு தகவல் பயன்படுத்தப்பட்டது என அறியலாம். History டேப்பில் கிளிக் செய்தால் நீங்கள் பயன்படுத்திய அளவினை மணி, நிமிடம், நொடி முதல் அறியலாம். பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றம் பார்கிராப் மூலம் காட்டப்படுகிறது.

Summary டேப் ஒரு மாதத்தில் நீங்கள் மேற்கொண்ட மொத்த இணைய அளவினைக் காட்டுகிறது. என்ற Query டேப்பின் மூலம், குறிப்பிட்ட கால அளவிலான தகவல் எவ்வளவு என்று காணலாம்.

மேலே குறிப்பிட்ட அனைத்து வசதிகளைக் காட்டிலும் ஒரு சிறப்பான வசதி Alerts என்ற டேப்பில் தரப்பட்டுள்ளது. இதில் பல அளவுகளை நாம் வரையறை செய்து கொள்ளலாம்.

குறிப்பிட்ட தகவலை பதிவிறக்கம் அல்லது பதிவேற்றம் மேற்கொள்ளப்பட்டவுடன் நம்மை எச்சரிக்கும்படி செட் செய்திடலாம். ஒரு மாதத்தில் பயன்பாடு இவ்வளவு தான் இருக்க வேண்டும் என வரையறை செய்தால், அதற்கேற்ற வகையில் நாம் பயன்பாட்டினைக் காட்டும்.

Calculator என்ற டேப் மூலம் நாம் தரவிறக்கம் செய்திடும் கோப்பு இன்னும் எவ்வளவு நேரத்தில் முழுமையாக கணணியில் இறங்கும் என அறிந்து கொள்ளலாம்.

பிராட்பேண்ட் பயன்படுத்தும் அனை வரும் கட்டாயம் கணணியில் நிறுவச் செய்திட வேண்டிய புரோகிராம் இது.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………
———————————————————————————————————————
கூகுள் பிளஸ் பயனாளரை தேடிக் கொடுக்கும் பயனுள்ள இணையம்.
———————————————————————————————————————
சமூக இணையதளங்களில் தற்போது பிரபலமாகி வரும் கூகுள் பிளஸ்-ல் இருக்கும் பயனாளர்களை எளிதாக சில நொடிகளில் தேடிக் கொடுப்பதற்காக ஒரு தளம் உள்ளது.

பேஸ்புக் பயனாளர்களை தேட பல வழிகள் இருக்கிறது, ஆனால் கூகுள் பிளஸ் பயனாளர்களை தேடுவது சற்று சிரமமக இருந்து வந்தது.

கூகுளில் சென்றும் தேடலாம், ஆனால் பிரத்தியேகமாக கூகுள் பிளஸ் பயனாளர்களை தேடிக்கொடுக்க ஒரு தளம் உள்ளது.

இத்தளத்திற்கு சென்றவுடன் தோன்றும் விண்டோவில் Search என்ற கட்டத்திற்குள் கூகுள் பிளஸ்-ல் இருக்கும் பயனாளர் பெயர் தொடர்புடையதை வார்த்தையை தட்டச்சு செய்ய ஆரம்பித்த உடனே கூகுள் பிளஸ்-ல் பயனாளரை தேடி நமக்கு எளிதாக காட்டுகிறது.

இதிலிருந்து நாம் தேடும் நபரை எளிதாக கண்டுபிடிக்கலாம். பயனாளரின் அடிப்படை தகவல் மற்றும் அவர்களின் பெயரின் அடிப்படையில் தேடிக்கொடுக்கும் இந்தத் தளம் கூகிள் பிளஸ் -ல் இருக்கும் மக்களை எளிதாக தேடிக் கண்டுபிடிக்க உதவும்.
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………
———————————————————————————————————————
ஓன்லைனில் Image puzzle உருவாக்குவதற்கு…
———————————————————————————————————————
படங்களை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி அதை சேர்ப்பது ஒரு கலை தான், ஓன்லைன் மூலம் நம்மிடம் இருக்கும் படங்களை பதிவேற்றம் செய்து சில நிமிடங்களில் Image puzzle உருவாக்கலாம், நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இத்தளத்திற்கு சென்று Choose file என்ற பொத்தானை சொடுக்கி நம்மிடம் இருக்கும் புகைப்படத்தை தேர்ந்தெடுக்கவும்(நாம் பதிவேற்றம் செய்யும் புகைப்படத்தின் அளவு 400×300 pixels இருக்கும்படி வைத்துக்கொள்ள வேண்டும்).

அடுத்து fun name என்பதில் ஏதாவது பெயர் கொடுத்துவிட்டு அடுத்து இருக்கும் Set how difficult it should be என்பதில் நமக்கு விருப்பமானதை தேர்ந்தெடுத்துவிட்டு Make it என்ற பொத்தானை சொடுக்கினால் போதும், அடுத்து வரும் திரையில் நாம் தேர்ந்தெடுத்த படத்துடன் Image puzzle உருவாக்கப்பட்டிருக்கும்.

வலது பக்கம் இருக்கும் கட்டதை நகர்த்தி படத்தை சரியாக பகுதியில் கொண்டு சேர்க்க வேண்டும்.
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………
———————————————————————————————————————
விண்டோஸ் 7 மற்றும் XP இயங்குதளத்திற்கு MultiBoot USB டிரைவ் உருவாக்குவதற்கு…
———————————————————————————————————————
விண்டோஸ் 7 மற்றும் XP இயங்குதளங்களை USB பென்டிரைவ் மூலம் கணணியில் ஏற்றிக் கொள்ளலாம்.

இந்த செயல்முறையை நான்கு இலகுவான படிமுறைகளை கொண்டு multiboot USB டிரைவ் மூலம் செயல்படுத்தலாம்.

இந்த செயல்முறையை ஆரம்பிப்பதற்கு முன்பு உங்களது USB கட்டாயம் 4 GB அல்லது 8 GB யாக இருக்க வேண்டும். அத்துடன் FAT32 கோப்பு கணணியுடன் போர்மட் பண்ணி இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

அனைத்தையும் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் WinSetupFromUSB என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். தரவிறக்கம் செய்த பின்னர் அந்த மென்பொருளை உங்களது கணணியில் திறந்து கொள்ள வேண்டும்.

1. முதலில் நீங்கள் போர்மட் செய்த USB டிரைவை கணணியில் புகுத்திக் கொள்ள வேண்டும். பின்னர் தரவிறக்கம் செய்த WinSetupFromUSB_1-0-beta7.exe கோப்பை செயலாக்கம்(Run) செய்யுங்கள்.

2. அந்த மென்பொருள் உங்களது USB யை கண்டுபிடிக்கின்றதா(detect ) என உறுதி செய்து கொள்ளுங்கள்.

3. அடுத்து Windows 2000/XP/2003 Setup என்ற படிமத்தில் Windows XP installation கோப்பின் இடத்தை தெரிவு செய்வதுடன், அருகில் உள்ள சரிபார்க்கும் பெட்டியையும்(check box) தெரிவு செய்து கொள்ளுங்கள்.

அடுத்து Vista/7/Server 2008 Setup/PE/RecoveryISO என்ற படிமத்தில் Windows 7 installation கோப்பு உள்ள இடத்தை தெரிவு செய்தவுடன், இந்த இரண்டு சந்தர்ப்பத்திலும், உங்களிடம் Operating சிஸ்டம், ISO images யாக இருக்கும் என்றால் அதை WinRar or 7-Zip கொண்டு Extract செய்ய வேண்டும்.

4. இறுதியாக GO என்ற பொத்தானை அழுத்தினால் போதும் அது தன் வேலையை தொடங்கி விடும்.
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………
———————————————————————————————————————
எந்த மொழியையும் இலகுவாக கற்றுக்கொள்வதற்கு….
———————————————————————————————————————
புதிதாக ஒரு மொழி கற்க வேண்டும் என்றால் அந்த மொழியை தாய்மொழியாக கொண்டவரிடம் நாம் நேரிடையாக பேசினால் போதும் வெகு சீக்கிரத்தில் அந்த மொழியை கற்றுவிடலாம்.

ஓன்லைன் மூலம் எந்த மொழியையும் நேரடியாக எளிதாக கற்கலாம், நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

புதிய மொழி கற்க வேண்டும் என்றால் அதற்காக பணம் செலவு செய்து அந்த மொழி பயிற்சி அளிப்பவரிடம் சென்று தான் கற்றுக்கொள்வது வழக்கம். ஆனால் ஓன்லைன் மூலம் எந்த மொழியையும் இலவசமாக நேரடியாக கற்கலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது.

இத்தளத்திற்கு சென்று நம் தாய்மொழி என்ன என்பதையும், நாம் என்ன மொழி கற்றுக் கொள்ளப் போகிறோம் என்பதையும் கொடுத்து புதிதாக ஒரு இலவச பயனாளர் கணக்கு உருவாக்கி கொண்டு உள்நுழையவும், நம் கற்றுக்கொள்ள விரும்பும் மொழி பேசுபவர்கள் பல பேர் நேரடியாக ஓன்லைனில் இருப்பார்கள்.

இதில் நாம் விரும்பியவருடன் நேரடியாக வீடியோ சாட்டில் பேசலாம். நம் தாய்மொழியை மற்றவருக்கு கற்றும் கொடுக்கலாம். முதலில் தத்தி தத்தி பேச ஆரம்பிக்கும் நாம் சில நாட்களில் அந்த மொழியில் வல்லவர்களாகி விடலாம், கூடவே நமக்கு நல்ல நண்பர்களும் கிடைக்க வாய்ப்பு உண்டு.

இதற்கென்று இத்தளம் கட்டணம் ஏதுவும் வசூலிக்கவில்லை, இலவசமாகவே இந்த சேவை அளித்து வருகிறது.
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………
———————————————————————————————————————
சமூக வலைத்தளங்களில் கவனம் தேவை – மோசடிகள் அதிகரிப்பு
———————————————————————————————————————
பேஸ்புக், ஆர்குட் போன்ற சமூக வலைத்தளங்களை தினமும் பயன்படுத்துபவரா?அப்படியெனில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள். பொய்யான முகவரி கொடுத்து நமது சொந்த ரகசியங்களை களவாடிக் கொண்டு நமது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை கொஞ்சட் கொஞ்சமாக திருடுவதாக அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டுள்ளனர் ஆய்வாளர்கள். கனடாவில் உள்ள பிரிட்டிஸ் கொலம்பியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இந்த உண்மை தெரியவந்துள்ளது.

பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் எல்லாம் இப்போது மிகவும் பிரபலம் அடைந்து ஏராளமானவர்களால் பயன்படுத்தப்படுகிறது. ஆகவே குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் தமது கைவரிசையைக் காட்ட இந்த இணையத்தளங்களை அதிகம் இலக்கு வைக்கிறார்கள் என்பதில் ஆச்சரியம் இல்லை. எனவே நண்பர்களின் போர்வையில் வலம் வரும் இந்த சமூக விரோதிகளிடம் இருந்து இளைய தலைமுறையினர் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். எனவே நட்பு தேடி யாராவது விருப்பம் தெரிவித்தால் உடனடியாக அதை ஒத்துக் கொள்ள வேண்டாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

மைக்ரோசாஃப்ட் ஆய்வு

பேஸ்புக், ஆர்குட் போன்ற சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோரை இலக்கு வைத்து நடத்தப்படும் இதுபோன்ற ஏமாற்று வேலைகள் பெரிய அளவில் அதிகரித்து இருப்பதாக இணைய பாதுகாப்பு தொடர்பில் நடத்தப்பட்ட பெரிய அளவிலான ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுகிறது. மைக்ரோசாஃப்ட் நடத்திய இந்த ஆய்வில் ஃபிஷிங் என்று சொல்லப்படும் ஏமாற்று வேலைகள் அதிகரித்துவருவதாக எச்சரித்துள்ளனர்.

12 மடங்கு அதிகம்

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஆறு மாதத்துக்கு ஒரு முறை நடத்துகின்ற இணையப் பாதுகாப்பு பற்றிய ஆய்வு கடைசியாக வெளியிட்டுள்ள அறிக்கை இந்தப் பிரச்சினையில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து தெரிவித்துள்ளது. அறுபது கோடி கணினிகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கடந்த ஆண்டில் மட்டும் சமூக வலைத்தளங்கள் வழியாக நடத்தப்படுகின்ற ஃபிஷிங் மோசடி வேலை முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் 12 மடங்கு அதிகரித்துள்ளது.

நட்பு அழைப்பா கவனம்

ஃபிஷிங் எமாற்று வேலை என்பது, பொதுவாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்திக் கொண்டிருக்கும்போது நாம் அறிந்த ஒருவர், அதாவது நமது நண்பர் அல்லது உடன் பணியாற்றுபவர் ஒருவரிடம் இருந்து வருகின்ற செய்திபோல வரும். நண்பர் கேட்பதுபோல நம்முடைய பிரத்யேகத் தகவல்களை, தனிநபர் தகவல்களைக் கேட்கும். அப்படி நாம் தகவல்களைக் கொடுத்தால் அது கிரிமினல்கள் கைகளில் கிடைத்துவிடும். அதனைப் பயன்படுத்தி அவர்கள் வங்கிக் கணக்கு, இணைய வர்த்தக கணக்கு போன்றவற்றில் மோசடி வேலைகளைச் செய்து பணம் திருடுவார்கள்.

பெரும்பாலும் நண்பர்களிடம் இருந்து வருகின்ற அழைப்பு போலவோ அல்லது தகவல் போலவோ அமைந்திருக்கும். ஆனால் இவை உண்மையில் இணையத்தில் குற்றச்செயல்களை செய்ய முயலும் ஆட்களிடம் இருந்து வருபவை. வலைத்தளத்தைப் பயன்படுத்துவோரை ஏமாற்றி அவர்களிடம் இருந்து முக்கியமான பிரத்யேகத் தகவல்களைப் பெறுவது இந்த அழைப்பு மற்றும் தகவல்களின் நோக்கமாகும்.

அதிகரிக்கும் மோசடி

சில ஆண்டுகளுக்கு முன் இப்படியான ஃபிஷிங் மோசடி மின் அஞ்சல்களில் பெரிய அளவில் நடந்து வந்தது. ஆனால் இப்போது இத்தகைய மோசடிகள் பெருமளவு சமூக வலைத்தளங்களை இலக்குவைத்து நடத்தப்படுகிறது.

ஒரு ஆண்டுக்கு முன்புவரை சமூக வலைத்தளங்களில் நடந்த பல விதமான ஏமாற்று வேலைகளில் பத்து சதவீதத்துக்கும் குறைவாகவேதான் இந்த ஃபிஷிங் மோசடி வேலைகள் நடந்ததாக ஆய்வுகள் காட்டியிருந்தன. ஆனால் மொத்த மோசடிகளில் 85 சதவீதத்தை தொடும் அளவுக்கு சென்ற ஆண்டு கடைசியில் இவ்வகையான மோசடிகள் அபரிமிதமாக அதிகரித்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

புகைப்படங்கள் எச்சரிக்கை

இதேபோல் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை இணைக்கும் பெண்களும் புகைப்படங்களை இணைக்கும் முன் யோசிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். ஏனெனில் இந்த புகைப்படங்களை ஹேக் செய்து ஆபாச இணையதள பக்கங்களில் உலாவ விடும் கும்பலின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே சமூக வலைத்தளங்களில் நட்பு கொள்ளும் முன் ஆராய்ந்து எஸ் சொல்ல வேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………———————————————————————————————————————
தரவிறக்கத்தில் புதிய சாதனை நிகழ்த்திய ஆன்ட்ராய்ட்.
———————————————————————————————————————
ஆப்பிளுக்கு போட்டியாக கூகுள் ஆரம்பித்த Android ஓபன் சோர்ஸ் மென்பொருள் இப்பொழுது பரவலாக அனைத்து கைபேசிகளிலும் உபயோகப்படுத்தப்படுகிறது.

ஆப்பிள் ஓன்லைன் ஸ்டோர் போன்று Android நிறுவனமும் Android Market என்ற தளத்தை உருவாக்கி Android கைபேசிகள் மற்றும் Tablet கணணிகளில் உபயோகப்படுதக்கூடிய அப்ளிகேஷன்களை வழங்கி வருகிறது.

இந்த தளத்தில் கட்டன மென்பொருட்கள் மற்றும் இலவச மென்பொருட்கள் அனைத்து மென்பொருட்களும் தரவிறக்கி கொள்ளலாம்.

இப்பொழுது அந்த தளத்தின் தரவிறக்கம் செய்யப்பட மென்பொருட்களை எண்ணிக்கை ஆயிரம் கோடியை தாண்டி விட்டதாக கூகுள் நிறுவனம் அதன் வலைதளத்தில் தெரிவித்து உள்ளது.

ஒவ்வொரு மாதமும் 1 பில்லியன் மென்பொருட்கள் தரவிறக்கம் என்ற வளர்ச்சி விகிதத்தில் சென்று தற்பொழுது தரவிறக்க எண்ணிக்கை 10 பில்லியன்(ஆயிரம் கோடி) எண்ணிக்கையை தொட்டு உள்ளது.

இந்த சந்தோசமான தருணத்தை கொண்டாட கூகுள் தளம் ஒரு புதிய சலுகையை வாசகர்களுக்கு வழங்கி உள்ளது. ஒவ்வொரு நாளும் 10 மென்பொருட்களை சலுகை விலையாக வெறும் 10 சென்ட் விலையில் ஒவ்வொரு மென்பொருட்களையும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த சலுகை பத்து நாட்கள் நடைமுறையில் இருக்கும்.

Android மென்பொருட்களை தரவிறக்கம் செய்ய நினைப்பவர்கள் இந்த சலுகை நாட்களில் மென்பொருட்களை தரவிறக்கம் செய்து உங்கள் கைபேசிகளில் பயன்படுத்தி கொள்ளுங்கள்.
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………
———————————————————————————————————————
விதவிதமான ஸ்கிரீன்சேவர்களை பெறுவதற்கு….
———————————————————————————————————————

விதவிதமான அழகிய வண்ணத்துப்பூச்சிகளின் ஸ்கிரீன்சேவர்களை ஒரு சிறிய மென்பொருளின் மூலம் பெறலாம்.

21 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளவும்.

மொத்தம் 3 விதமான ஸ்கிரீன்சேவர்கள் உள்ளது. ஒவ்வொரு ஸ்கிரீன்சேவரிலும் விதவிதமான ஸ்கிரீன்சேவர்கள் உங்களுக்கு காட்டப்படும்.

தரவிறக்க சுட்டி
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………
———————————————————————————————————————
நமக்கு பிடித்த வீடியோக்களை புக்மார்க் செய்து வைப்பதற்கு…
———————————————————————————————————————

யூடியூப்பில் வீடியோக்களை பார்வையிடும் போது Watch Later என்ற வசதியின் மூலம் அவற்றை பின்னர் பார்த்து ரசிக்கலாம்.

எனினும் யூடியூப் போன்று பிரபலமான Vimeo, TED மற்றும் பேஸ்புக் வீடியோக்களை பின்னர் பார்வையிடுவதற்கு ஏற்றவாறு புக்மார்க் செய்து வைத்தும் பார்க்கலாம்.

இந்த வசதியை http://radbox.me/ எனும் தளம் தருகின்றது.

இத்தளத்தில் பதிவு செய்த பின்னர் வீடியோக்களை புக்மார்க் bookmarklet மூலமாகவும் அல்லது கைபேசி மூலம் பார்க்க விரும்புகிறீர்கள் எனில் வீடியோ யூ.ஆர்.எல் ஐ மின்னஞ்சல் செய்வதன் மூலமும் புக்மார்க் செய்து வைக்கலாம்.

Advertisements

About prasanthmani

i'm an engineering student

Discussion

Comments are closed.

%d bloggers like this: