//
you're reading...
cinemas special

CINEMA SPECIAL (HOT NEWS)!!!!!!!!!!!!!!!!


———————————————————————————————————————
விஜய்யை பின்னுக்குத்தள்ளிய விஜயகாந்த் மகன்!
———————————————————————————————————————
தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடித்து மெகா ஹிட்டான படம் பிருந்தாவனம்.
அப்படத்தை தமிழில் ரீமேக் செய்யவும் அதன் தமிழ் உரிமையை வாங்கவும் கோலிவுட்டின் முன்னணி கதாநாயகர்களிற்கு இடையே விஜய் உட்பட பெரும் போட்டி நடந்து வந்துள்ளது.

ஆனால் அவர்களைப் பின்னுக்குத்தள்ளி பிருந்தாவனம் படத்தின் தமிழ் உரிமையை வாங்கியுள்ளார் விஜயகாந்த். அவருக்கு அல்ல அவருடைய மகன் சண்முகபாண்டியனுக்காக. அந்தப்படத்தின் தயாரிப்பாளரும் விஜயகாந்த் கேட்டதும் எந்த நிபந்தனையோ பேரமோ இல்லாமல் உடனையே கொடுத்துவிட்டாராம்.

நடிகரும் கட்சித்தலைவருமான விஜயகாந்த் தனது இரண்டாவது மகனை எப்படியாவது ஹீரோ ஆக்குவதற்கு பல இயக்குனர்களிடமும் கதை கேட்டு வந்துள்ளார். ஆனால் எந்தக் கதையும் அவருக்கும் அவரது மகனுக்கும் புடிக்கவில்லையாம்.

எதுவும் கைகூடாததால் கடைசியில் பிருந்தாவனம் படத்தையே ரீமேக் செய்யும் முடிவுக்கு வந்துள்ளார். ஜூனியர் என்டிஆர் நடித்த பிருந்தாவனம். விஜயகாந்தின் சொந்த நிறுவனமான‌ கேப்டன் சினி கிரியேஷன்ஸ் இந்தப் படத்தை தமிழில் சண்முகபாண்டியனின் அறிமுகப் படமாக ரீமேக் செய்கிறது.

படத்தில் சண்முக பாண்டியனுக்கு இரண்டு நாயகிகளாம். முன்னணி இளம் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………
———————————————————————————————————————
அஜித்தா இப்படி: நம்ப முடியாமல் ரசிகர்கள்!
———————————————————————————————————————
சக்ரி டோலட்டி இயக்கத்தில் அஜித் குமர் நடித்து வெளிவர இருக்கும் படம் பில்லா 2. ஏற்கனவே பில்லா 2 திரைப்படத்தின் டிரைலருக்கு இணையத்தில் யாரும் எதிர்பாராத விதத்தில் ஏக போக வரவேற்பு கிடைத்துள்ளது. லட்சக்கணக்கில் பல பேரை கவர்ந்து சாதனை படைத்து வருகிறது படத்தின் டிரையிலர்.

டிரையிலர் வெளியாகி ஒரு சில மணி நேரங்களிலேயே 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்திருக்கிறார்கள். அதில் ரசிகர்களை மெய்மறக்கச் செய்தது அஜீத்தின் அசாதாரண சண்டைக்காட்சிகள்தான்.மிக உயரத்தில் பறக்கும் ஹெலிகாப்டரில், கயிறு கூட கட்டிக் கொள்ளாமல் திறந்த கதவருகே நின்றபடி அஜீத் போடும் சண்டைக் காட்சிதான் அது.

இந்த அனுபவம் பற்றி பில்லா 2 படத்தின் ஸ்டன்ட் மாஸ்டரான கீசா காம்பக்தீ கூறியதாவது:

நானும் எத்தனையோ படங்களுக்கு ஸ்டன்ட் அமைத்துள்ளேன். ஆனால் இந்த அளவு ரிஸ்க் எடுத்த முன்னணி நடிகரை பார்த்ததில்லை. மைனஸ் டிகிரி குளிரில், உயரப் பறக்கும் ஹெலிகாப்டரிலிருந்து குதித்த அஜீத், ஒரு கையால் ஹெலிகாப்டரின் கம்பியைப் பிடித்து தொங்கியபடி சண்டை போட்டது என்னை அதிர்ச்சியில் உறைய வைத்தது. சினிமா வரலாற்றிலேயே எந்த நடிகரும் எடுக்காத ரிஸ்க் இது என அவர் வியப்பு தெரிவித்துள்ளார்.
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………
———————————————————————————————————————
சந்தனத்தின் மோசடி – போலீசில் புகார்
———————————————————————————————————————

சென்னை உத்தண்டியை சேர்ந்தவர் ரவிக்கிஷன்(வயது 42). ஐஸ் கம்பெனி நடத்தி வரும் இவர், சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை நேற்று சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

எனது பெயரில் விருகம்பாக்கம் தாங்கல் உள்வாய் தெருவில் பங்களா வீடு ஒன்று இருந்தது. நடிகர் சந்தானம் என்னையும், என் தந்தையையும் மிரட்டி ரூ.2 கோடியே 25 லட்சம் மதிப்புள்ள சொத்தை ரூ.1 கோடியே 85 லட்சத்திற்கு பேசி 10-3-2010 அன்று கட்டாய பதிவு செய்து கொண்டார்.
ஆனால், பேசிய பணத்தை தராமல், ரூ.1 கோடியே 75 லட்சம் பணத்தை கொடுத்துவிட்டு, மீதியுள்ள ரூ.10 லட்சம் பணத்தை பிறகு தருவதாக நடிகர் சந்தானம் கூறினார்.
முதலில், ரூ.2 1/2 லட்சத்திற்கான செக்கை என்னிடம் கொடுத்தார். ஆனால், பணம் இல்லாமல் செக் திரும்பிவந்தது. மீதியுள்ள ரூ.7 1/2 லட்சம் பணத்தை கேட்டபோதும், பணத்தை தரமுடியாது என்று கூறிவிட்டார்.
தொடர்ந்து பணம் கேட்டு வந்ததற்கு, இதற்கு மேல் ஒன்றும் தர முடியாது என்றும், மீறி கேட்டால் கொலை செய்து விடுவேன் என்றும் நடிகர் சந்தானம் கூறினார்.
மேலும், வீட்டில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்களையும் தூக்கி சென்றுவிட்டார். எனவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………
———————————————————————————————————————
அசின் போ போ ..தமன்னா வா வா
———————————————————————————————————————
நடிகை தமன்னா திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பாகவே பிரபல மோடலாக இருந்தவர்,படங்களில் நடித்ததன் பின்னர் அவருடைய செல்வாக்கு பெருகியதை அடுத்து தமிழில் மிக முக்கிய நாயகி அந்தஸ்து அவருக்கு கிடைத்தது.அத்துடன் பல முக்கிய வியாபாரப் பொருட்களுக்கான சிறப்பு தூதுவராகவும் செயல்பட்டார்.
இப்போது பண்டா குளிர்பான நிறுவனத்தின் சிறப்பு தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார் நடிகை தமன்னா.பண்டா குளிர்பான விளம்பரத்தில் அவர் நடிப்பதுடன்,பண்டா குளிர்பானத்தை விரும்பி அருந்தும் அவரது இரசிகர்களையும் சந்திக்க உள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை தமன்னா,பண்டா குளிர்பான நிறுவனத்தின் தூதுவராக இருப்பது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.தென்னிந்தியா முழுவதும் நடிகை தமன்னாவிற்கு ஏராளமான இரசிகர்கள் இருக்கிறார்கள்.இதை கருத்தில் கொண்டே பண்டா நிறுவனம் தமது தூதுவராக நடிகை தமன்னாவை நியமித்துள்ளது.
ஆரம்பத்தில் பண்டா நிறுவன தூதுவராக நடிகை அசின் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………
———————————————————————————————————————
சிறந்த நடிகையானாலும் டீ. வியில் அனுமதி இல்லை: வித்யா பாலன்!
———————————————————————————————————————

மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை டர்டி பிக்சர் என்ற பெயரில் பாலிவுட்டில் வித்யா பலன் சில்க் வேடத்தில் நடிக்க உருவானது. ரிலீசாகி இமாலய வசூல் படைத்தது. வித்யா பாலனுக்கும் சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. அப்படத்தை வேறு மொழிகளில் ரிலீஸ் செய்யவும் ஏற்பாடுகள் நடக்கின்றன.

சில்க் திரையுலகில் பட்ட கஷ்டங்கள், ஏமாற்றங்கள் இதில் காட்சிபடுத்தப்பட்டு இருந்தது. இப்படம் ஆபாசமாக இருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பின. படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.இதையெல்லாம் மீறி டர்டி பிக்சர் படம் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது.

இதற்கிடையில் டர்டி பிக்சர் படத்தை டெலிவிஷனில் ஒளிபரப்ப சோனி டி.வி. தயாரானது. இதற்கான விளம்பரங்களும் செய்யப்பட்டன. பகலிலும் இரவு 8 மணிக்கும் இப்படம் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மத்திய அரசு திடீரென டி.வி.யில் டர்டி பிக்சர் படத்தை ஒளிபரப்ப தடை விதித்துள்ளது. படத்துக்கு தணிக்கை குழு யுஏ சான்றிதழ் அளித்துள்ளது. 59 இடங்களில் வெட்டியும் எறிந்தனர். எனவே பகலிலும், இரவு 8 மணிக்கும் படத்தை ஒளிபரப்பகூடாது என்று மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………
———————————————————————————————————————
இப்போதே ஆரம்பித்து விட்டார்கள்: பிரசன்னா ஸ்னேஹா!
———————————————————————————————————————

ஸ்னேகாவும் நடிகர் பிரசன்னாவும் காதலில் விழுந்து திருமணம் வரை வந்துவிட்டது அனைவருக்கும் தெரிந்ததே. மே 11-ந்தேதி திருமணம் நடக்கிறது.

இருவரும் அச்சமுண்டு அச்சமுண்டு என்ற திரைப்படத்தில் நடித்ததில் இருந்து காதலித்து வரிகிறார்கள். அத்தோடு இருவர் வீட்டிலும் காதலுக்கு பச்சைக்கொடி காட்டியதால் எந்தப் பிரைச்சினையும் இன்றி திருமண ஏற்பாட்டை தொடங்கி விட்டார்கள்.

முகூர்த்த ஆடைகள் எடுத்தல், நகைகள் வாங்குதல் போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.திருமண அழைப்பிதழ் கொடுக்கும் வேலைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

சினேகாவும், பிரசன்னாவும் சக நடிகர், நடிகைகள், உறவினர்கள், நண்பர்களுக்கு தனித்தனியாக சென்று அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்கள். கமல், அஜீத், விஜய் போன்றோருக்கு பிரசன்னா நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்து திருமணத்துக்கு அழைத்தார்.

இதுகுறித்து பிரசன்னா கூறியதாவது:-

திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க துவங்கி விட்டேன். கடந்த சில நாட்களாக நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினரை நேரில் சந்தித்து அழைப்பிதழ்கள் கொடுத்து வருகிறேன். இது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

இளைய தளபதி விஜய், தல அஜீத் போன்றோரை சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து திருமணத்துக்கு அழைத்தேன். அவர்கள் எனக்கு நேரம் ஒதுக்கி சந்தித்தது மிகுந்த சந்தோஷமாக இருந்தது. இருவரும் குடும்பத்தினருடன் என்னை சந்தித்தனர். வாழ்த்தும் சொன்னார்கள். சினேகாவிடம் டெலிபோனில் பேசியும் வாழ்த்து கூறினார்கள்.

இவ்வாறு பிரசன்னா கூறினார்.

கமலஹாசனை ஏற்கனவே சந்தித்து அழைப்பிதழ் கொடுத்துள்ளார். அடுத்து ரஜினிக்கும் அழைப்பிதழ் கொடுக்க காத்து இருக்கிறார்கள். ரஜினி தற்போது கேரளாவில் கோச்சடையான் படப்பிடிப்பில் இருக்கிறார். அவர் சென்னை திரும்பியதும் சந்திக்கின்றனர்.
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………
———————————————————————————————————————
ஐ பி எல்லுக்கு பிறகுதான்: அஜித் முடிவ!
———————————————————————————————————————

சக்ரி டோலட்டி இயக்கி அஜித், பார்வதி ஓமனகுட்டன் ஜோடியாக நடிக்கும் படம் பில்லா 2.இதுவரை முக்கல்வாசி படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. தற்போது இறுதி கட்ட பணிகள் நடக்கின்றன. சாதாரண ஒரு இலங்கை அகதி இளைஞனை சூழ்நிலைகள் எவ்வாறு பயங்கர டானாக‌ மாற்றுகிறது என்பதே கதை.

பில்லா படம் பட்டி தொட்டி எங்கும் வெற்றிகரமாக ஓடியதால் அதன் இரண்டாம் பாகத்துக்கும் பிரமாண்டமாக எதிர்க்கிறது தமிழ் திரை உலகமே. கடைசியாக ரிலீசான அஜித்தின் ‘மங்காத்தா’ திரைப்படமும் வசூலில் சாதனை படைத்தது. எனவே பில்லா 2 படத்தை அதிக விலை கொடுத்து வாங்கி வெளியிட பெரிய பட நிறுவனங்கள் போட்டி போட்டு கடைசியாக தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் ரூ. 28 கோடிக்கு படத்தை வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது..

படத்தின் விளம்பரத்துக்காக ரூ. 2 கோடி வரை செலவு செய்யப்படும் எனத் தெரிகிறது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் முடிந்ததும் ஜூன் மாதம் படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது.

மே 1-ந்தேதி பாடல் சி.டி.யை பிரமாண்ட விழா நடத்தி வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதில் ஆஜித் படத்தின் நாயகிகள் பார்வதி ஓமனக்குட்டன், புரூனா அப்துல்லா ஆகியோர் பங்கேற்கின்றனர். ஏற்னவே பில்லா 2 படத்தின் டிரெய்லர்கள் இணைய தளங்களில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றுள்ளது. தியேட்டர்களிலும் டிரைலர் திரையிடப்பட்டு வருகின்றன
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………
———————————————————————————————————————
தனுஷுடன் தண்ணிப் பார்ட்டியில் தமன்னா ? கொலைவெறி பாடலுக்கு வெறியாட்டம் (ஆதாரங்கள் இணைப்பு)
———————————————————————————————————————
தமன்னா பிறந்த நாள் விழாவில் நடந்த மதுவிருந்தில் பங்கேற்ற தனு், குடித்துவிட்டு பூனம் பாஜ்வாவுடன் ஒய் திஸ் கொலவெறி பாடலை பாடும் வீடியோ வெளியாகியுள்ளது. தனுஷ் எழுதிப் பாடி பெரிய ஹிட்டாகியுள்ள பாட்டு ஒய் திஸ் கொல வெறிடி. இந்தப் பாடல் ஹிட்டான அளவுக்கு, இசை ரசிகர்களிடம் திட்டும் வாங்கிக் கொண்டிருக்கிறது.

இன்னொரு பக்கம், பார்ட்டிகளில் இந்தப் பாட்டுக்கு ஏக மவுசு.சமீபத்தில் நடிகை தமன்னாவின் பிறந்தநாள் விழா பார்ட்டி நட்சத்திர ஓட்டலில் உள்ள பாரில் நடந்துள்ளது. இந்த விழாவில் மதுவருந்திக் கொண்டு, கொலவெறி பாட்டைப் பாடுகிறார் தனுஷ். அவருடன் அந்தப் பாட்டுக்கு, ஒரு பக்கம் முகம் முழுக்க கேக் க்ரீம் பூசிக் கொண்டு மதுக்கிண்ணத்தை ஏந்திபடி தமன்னாவும், இன்னொரு பக்கம் நடிகை பூனம் பாஜ்வாவும் ஆட்டம் போடுகிறார்கள்

தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணு குட்டி நான் ……
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………
———————————————————————————————————————
14-ந்தேதிக்குள் மயக்கம் என்ன படத்தை முடக்க ஐகோர்ட்டு உத்தரவு
———————————————————————————————————————
சென்னை சாலி கிராமத்தைச் சேர்ந்த ஷீலா சினி ஆர்ட்ஸ் பட நிறுவனம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது.

அதில் கூறி இருப்பதாவது:-

மனசு என்ற படத்தை நாங்கள் தயாரித்தோம். இந்த படத்தின் திருட்டு சி.டி. படம் ரிலீசாவதற்கு முன்பே வெளியானதால் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஜெமினி பிக்சர்ஸ் சர்கியூட் நிறுவனத்திடம் ரூ.92 லட்சம் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தோம். இந்த வழக்கில் ரூ.70 லட்சம் நஷடஈடு கொடுக்கும்படி ஜெமினி பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் இதுவரை நஷ்டஈடு கொடுக்கவில்லை.

இந்தநிலையில், தனுஷ் நடித்த மயக்கம் என்ன படத்தை ஜெமினி பிக்சர்ஸ் சர்கியூட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த படத்தை முடக்க உத்தரவிடவேண்டும். மேலும், நஷ்டஈட்டை வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டின், மாஸ்டர் கோர்ட்டு நீதிபதி அருள் விசாரித்து வருகிற 14-ந்தேதிக்குள் மயக்கம் என்ன திரைப்படத்தை முடக்க உத்தரவிட்டார். இந்த வழக்கில் மனுதாரர் சார்பில் வக்கீல் சிவராமன் ஆஜரானார்.
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………
———————————————————————————————————————
கணவரின் அனுமதியோடுதான் ஆபாச காட்சிகளில் நடிக்கிறேன் – ஸ்வேதா மேனன் (குடும்பம் விளங்கீடும்)
———————————————————————————————————————
நான் அவன் இல்லை, அரவான் ஆகிய படங்களில் நடித்தவர் சுவேதா மேனன். ஏராளமான மலையாள படங்களில் நடித்திருக்கிறார். ரதிநிர்வேதம் என்ற படத்தில் இவர் கவர்ச்சியாக நடித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.சினிமா என்பது ஒரு தொழில். கேரக்டருக்கு கவர்ச்சி தேவைப்பட்டால் கவர்ச்சியாக நடிப்பதிலும் தவறில்லை என்று நடிகை சுவேதா மேனன் கூறினார்.

இதுதவிர பல்வேறு விளம்பர படங்களிலும் கவர்ச்சியாக நடித்திருக்கிறார். இந்நிலையில், ஸ்ரீனிவாச மேனன் என்பவரை இவர் கடந்த ஜூனில் திருமணம் செய்துகொண்டார்.

சுவேதா மேனன் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை செய்வதில் பெண்கள் கைதேர்ந்தவர்கள். ஒரே நேரத்தில் நடிப்பு, குடும்பம் இரண்டையும் என்னால் கவனிக்க முடிகிறது.

திருமணத்துக்கு பிறகு எவ்வளவு நேரம் குடும்பத்துக்காக செலவிடுகிறேன் என்பதைவிட, அவர்களுக்கு உபயோகமாக எவ்வளவு நேரம் செலவிடுகிறேன் என்பதைத்தான் முக்கியமாக பார்க்கிறேன்.
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………
———————————————————————————————————————
விஜய் புண்ணியத்தால் பிரிந்தவர் கூடினர்.
———————————————————————————————————————

சேர்ந்தவர் பிரிந்தால் ஏசிக்கொள்வதும், பிரிந்தவர் சேர்ந்தால் ஈஷிக்கொள்வதும் பிரண்ட்ஷிப் ஃபிலாஸபி. இப்படி பிரிந்த பின்பும் ஒருவரையொருவர் ஏசிக் கொள்ளாமல் இருந்தார்கள் கவுதம் மேனனும், அவரது விண்ணை தாண்டி வருவாயா ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவும்.

இப்படத்தின் வெற்றிக்கு பெரும் காரணமாக இருந்தவர் இந்த மனோஜும்தான். ஆனால் இந்த கூட்டணி அடுத்தடுத்த படத்தில் இணைய முடியாதளவுக்கு விழுந்தது திருஷ்டி. டைரக்டர் ஷங்கர் தனது நண்பன் படத்தில் ஒளிப்பதிவு செய்ய அழைத்ததும் கவுதம் மேனனின் பேச்சையும் கேட்காமல் அங்கு போனார் இவர்.

இதன்பின் எந்த சந்தர்பத்திலும் மனோஜை தொடர்பு கொள்ளாமலிருந்தார் கவுதம். ஆனால் எல்லா வைராக்கியங்களையும் பொடி பொடியாக்குகிற அளவுக்கு ஒரு பிரச்சனை. கவுதம் இயக்கத்தில் விஜய் நடிக்கும் யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தில் யாரை ஒளிப்பதிவாளராக நியமிப்பது என்ற பேச்சு எழுந்தது.

ஏன், விண்ணை தாண்டி வருவாயா பட ஒளிப்பதிவாளர் மனோஜ் இருந்தால் நன்றாக இருக்குமே? என்றாராம் விஜய். அவரே சொல்லிவிட்ட பிறகு, தனது ஜென்ம பகையை பற்றி பேசிக் கொண்டிருந்தால் ஆகுமா? மனோஜுக்கே போன் அடித்தாராம் கவுதம்.

விஜய் புண்ணியத்தால் இப்போது பிரிந்தவர் கூடினர்.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………
———————————————————————————————————————
ஓன்று கிடைச்சாலே கொஞ்சம் ஓவர் !! இங்க இவருக்கு இரண்டு கிடைச்சிருக்கு
———————————————————————————————————————

விக்ரம் தீக்ஷா நடிப்பில் சுசிந்திரன் இயக்கத்தில், யுவன் இசையில், யுகபாரதி வரிகளில் ராஜ பாட்டை படத்தின் பாடல்களை பற்றிய சிறு தொகுப்பு இங்கே,

* பொடி பையன் போலவே மனம் இன்று துள்ளுதே – இந்த பாடலை ஹரிசரண் பாடியுள்ளார், சென்னை பீச்சில் படமாக்கி உள்ளனர்

* லட்டு லட்டு ரெண்டு லட்டு சேர்ந்து கிடைச்சா லக்கு லக்கு -இந்த பாடல் இத்தாலியில் படமாக்கி உள்ளனர் ,ஸ்ரேயா ,ரீமாவுடன் விக்ரம் அதிரடி ஆட்டம் போட்டுள்ளார், இந்த பாடலை விக்ரம், சுசித்ரா, பிரியதர்ஷினி பாடி உள்ளனர் ,

* வில்லாதி வில்லன்கள் எல்லாரும் என்னை விலை பேச வந்தார்கள் -இந்த பாடலை 1985 களில் உள்ள கிளப் மாடலை, ஏவிஎம் இல் செட் போட்டு படமாக்கி உள்ளனர் , தெலுகு நடிகை சலோனி விக்ரமுடன் ஆட்டம் போட்டு அசத்தி உள்ளாராம் ,இந்த பாடலில் மட்டும் விக்ரம் 7 கெட்டப்புகளில் வராராம், மனோ, மாலதி பாடி உள்ளனர்,

* பனியே பனிபூவே மனம் ஏனோ பறக்குதே தலை கால் புரியாமல் உன்னை பார்த்து சாமி ஆடுதே -இந்த பாடல் இத்தாலியில் படமாக்கி வந்துள்ளனர். ஜாவத் அலி .ரேணு பாடி உள்ளனர், விக்ரம் தீக்ஷா டூயட் பாட்டு இது, நான் மகான் அல்ல படத்தில் இடம் பெற்ற இறகை போலே என்ற பாடல் வரிசையில் பனித்துளி பாட்டு இருக்கும் என்கிறார் இயக்குனர், ராஜ பாட்டை படம் நில அபகரிப்பு பிரச்னையை சொல்ல போகும் படமாகவும் ,தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையே உள்ள உறவையும் உணர்வையும் எல்லாம் கலந்த கலவையாக்கி கொடுக்க முயற்சி செய்துள்ளார் சுசி , டிசம்பர் 23ம் தேதி படம் திரைக்கு வர உள்ளது,
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………
———————————————————————————————————————
விறுவிறுப்பான திருப்பத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் எந்திரன் கதைத்திருட்டு வழக்கு!
———————————————————————————————————————

எந்திரன் கதைத் திருட்டு வழக்கு விறுவிறுப்பான திருப்பத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அது என்ன? முதலில் வழக்கின் விபரத்தைப் பார்ப்போம்.

நக்கீரன் குழும வெளியீடான இனிய உதயம் இலக்கிய பத்திரிகையில் 96ல் வெளியான ஜூகிபா என்கிற ரொபாட் தொடர்பான தனது கதையை அப்பட்டமாகத் திருடி ரஜினியின் எந்திரன் படம் எடுக்கப்பட்டிருக்கிறது என புகார்க் குரல் கொடுத்த எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஆரூர் தமிழ்நாடன், கடந்த ஆண்டு தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சென்னை மாநகர கமிஷனர் ராஜேந்திரனிடம் எந்திரன் படத்தயாரிப்பாளர் சன் டி.வி.கலாநிதி மாறன் மீதும் படத்தின் இயக்குநர் சங்கர் மீதும் குற்றவியல் புகாரைக் கொடுத்தார்.

ஜூகிபா கதையையும் எந்திரன் படத்தையும் ஒப்பிட்டுப்பார்த்த காவல்துறை அதிகாரிகள், புகாரில் நம்பகத்தன்மை இருக்கிறது என்று தெரிவித்ததோடு ஆளும்கட்சியின் செல்வாக்குள்ள கலாநிதி மாறன் பெயரை மட்டும் புகாரில் இருந்து நீக்கிவிடுங்கள் என்று வலியுறுத்தினர். இதை தமிழ்நாடனும் அவரது வழக்கறிஞர்களும் ஏற்றுக்கொள்ளாததால் புகாரை ஏற்கமறுத்துவிட்டது அன்றைய காவல்துறை.

இதைத் தொடர்ந்து கதைத் திருட்டு மூலம் மோசடி செய்ததாகவும் இந்திய பதிப்புரிமை சட்டத்திற்கு முரணாக நடந்துகொண்டதாகவும் கலாநிதி மாறன், சங்கர் ஆகியோர் மீது எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததோடு, இவர்களிடம் நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கையும் தமிழ்நாடன் தரப்பு தொடர்ந்தது.

தமிழ்நாடன் சார்பாக சீனியர் வழக்கறிஞர் பி.டி.பெருமாள் மற்றும் எட்விக், சிவகுமார் ஆகியோர் ஆஜரானார்கள். சாட்சிகளை விசாரித்து, ஆவணங்களை பரிசீலனை செய்த பிறகு எழும்பூர் 13வது நீதிமன்றம் கலாநிதி மாறனையும் சங்கரையும் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி அதிரடியாக சம்மனைப் பிறப்பித்தது.

இதைத் தொடர்ந்து அவசர அவசரமாக சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகிய கலாநிதி மாறனும் சங்கரும், கோர்ட்டில் ஆஜராகாமல் இருக்க இடைக்காலத் தடையை வாங்கினர்.

இந்த நிலையில் இவர்களது தடையை நீக்கும்படி தமிழ்நாடனின் வழக்கறிஞர்களான பி.டி.பெருமாள், எட்விக், சிவகுமார் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். கலாநிதி மாறன் சார்பாக மூத்த வழக்கறிஞரும் முன்னாள் அட்வகேட் ஜெனரலுமான பி.எஸ்.ராமன் ஆஜரானார். வழக்கை நீதியரசர் ஆறுமுகசாமி விசாரித்தார்.

அப்போது கலாநிதி தரப்பு, கால அவகாசம் கேட்க, நீதியரசரோ இதற்கு மேல் கால நீட்டிப்பு தரமுடியாது என்றபடி ஒரு வார காலம் மட்டும் அவகாசம் கொடுத்து வழக்கை டிசம்பர் 9ந் தேதிக்கு ஒத்திவைத்திருக்கிறார். அன்று விசாரணை தொடங்குகிறது.

வழக்கு எப்படி போகும் என்பதைத் தீர்மானிக்கும் நாள் அது என்பதால், இருதரப்பும் அந்த நாளை பரபரப்பாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.

இணையதள நேயர்களான நாமும் பலத்த எதிர்பார்ப்போடு காத்திருக்கிறோம்
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………
———————————————————————————————————————
காதல் இருப்பது உண்மைதான். ஆனால் கல்யாணம் ? சினேகாவின் சிறுபிள்ளைத்தனமான பேச்சு
———————————————————————————————————————
சினேகாவும், தானும் காதலிப்பதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்ய விருப்பதாகவும் பிரசன்னா தெ‌ரிவித்திருந்தார். ஆனால் இதுகுறித்து சினேகா எதுவும் பேசாமல் இருந்தார். சினேகா தனது திருமணம் குறித்து முதல் முறையாக கருத்து தெ‌ரிவித்துள்ளார். தற்போது தனது காதலைப் பற்றி கூறியிருக்கும் சினேகா, பிரசன்னாவுடன் காதல் இருப்பது உண்மைதான். ஆனால் கல்யாணம் இப்போதைக்கில்லை, காலதாமதமாகும். என்று கூறியிருக்கிறார்.

இந்த ஜோடியின் காதலை முதலில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது நடிகர் பிரசன்னாதான். இதுகுறித்து இதுவரை எதுவும் பேசாமல் இருந்த சினேகாவிடம், சமீபத்தில் இருவருக்கும் திருமணம் எப்போது என்று கேட்டபோது, உடனடியாக திருமணம் செய்து கொள்ள மாட்டோம். கொஞ்சம் காலதாமதமாகும். என்று கூறினார்.

தற்போது ரஜினியின் கோச்சடையான் படத்தில் நடிக்க சினேகா ஒப்பந்தமாகியிருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தவிர வேறு சில பட வாய்ப்புகளும் அவருக்கு கிடைத்திருப்பதால், இப்போதைக்கு திருமணம் குறித்து யோசிக்கும் நிலையில் சினேகா இல்லையாம்.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………
———————————————————————————————————————
அடர்ந்த ஆளில்லா காட்டுக்குள் அனுஷ்காவும் கார்த்தியும் !!!
———————————————————————————————————————

கார்த்தி, அனுஷ்கா, சந்தானம் நடிக்கும் படத்தை சுராஜ் இயக்கி வருகிறார். இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தின் ஷூட்டிங், சாலக்குடி அருகே அடர்ந்த காட்டுக்குள், கடந்த 20 நாட்களாக நடந்தது. பிரமாண்டமான வீடு செட்

அமைத்து ஷூட்டிங் நடந்தது. இதற்காக சிறப்பு அனுமதி வாங்கி செட் அமைத்திருந்தனர். படப்பிடிப்பு முடிந்த பிறகு இரவு நேரங்களில் யானைகள், செட் அருகே வந்து தொந்தரவு செய்ததால் படப்பிடிப்பு குழுவினருக்கு பயம் ஏற்பட்டது. செட்டை

உடைத்துவிட்டால் பல லட்சம் இழப்பு ஏற்படும் என்பதால் இரவு நேரத்தில் செட்டை பாதுகாக்க, 20 பேர் நியமிக்கப்பட்டனர். இதுபற்றி இயக்குனர் சுராஜிடம் கேட்டபோது, அடர்ந்த காடு என்பதால் யானைகள் அந்த வழியாகத்தான் தண்ணீர் குடிக்க கீழே இறங்கும். இதனால் செட்டைப் பாதுகாக்க ஆட்களை நியமித்தோம். இந்தப் படம் காமெடி ப்ளஸ் ஆக்ஷன் அதிரடி படம்.

எல்லாரும் ரசிக்கும் படியாக இருக்கும். முதல் ஷெட்யூல் முடிந்துவிட்டது. அடுத்த ஷெட்யூல் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது என்றார்.
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………
———————————————————————————————————————
ஒரு வருட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் வடிவேலு – குஷியில் ரசிகர்கள்!
———————————————————————————————————————

கிட்டத்தட்ட 11 மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரையில் வடிவேலுவின் வெடி நகைச்சுவையை தமிழ் ரசிகர்கள் அனுபவிக்கப் போகிறார்கள்.

பிரசாந்த் நடிப்பில் தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள மம்பட்டியான் படத்தில் வடிவேலு மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

நீண்ட காலம் அதிமுக அனுதாபியாக இருந்த போதும், பின்னர் கலைஞர் பக்கம் வந்த பிறகும், இருக்கிற இடம் எதுவாக இருந்தாலும் மிக விசுவாசமானவர் என்ற பெயர் தியாகராஜனுக்கு உண்டு.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வடிவேலுவை தங்கள் படங்களில் நடிக்க வைக்கக் கூட எந்த இயக்குநரும் முன்வராத நிலையில், அவரை வைத்து படம் எடுக்கக் கூடாது என சில அதிகாரமிக்கவர்கள் வாய்மொழி உத்தரவு போட்டிருந்தும்கூட, அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் வடிவேலுவை தான் இயக்கும் மம்பட்டியான் படத்தில் தொடர வைத்தார் (திமுக ஆட்சியிலேயே தொடங்கப்பட்ட படம் இது).

இப்போது வரும் டிசம்பர் 16-ம் தேதி மம்பட்டியான் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது.

இந்தப் படத்தில் பிரசாந்த் உடன் படம் முழுக்க நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடத்தில் வருகிறார் வடிவேலு. ஒரிஜினல் படமான மலையூர் மம்பட்டியானில் கவுண்டமணி செய்த மைனர் வேடம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரசாந்தும் வடிவேலும் இணைந்து நடித்த வின்னர் படத்தின் நகைச்சுவைக் காட்சிகள் இன்றும் பார்வையாளர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

வடிவேலுவுடன் நடித்தது குறித்து பிரசாந்த் கூறுகையில், மம்பட்டியான்ல படம் முழுக்க என்னோடு வடிவேலு வருவார். இத்தனை நாள் இடைவேளைக்கும் சேர்த்து அன்லிமிடெட் ஃபுல் மீல்ஸ் விருந்து வெச்சிருக்கார் மனுஷன். வாய்விட்டுப் பாராட்டுற அளவுக்கு மிரட்டி எடுத்திருக்கார் என்றார்.
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………
———————————————————————————————————————
என்ன ஒரு நெருக்கம் ! தனக்கு சொந்தமானவரை அனுஷ்காவுக்கும் கொடுத்திருக்கும் அமலா!
———————————————————————————————————————

இவரையே நீயும் யூஸ் பண்ணிக்கோ ? அனுஷ்காவும் அமலாபாலும் அத்தனை திக் பிரண்ட்ஸ் என்பதை நாடறிகிறதோஇல்லையோ, கோலிவுட்டும், டோலிவுட்டும், மல்லுவுட்டும் நன்கு அறியும். அவங்க எவ்ளோ பெரிய ஆர்ட்டிஸ்ட்? ஆனால் துளி பந்தா இல்லை என்று அடிக்கடி அனுஷ்காவை பாராட்டி வந்த அமலா, இப்போதும் இன்னும் நெருக்கமாகியிருக்கிறார் அவருடன். எப்படியென்றால் அவர் சொல்லும் மேனேஜரையே தனக்கு மேனேஜராக்கிக் கொள்கிற அளவுக்கு.

அனுஷ்காவுக்கு ரகு என்பவர்தான் மேனேஜர். அவரது நல்லது கெட்டது எல்லாவற்றிலும் தோள் கொடுக்கிற இந்த நபருக்கு மும்மொழியிலும் நல்ல செல்வாக்கு. தேதிகளை பிரித்துக் கொடுப்பதில் வேறெந்த சூது வாதும் வைத்துக் கொள்வதில்லையாம் இவர். இவரையே நீயும் யூஸ் பண்ணிக்கோ என்று அமலாவிடம் அனுஷ்கா சொல்ல, அன்றிலிருந்தே தனது சங்கப் பலகையில் ரகுவை உட்கார வைத்துவிட்டார் அமலா.

இப்படியெல்லாம் செய்தால் பழைய மேனேஜர் காதுகளில் புகைதானே வரும்? அப்படி அடிக்கடி வர ஆரம்பித்திருப்பதால்தான் அமலாவை பற்றிய கிசுகிசு முன்னிலும் அதிகமாக வர ஆரம்பித்திருக்கிறதாம். மூன்றெழுத்து டைரக்டரை லவ் பண்ணும் அமலா, அவருடன் சேர்ந்து செனடாப் சாலையில் இடம் வாங்கி வீடு கட்டிக் கொண்டிருக்கிறார் என்ற தகவலையும் அவிழ்த்துவிடுகிறாராம் இந்த முன்னாள் மேனேஜர். இன்னும் என்னவெல்லாம் தகவல் வருமோ என்று அஞ்சிக் கொண்டிருக்கிறார் அமலா.
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………
———————————————————————————————————————
அதிமுகவில் வடிவேலு! கடந்த வார பரபரப்பு செய்தி – இவ்வார உண்மை நிலை ?
———————————————————————————————————————

அதிமுகவில் வடிவேலு! கடந்த வார பரபரப்பு செய்தி இதுதான். வடிவேலு அதிமுகவில் சேர்ந்துவிட்டால், சிங்கமுத்து என்னாவார் என்ற கேள்வி மனதில் எழுமல்லவா? நமக்கும் அப்படி ஒரு கேள்வி எழ, சிங்கமுத்துவுக்கே போன் அடித்தோம்.

அதுவா…? என்று அட்டகாசமாக சிரிக்க ஆரம்பித்தவர், வாங்க நேர்ல பேசலாம் என்றார். அவரது பதில்களில் ஒரு ஆக்ஷன் சினிமாவை பார்த்த மாதிரி அத்தனை விஷயங்கள் அடங்கியிருந்தன…

வடிவேலு அதிமுக வில் சேரப்போகிறாராமே? நானும் அந்த விஷயத்தை பத்திரிகைகளில் பார்த்தேன். அதில் எந்தளவுக்கு உண்மைஇருக்கிறது என்று எனக்கு தெரியாது. ஆனால் ஒரு நல்ல ஆட்சி வரக்கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு அதற்காக அரும்பாடு பட்டவர் வடிவேலு. கலைஞருடைய திட்டங்களை காப்பியடித்துதான் தேர்தல் அறிக்கையை அம்மா தயாரித்தார்கள் என்று சொன்னவர்தான் இவர். எல்லாரும் திமுகவுக்குதான் வாக்களிக்க வேண்டும் என்று இவர் வியர்வை வடிய கூக்குரலிட, அதை அழகிரி துடைக்க… அப்படியெல்லாம் அதிமுகவுக்கு எதிராக வியர்வை சிந்தியவர்தான் வடிவேலு. திமுக ஆட்சிக்கு வந்தால் அவர்தான் போலீஸ் மந்திரி என்றெல்லாம் சொல்லிக் கொண்டு மிதப்பில் திரிந்தவர் அவர். இப்போது எங்கள் கட்சிக்கு வரப்போகிறாராமா?

அவர்தான் ஜெயலலிதாவை திட்டவில்லை என்று கூறியிருக்கிறாரே?

அம்மாவை திட்டினாரா, திட்டவில்லையா என்று இவர் சொல்ல வேண்டாம். அதற்கெல்லாம் ஆதாரமாக அம்மாவிடம் இருக்கிறது கேசட். அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று சொல்வதே அம்மாவை திட்டுவது போலதானே? அம்மா வேறு. அதிமுக வேறா? வடிவேலு தேர்தலில் ஓட்டு போட்டுவிட்டு வெளியே வந்து அதிமுக கூடாரம் காலியாகிவிட்டது என்று சொல்லிக் கொண்டே ஆட்டம் போட்டதை மக்கள் மறக்கவில்லை.

அதிமுக வர வேண்டும் என்று வாக்காளர்கள் நினைத்தது மக்களுடைய ஆட்சி வர வேண்டும் என்பதற்காகதான். எனக்காகவோ, வடிவேலுவுக்காகவோ யாரும் வாக்களிக்க மாட்டார்கள். அத்தனை ஓட்டுகளும் அம்மாவுடைய முகத்திற்காக விழுந்தவைதான். இவருக்கு வாக்கு வங்கி இருப்பதாக நினைத்துக் கொண்டு அவர் போட்ட ஆட்டத்தை யாராவது மறக்க முடியுமா? அப்படி வாக்கு வங்கி என்று ஒன்று இருந்திருந்தால், திமுக ஏன் இவ்வளவு கேவலமாக தோற்க வேண்டும்? வடிவேலு அதிமுக வுக்கு வருவதால் எனக்கு ஒன்றும் பிரச்சனையில்லை. பாதிப்பும் இல்லை. அவரை சேர்ப்பதும், சேர்க்காமலிருப்பதும் மக்கள் மத்தியில் மாபெரும் செல்வாக்குள்ள எங்கள் அம்மா முடிவு செய்ய வேண்டியது.

வடிவேலு இப்போது படங்களில் நடிப்பதில்லை. நிஜமாகவே வாய்ப்புகள் வரவில்லையா? அல்லது யாராவது அதை தடுக்கிறார்களா? யாரும் தடுக்கவில்லை. அவரை யாரும் ஒப்பந்தம் செய்ய போவதில்லை என்பதுதான் உண்மை. மக்களுக்கே அவரை பிடிக்காமல் போய்விட்ட பிறகு, யார் அவரை வைத்து படம் எடுப்பார்கள்?

சரி, அதையெல்லாம் விடுங்கள். உங்கள் நிலத்தகராறு இப்போது எந்த அளவில் இருக்கிறது? அதைப்பற்றி பேசினால் நிறைய பேச வேண்டும். ஆனால் என்னை வீடு புகுந்து மிரட்டியவர்கள், என் கண்ணெதிரிலேயே என் மனைவியின் செயினை பிடுங்கி சென்றவர்கள் எல்லாருமே இன்று எந்த ஜெயிலில் களி தின்கிறார்கள் என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும். அதுமட்டுமல்ல, வடிவேலுவுக்கு ஆதரவாக என்னை மிரட்டிய ஒரு நடிகரை கூட ஆண்டவன் அழைத்துக் கொண்டான். இதிலிருந்தே புரிந்து கொள்ளுங்கள், ஆண்டவனும் நியாயமும் யார் பக்கம் என்று.

நில விஷயத்தில் அந்த இடத்துக்கு சொந்தக்காரரான பிரபு என்பவரே என் மீது எந்த தவறும் இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் வடிவேலு தனது சந்தேக புத்தியால் என்னிடம் இருந்து ஏழு கோடி ரூபாயை வாங்கி கொடுக்க வேண்டும் என்று அப்போதைய கவுன்சிலர் தனசேகரன், ஜே.கே.ரித்தீஷ், ஆதம்பாவா, மேனேஜர் சங்கர் ஆகியோரை அனுப்பி என்னை மிரட்டினார். இந்த பணத்தை அவர்கள் பங்கு போட திட்டமிட்டதுதான் வேடிக்கை. இதில் ஒரு கோடியை துணை முதல்வருக்கு தரணும் என்று கூட பேசிக் கொண்டார்கள் அவர்கள். இவர்கள் எந்தெந்த தேதியில் வந்து என்னை மிரட்டினார்கள் என்பதையெல்லாம் டைரியில் குறித்து வைத்திருக்கிறேன் நான்.

அப்போது நடந்த திமுக ஆட்சியில் எனக்கு நியாயம் கிடைக்காது என்று தெரிந்திருந்தும் நான் போலீசுக்கு போனேன். அப்போது விருகம்பாக்கம் ஸ்டேஷனில் இருந்த எஸ்.ஐ அந்த புகாரை கிழித்துப் போட்டார். அதே திமுக ஆட்சியிலேயே அந்த எஸ்.ஐ. வேறொரு விஷயத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டு இப்போதும் வீட்டில்தான் இருக்கிறார்.

கவுன்சிலர் தனசேகரன் அவரது வீட்டுக்கே வரச்சொல்லி மிரட்டினார். பாடியை துண்டு துண்டாக வெட்டி போட்டுவிடுவேன் என்று அவர் சொன்னபோது கூட, ஏண்ணே அதை தனித்தனியா போடுறீங்க. ஒரே இடத்துல போட்டுட்டா வசதியா போயிடும்ல என்று ஜோக்கடித்தேன் நான். ஏனென்றால் தவறு செய்திருந்தால் தானே நான் அஞ்சி நடுங்கணும்? எங்கிட்ட இருந்து எதுவும் பெயராமல் போனதால் கடைசியாக என் மனைவி கழுத்திலிருந்த 12 பவுன் சங்கிலியை கழற்றி தரச்சொல்லி வாங்கிட்டு போனவங்க அவங்க. இந்த நில விஷயத்தில் என்னிடமிருந்து எதுவும் பெயரவில்லை என்றவுடன் கலைஞரை நேரில் சந்தித்த வடிவேலு, சிங்கமுத்து அதிமுக காரன் என்று போட்டுக் கொடுத்துதான் என்னை கைது பண்ணவே வைத்தார்.

ஒருவேளை வடிவேலு அதிமுகவில் இணைந்தால் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்?

நான் 1972 லிருந்து அதிமுகவில் இருக்கேன். 1989 லிருந்து அம்மாவுக்கும் கட்சிக்கும் விசுவாசியா இருக்கேன். இப்ப கேட்டால் கூட உறுப்பினர் கார்டை காட்டுவேன். நான் பிரச்சாரத்துக்கு கிளம்புறேன்னு தெரிஞ்சதும், பொட்டு சுரேஷ் தன் ஆட்களோட என் வீட்டுக்கே வந்தாரு. அழகிரி ஒரு கோடி ரூபா உங்களுக்கு தர சொல்லியிருக்காரு. நாளைக்கு அதிமுகவுக்கு ஆதரவா நீங்க பிரச்சாரத்துக்கு கிளம்ப கூடாதுன்னு சொன்னார். இந்த பணத்தை வாங்கினால் தனி மனிதனா எனக்கு நல்லது. ஆனால் அதிமுக ஆட்சிக்கு வர்றதுதான் நாட்டுக்கு நல்லதுன்னு சொல்லி அந்த பணத்தை வாங்க மறுத்து அனுப்பி வைச்சேன். அதற்கு சாட்சி கூட இருக்கிறது. நான் எப்பவும் என் கட்சிக்குதான் கட்டுப்பட்டவன்.

கட்சியில் ஏதாவது பதவி கிடைக்கும்னு எதிர்பார்ப்பு இருக்கிறதா…?

அம்மாவுடைய உண்மையான விசுவாசி என்பதை விட சிறந்த பதவி வேறு இல்லைன்னு நினைக்கிறேன். வடிவேலு விஷயத்தில் இன்னும் நிறைய உண்மைகள் இருக்கு. சீக்கிரம் அது பற்றியும் பேசுவேன் என்று கூறிவிட்டு படப்பிடிப்புக்கு அவசரம் அவசரமாக கிளம்பினார் சிங்கமுத்து.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………
———————————————————————————————————————
முல்லை பெரியாறு விவகாரம் மௌனம் கலைப்பாரா விஜய் ?
———————————————————————————————————————

இந்தியாவையே தமிழ்நாட்டின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருப்பது, முல்லை பெரியாறு பிரச்சினை. இந்த பிரச்சினைக்கு கேரளாவில் இருக்கும் அனைத்து அமைப்புகளும் கேரள அரசிற்கு ஆதரவளித்து வருகின்றன.

முக்கியமாக மளையாள திரையுலகம் கேரள அரசிற்கு பெரும் ஆதரவளித்து வருகிறது.பெரிய ஜாம்பாவான்களிலிருந்து புதிதாக அறிமுகமாகியிருக்கும் திரைக்கலைஞர்கள் வரை கேரள அரசின் பின் நின்று குரல் கொடுக்கின்றனர்.

ஆனால் தமிழ் திரையுலகில் இருக்கும் ஜாம்பாவான்களும், முக்கிய நடிகர்களும் மௌனம் சாதித்து வருகின்றனர். இதற்கு முன் ஏற்பட்ட காவிரி பிரச்சினையின் போது தமிழ் திரைக்கலைஞர்கள் ஆதரவு அளித்தது தமிழக அரசிற்கு பக்கபலமாக இருந்தது. தமிழ் நடிகர்களில் விஜய்க்கு தான் கேரளாவில் அதிக ரசிகர் பட்டாளம் உள்ளது.

விஜய்யின் மேல் கொண்ட அன்பினால் அவருக்கு கேரளாவில் சிலை ஒன்றை நிறுவி தங்கள் பாசத்தை நிரூபித்தனர் கேரள ரசிகர்கள். காவிரி பிரச்சினையின் போது விஜய் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு தன் எதிர்ப்பை காட்டினார்.

கேரளாவில், தீபாவளிக்கு வெளியான மளையாளப் படங்களை விட, விஜய் நடித்து வெளியான வேலாயுதம் படத்திற்கே மாபெரும் வறவேற்பு காணப்பட்டது.சமுதாயத்தில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் அனைவரும் வாய் திறக்காமல் இருந்தால், இந்த பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பவர்களும் சில நாட்களில் அடங்கி விடுவார்கள் அல்லது அடக்கப்பட்டுவிடுவார்கள்.

விஜய் போன்ற திரையுலக முக்கிய நட்சத்திரங்களும், முக்கிய பிரமுகர்களும் தங்கள் ஆதரவை தெரிவிப்பார்களா? இல்லை அவர்களது மௌனம் தொடருமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது?????????????????
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………
———————————————————————————————————————
எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்! திரிஷாவின் கணவருக்கான நிபந்தனைகள்
———————————————————————————————————————

எனக்கு நாய் வளர்ப்பது பிடிக்கும் எனக்கு வரப்போகிறவருக்கும் நாயை பிடிக்க வேண்டும் என்று நடிகை த்ரிஷா கூறியிருக்கிறார். திருமண வயதை கடந்து விட்ட நிலையிலும் பிஸியான நடிகையாக கோலிவுட், டோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை த்ரிஷா ஒரு நாய் பிரியை என்பது எல்லோருக்குமே தெரியும்.

திருமணம் பற்றி அம்மணி அளித்துள்ள பேட்டியில், தனது நாய் பாசத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறுகையில், பொதுவாகவே நான் நாய் பிரியை. எனக்கு வரப்போகிற கணவர் என் பரந்த உள்ளம் கொண்டவராக இருக்கணும். வீட்டில் நாய் வளர்க்கக் கூடாது என்று அவர் கூறிவிட்டால் என் நிலைமை என்னாவது? அதனால் எவ்வித அவசரமும் கொள்ளாமல் நிதானமாக தேடுகிறேன் அந்த பொறுமைசாலி கணவரை… என்று கூறியிருக்கிறார்.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………
———————————————————————————————————————
அடுத்த படத்திற்காக 8 பேக் உடம்புக்கு தயாராகும் விஜய் ?
———————————————————————————————————————
விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் படம் எப்போது துவங்குகிறது, யார் தயாரிப்பாளர் என்பது குறித்து பல்வேறு கேள்விகள் நிலவி வந்தன.

தயாரிப்பாளர் தாணு தான் என்று முதலில் முடிவானது. காஜல் அகர்வால் தான் நாயகி என்று கூறி வந்தாலும் இதுவரை முறையான அறிவிப்பு எதுவும் வெளிவர வில்லை.

இந்நிலையில் இப்படத்திற்கு துப்பாக்கி என்று தலைப்பு வைத்து இருக்கிறார்கள். போக்கிரி படத்தினை அடுத்து இப்படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்க இருக்கிறார் விஜய் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன். போலீஸ் வேடத்தில் நடிக்க இருப்பதால் அதற்காக ஜிம்மிற்கு சென்று தனது உடம்பை ஏற்றி கொண்டிருக்கிறார் என்றும் செய்திகள் வலம் வந்தன.

இத்தகவலை விஜய் மறுத்துள்ளார். எந்த கதாபாத்திரத்திற்காகவும் ஜிம்மிற்கு போய் உடலை முறுக்கேற்றிக் கொள்வது இல்லை. நான் எப்போது ரெகுலராக உடற்பயிற்சி செய்பவன். வெளிவந்த அந்த தகவலில் உண்மை இல்லை ” என்று தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி படத்தின் முதல் பேப்பர் விளம்பரம் 5ம் தேதி வெளியாக இருக்கிறது என்பது தான் லேட்டஸ்ட் தகவல். துப்பாக்கிக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………
———————————————————————————————————————
அரசியல் பட்டப்படிப்பு – ஹன்சிகா அரசியலில் குதிக்கும் அபாயம்!
———————————————————————————————————————

கண்டிப்பாக அரசியலில் குதிப்பேன் என்றார் நடிகை ஹன்சிகா மோத்வானி. மாப்பிள்ளை, எங்கேயும் காதல், வேலாயுதம் படங்களில் நடித்தவர் ஹன்சிகா மோத்வானி. அவர் கூறியதாவது: பொலிடிககல் சயின்ஸ் பட்டப்படிப்பு படித்து வந்தேன். சமீபத்தில்தான் தேர்வு எழுதி முடித்தேன். இனிமேல் படங்களில் அதிக கவனம் செலுத்துவேன். தமிழ், தெலுங்கு படங்களில் நிறைய வாய்ப்புகள் வருகிறது. நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டும் நடிப்பேன். அரசியல் பட்டப்படிப்பு படித்துள்ளதால் அரசியலில் ஈடுபடுவீர்களா? என்கிறார்கள். அதில் சந்தேகமே இல்லை. நிச்சயமாக அரசியலுக்கு வருவேன். அரசியல் படிப்பை விரும்பிதான் படித்தேன்.

நம்நாடு மற்றும் உலக நாடுகளின் அரசியல் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். அரசியல் சூழலை பார்த்து எனக்கு எந்த தயக்கமும் கிடையாது. ஆனால் இப்போதைக்கு சினிமாவில்தான் கவனம் செலுததுவேன். எதிர்காலத்தில் எனது வாழ்க்கையை இறைவன் எப்படி அமைப்பான் என்பது எனக்கு தெரியாது. இவ்வாறு ஹன்சிகா மோத்வானி கூறினார்.
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………

———————————————————————————————————————
டாப்சியின் இடுப்போடு தன் இடுப்பை வைத்து உரசிய புலிக்குட்டி – உர்ரான டாப்சி
———————————————————————————————————————
புலி பசித்தாலும் புல்லை தின்னாது என்பார்கள். அதற்காக பசுமை அழகி டாப்ஸி பக்கத்தில் போனால் கூடவா? தமிழில்தான் படம் இல்லையே தவிர, தெலுங்கில் பிஸியாகதான் இருக்கிறார் டாப்ஸி. இவர் கோபிசந்துடன் நடிக்கும் மொகுடு என்ற தெலுங்கு படத்திற்காக மொரீஷியஸ் போயிருந்தாராம். அங்கேதான் இந்த அடுக்குமா நியூஸ்.

புலிகள் திரிந்து கொண்டிருக்கும் ஒரு நந்தவனத்திற்குள் இறக்கிவிட்டார்களாம் டாப்ஸியை. ஐயோ, அம்மா என்று அலறிய டாப்ஸி முதலில் கால் வைக்கவே அஞ்ச, அவருக்கு ஒரு லைவ் டெமான்ஸ்ரேஷன் காட்டினார்களாம் படப்பிடிப்பு குழுவினர். கதை என்ன தெரியுமா?

இங்கு திரியும் புலிகள், ஆட்டைவிட பரிதாபமான நிலையில்தான் இருக்கின்றனவாம். எந்த புலிக்கும் கோபம் வருவதில்லை. முக்கியமாக மனிதர்களை பார்த்தால் அற்ப பதரே என்று நினைத்து ஒதுங்கிப் போய்விடுகின்றனவாம். இதையெல்லாம் விலாவாரியாக இவரிடம் விளக்கிய பின்புதான் ஷூட்டிங் ஸ்பாட்டில் காலையே வைத்திருக்கிறார் டாப்ஸி.

படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே ஒரு புலி இவரை லேசாக இடித்துவிட்டு போனதாம். அவ்வளவுதான். அதற்குமேல் சேதமில்லை டாப்ஸிக்கு. சரியான சீயக்காய் தூள் புலியாக இருக்குமோ என்னவோ?
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………
———————————————————————————————————————
மயக்கம் என்ன படத்தில் மத்திய அரசின் விதிமுறைகளை மீறிய தம் அடிக்கும் காட்சிகள்!
———————————————————————————————————————

மயக்கம் என்ன படத்தில் புகைப் பிடிக்கும் காட்சியில் மத்திய அரசின் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இனி வரும் படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளில் மத்திய அரசின் விதிகளை சினிமாக்காரர்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக முன்னாள் சுகாதாரத்துறை மந்திரி அன்புமணி விடுத்துள்ள அறிக்கை:

திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளுக்கு நவம்பர் 14 முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் வெளிவந்துள்ள புதிய திரைப்படங்கள் மத்திய அரசின் உத்தரவினை பின்பற்றாத நிலையே இன்னமும் நீடிக்கிறது.

இளைஞர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தமிழ் திரைப்படத் துறையினர் சட்டத்தை மதித்து நடக்க முன்வர வேண்டும். தமிழக அரசும் இதனை கட்டாயப்படுத்த வேண்டும்.

மயக்கம் என்ன

சமீபத்தில் வெளிவந்துள்ள மயக்கம் என்ன எனும் திரைப்படத்தில் புகைபிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மத்திய அரசின் புதிய உத்தரவு செயலுக்கு வந்த நாளுக்கு பின்னரே தணிக்கைத் துறை சான்று பெற்றிருந்தும் சட்டவிதிமுறைகள் இதில் பின்பற்றப்படவில்லை.

திரைப்படத்தில் புகைபிடிக்கும் காட்சியில் நடிக்கும் கதாநாயகர், படம் தொடங்கும் போது புகைபிடிப்பதால் ஏற்படும் தீமைகளை விளக்கி பேச வேண்டும், புகைபிடிக்கும் காட்சியின் போது கீழே எச்சரிக்கை வாசகத்தை ஓடவிட வேண்டும் என்கிற அரசு உத்தரவு இந்த திரைப்படத்தில் இடம்பெறவில்லை.

இந்த முக்கியமான விதிகள் தமிழ்நாட்டின் திரைப்படங்களிலும், தொலைக்காட்சிகளிலும் இன்னமும் முழு அளவில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

எனவே தமிழ் திரைப்படத் துறையினர் இனியும் தாமதிக்காமல் மத்திய சுகாதார அமைச்சகத்தின் புதிய விதிகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும். தமிழக அரசு உடனடியாக தலையிட்டு கட்டுப்பாடுகளை செயல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………
———————————————————————————————————————-
நண்பன் படப்பிடிப்பில் இலியானா போட்ட நாடகத்தால் நடுங்கிப்போன படக்குழுவினர்
———————————————————————————————————————-
நடிகை இலியானா மீது ஏற்கனவே தெலுங்கு திரையுலகினர் கடுப்பில் உள்ளனர். அம்மணி பண்ணும் அலும்புக்கு அளவேயில்லையாம். இந்த நிலையில் ஷங்கரின் நண்பன் படத்தில் நடித்து வரும் அவர் இங்கும் வேலையைக் காட்டியுள்ளார்.

3 இடியட்ஸ் படத்தில் வரும் ஜூபி, டூபி பாடல் போன்று தமிழிலும் படமாக்குகின்றனர். அதற்காக ஷங்கர் மும்பையில் இருந்து நடன இயக்குனர் ஃபரா கானை வரவழைத்துள்ளார். படப்பிடிப்புக்கு வந்த இலியானா நடன ஒத்திகையில் கலந்துகொள்ள மறுத்துள்ளார். என்ன விஷயம் என்று கேட்டதற்கு, வயிறு வலிக்குது என்று அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் ஃபரா கான். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இலியானாவுக்கு ஒன்றுமில்லை புழுகிறார் என்று குட்டை உடைத்துவிட்டனர். என்ன இந்த நடிகை இப்படி சில்லறைத் தனமாக இருக்கிறாரே என்று கடுப்பாகிய ஃபரா மீண்டும் படப்பிடிப்புக்கு சென்றுள்ளார்.

ஆனால் இலியானா தனது வேனில் சென்று உட்கார்ந்து கொண்டு வெளியே வரவேயில்லையாம். கடைசியில் இலியானா இல்லாமலே அந்தப் பாடலை படமாக்கியுள்ளனர்.
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
———————————————————————————————————————-
உடலை தானம் செய்யும் சினேகா!
———————————————————————————————————————-
நடிகர் கமலஹாசன் ஏற்கனவே உடல் தானம் செய்து பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளார். அவரை தொடர்ந்து நடிகை சினேகாவும் உடல் தானம் செய்கிறார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில், சமூகத்துக்கு ஒவ்வொரு வரும் நல்லது செய்ய வேண்டும். எனது பிறந்த நாள் விழாவினை ஏழைகளுக்கு உதவிகள் வழங்கி கொண்டாடுகிறேன். இவ்வருட பிறந்த நாளில் மாற்றுத் திறனாளிகளுக்கு விருந்து கொடுத்து கொண்டாடினேன். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

இரு வருடங்களுக்கு முன் எனது கண்களை தானம் செய்தேன். விரைவில் உடல் தானம் செய்யவும் முடிவு செய்துள்ளேன். ரசிகர்கள் கண்களை தானம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.சினேகா தற்போது முரட்டுக்காளை, விடியல் ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் ராமண்ணா என்ற படத்திலும் நடிக்கிறார்.
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
———————————————————————————————————————-
சண்டையெல்லாம் இல்லை… சந்தோசமாதான் இருக்கிறோம்
———————————————————————————————————————-
எனக்கும் பிரபுதேவாவுக்கும் சண்டை ஏதுமில்லை. நாங்கள் இருவரும் சந்தோஷமாக ஒன்றாக இருக்கிறோம் என்று நடிகை நயன்தாரா கூறியுள்ளார்.

நயன்தாரா மீது கொண்ட காதலால் மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்தார் பிரபுதேவா. விரைவில் நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் திருமணம் என்று கூறப்பட்ட நிலையில், இப்போது இருவருக்கும் சண்டை வந்துவிட்டதாகவும் திருமணம் நின்றுவிட்டதாகவும் தெலுங்கு தொலைக்காட்சி ஒன்று ஒரு மணி நேர சிறப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்ப, அது தீயாகப் பற்றிக் கொண்டது.

முன்னணிப் பத்திரிகைகளும் இதுகுறித்து விசாரித்து, நயன் – பிரபுதேவா சண்டை உண்மைதான் என்பது உறுதிப்படுத்தப்பட்டதால் செய்தி வெளியிட்டன.

இந்த நிலையில் இன்று இந்த செய்திக்கு விளக்கம் அளித்துள்ளார் நடிகை நயன்தாரா.

அவர் கூறுகையில், “எங்கள் உறவில் எந்த விரிசலும் இல்லை. நாங்கள் சந்தோஷமாக, ஒற்றுமையாக உள்ளோம். இந்த செய்தியை பத்திரிகைகளில் படித்துவிட்டு நாங்கள் இருவரும் வாய்விட்டு சிரித்தோம் என்பதே உண்மை. திருமணத் தேதியை விரைவில் அறிவிப்போம்,” என்றார்.

திருமண ஏற்பாடுகள் ஜோர்

பிரபு தேவா – நயன்தாரா திருமணத்துக்கான ஏற்பாடுகள் விரைவில் நடப்பதாகவும், அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் திருமணம் நடக்கும் என்றும் நயன்தாரா தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
———————————————————————————————————————-
சின்ன வீடு வேண்டவே, வேண்டாம் – சமீரா
———————————————————————————————————————-
டைரக்டர் லிங்குசாமியின் வேட்டை படத்தில் மாதவன், ஆர்யா, அமலா பால் ஆகியோருடன் நடித்துள்ளார் சமீரா ரெட்டி. நீதானே என் பொன் வசந்தம் படத்தை இயக்கி வரும் கெளதம் மேனனுக்கு உதவியாளராகவும் சினிமாவில் தனது வேறு முகத்தைக் காட்டிவருகிறார். சமீபத்தில், சென்னை கடற்கரை பகுதியில் அழகிய வீட்டை சொந்தமாக்கிக் கொள்ளும் ரகசிய கனவை சமீரா தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதற்க்கு அவர்கள் மறுத்துள்ளதாக தகவல் பரவியுள்ளது.

சென்னை கடற்கரை பக்கம் வீடு வாங்கி செட்டிலாவதை பற்றி பேச்செடுத்தால் அவ்வளவுதான், என் பெற்றோர் என்னை என்ன செய்வாங்கன்னு சொல்லமுடியாது. ஏற்கனவே நான் சென்னையிலே ரொம்ப நாட்களாக தங்கி இருப்பதனால் அவர்கள் என் மேல் கோபமாக இருக்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் மும்பையில் எங்களுக்கு வீடு இருக்கு அதனால் சென்னையில் வீடு வாங்கி செட்டில்லாவதை பற்றி கனவு காண முடியாது என்று சமீரா தெரிவித்துள்ளாராம்.
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
———————————————————————————————————————-
ஸ்வேதா மேனன் மீண்டுமொரு படத்திலும் கவர்ச்சி ததும்பும் காட்சிகளுடன்
———————————————————————————————————————-
சினிமாவில் மறுபிரவேசம் செய்த கையோடு ரதி நிர்வேதம், சால்ட் அண்ட் பெப்பர் படங்களில் கவர்ச்சி விருந்து படைத்த சர்ச்சை நாயகி ஸ்வேதா மேனன், மீண்டும் ஒரு படத்தில் படு செக்ஸியாக நடிக்கிறார்.இந்தப் படம் வெளியானால், தமிழில் கவர்ச்சி கலந்த கேரக்டர் ரோல்கள் குவியும்!

இதுவும் மலையாளப்படம்தான். பெயர் பருதீசா.

கிறிஸ்தவ மன்னர்களின் ஆட்சிக்காலப் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தில் ஸ்வேதா மேனன் ஏற்றுள்ள வேடம் கவர்ச்சி வேலைக்காரி.

பொதுவாக சரித்திரக் கதைகளில் இதுபோன்ற வேலைக்காரிகள், மன்னனையே கைக்குள் வைத்திருப்பதாக காட்சிகள் வரும். அப்படிப்பட்ட காட்சிகளுக்கு வெறும் ஐட்டம் டான்ஸரை மட்டும் போட முடியாதல்லவா… அதனால் நடிக்கவும் தெரிந்த ஸ்வேதா மேனனுக்கு வாய்ப்பளித்துள்ளனர்.

தமிழிலும் பெரிய பிரேக் கிடைக்கும் என்று நம்புகிறார் ஸ்வேதா. இப்போது வசந்தபாலனின் அரவான் படத்தில் தாசி வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வெளியானால், தமிழில் கவர்ச்சி கலந்த கேரக்டர் ரோல்கள் குவியும் என்கிறார் ஸ்வேதா.
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
———————————————————————————————————————-
தொலைத்தொடர்பு நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க விஜய்க்கு ரூ. 5 கோடி
———————————————————————————————————————-

நடிகர் விஜய் ஒரு பிரபல தொலைத்தொடர்பு நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்கவிருக்கிறார். இதற்காக அவருக்கு ரூ. 5 கோடி சம்பளம் பேசியுள்ளார்களாம்.

கோலிவுட் நட்சத்திரங்கள் தற்போது அதிக அளவில் விளம்பரப் படங்களில் நடித்து வருகின்றனர். ஏர்செல் நிறுவனத்திற்கு சூர்யாவும், ஏர்டெல் நிறுவனத்திற்கு அவரது தம்பி கார்த்தியும் பிராண்டு அமாபசிடர்களாக உள்ளனர்.

இந்த வரிசையில் தற்போது விஜய் சேரவிருக்கிறார். அவர் ஒரு பிரபல தொலைத்தொடர்பு நிறுவனத்தின் விளம்பரப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்காக அவருக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரூ. 5 கோடி.

தற்போது வேலாயுதம் பட வேலை முடிந்துவிட்டது. நண்பன் முடியும் தருவாயில் உள்ளது. இதையடுத்து விஜய் 3 நாட்கள் நடக்கும் இந்த புதிய விளம்பரப் படத்தில் நடிக்கவிருக்கிறார்.
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..

———————————————————————————————————————-
அண்ணன் எவ்வழியோ தம்பி அவ்வழி – கார்த்திக்கு எங்கு சென்றாலும் மதிப்பு!
———————————————————————————————————————-
சம்பளத்துடன் தெலுங்குப்பட உ‌ரிமையை வாங்குவது நடிகர் சூர்யாவின் வழக்கம்.இதனை அவரது தம்பி கார்த்தியும் ஃபாலோ செய்ய ஆரம்பித்துள்ளார்.

ஆந்திராவில் சூர்யாவுக்கு நல்ல மார்க்கெட் உள்ளது. அவரது படங்கள் அங்கு நல்ல லாபத்தை சம்பாதித்து வருகின்றன. இதேபோல் கார்த்திக்கும் ரசிகர்கள் திரள ஆரம்பித்துள்ளனர். சமீபத்தில் இவரது நான் மகான் அல்ல திரைப்படத்தை தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டனர். ரசிகர்களை மட்டுமின்றி தெலுங்கு நடிகர்களையும் இந்தப் படம் வெகுவாக கவர்ந்துள்ளது.

இதன் காரணமாக தான் நடிக்கும் படத்தின் தெலுங்கு உ‌ரிமையையும் கேட்க ஆரம்பித்திருக்கிறார் கார்த்தி. தயா‌ரிப்பாளர்களும் தர தயாராகயிருப்பதுதான் ஆச்ச‌ரியம்.
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
———————————————————————————————————————
சரண் எல்லை மீறியதற்கான ஆதாரங்களை எஸ்.பி.பாலாவிடம் காட்டிய சோனா
———————————————————————————————————————

கோடம்பாக்கத்தில் லேட்டஸ்ட் பரபரப்பு, நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் கவர்ச்சி நடிகை சோனாவை, பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியன் சந்தித்துப் பேசியிருப்பதுதான்!

மங்காத்தாவுக்காக நடிகர் வைபவ் வைத்த மதுவிருந்தில் பங்கேற்ற நடிகை சோனாவின் ஆடைகளைக் களைந்து, பலாத்காரம் செய்ய முயன்றார் என எஸ்பி பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்பிபி சரண் மீது நடிகை சோனா பகீர் புகார் கூறினார். இதனை போலீசில் புகாராகப் பதிவு செய்தார் சோனா. இதனைத் தொடர்ந்து அவர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

போலீசார் எந்த நேரமும் சரணை கைது செய்யலாம் என்ற நிலையில், முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் சரண். அதில் இந்தப் பிள்ளையும் பீர் குடிக்குமா என்கிற மாதிரி, சோனாவை நான் தொடவே இல்லை. குடித்துவிட்டு என் மேல் விழுந்த சோனாவை பாலுணர்வை தூண்ட வேண்டாம் என எச்சரித்தேன், என்று கூறியிருந்தார். அவரது இந்த ஸ்டேட்மெண்ட்டைப் பார்த்து சினிமாக்காரர்களே சிரிக்க ஆரம்பித்துள்ளனர்.

இன்னொரு பக்கம், அந்த மானபங்க சம்பவம் நடந்த நேரத்தில் அருகிலிருந்து சண்டையை விலக்கிவிட்டதாகக் கூறப்படும் மங்காத்தா இயக்குநர் வெங்கட் பிரபு, பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்டவர்களையும் விசாரிக்க போலீசார் முயற்சித்து வருகின்றனர். இந்த மூவரும் இப்போது இருக்குமிடமே தெரியவில்லையாம்!

மருத்துவமனையில் சந்திப்பு…

இந்த நிலையில், பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்த சரணின் தந்தை எஸ்பி பாலசுப்பிரமணியன், கைது, வழக்கு என தொடரவிருக்கும் அவமானங்களைத் தவிர்க்கும் பொருட்டு, சமாதானம் பேச முயன்றுள்ளார்.

நேற்று மாலை, சோனா தங்கி சிகிச்சைப் பெற்று வரும் மருத்துவமனைக்குச் சென்ற அவர், சோனாவை நலம் விசாரித்துள்ளார். உடம்பை பாத்துக்கோம்மா என்று அக்கறையாகச் சொன்ன எஸ்பிபி, நடந்த சம்பவங்களை முழுமையாகக் கேட்டுத் தெரிந்து கொண்டாராம். மேலும் சரண் தன்னிடம் அத்துமீறியதற்கு ஆதாரமாக தன்னிடம் உள்ள வீடியோ மற்றும் படங்களையும் சோனா காட்டியதாகவும், அவரது மோசமான நடத்தை மற்றும் மிரட்டல் தந்த மன உளைச்சல்தான் இந்த மாரடைப்புக்கு காரணம் என்றும் சோனா உருக்கமாகத் தெரிவித்தாராம்.

மகன் மீதுள்ள தவறைப் புரிந்து கொண்ட எஸ்பிபி, விரைவில் சரணை நேரில் அனுப்பி மன்னிப்பு கேட்க வைப்பதாகவும், பகிரங்கமாக மன்னிப்புக் கடிதம் தர வைப்பதாகவும் உறுதியளித்துள்ளாராம்.

ஏற்கெனவே எஸ்பிபி சரண் படம் தயாரித்து நஷ்டமடைந்ததன் விளைவாக, தனது ஸ்டுடியோவையே விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் எஸ்பி பாலசுப்பிரமணியம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்போது சோனாவைச் சந்தித்து சமாதானம் பேசும் நிலைக்கு அவரைத் தள்ளியுள்ளது சரணின் செயல் என்கிறார்கள் திரையுலகினர்.

இதற்கிடையே, சரணின் முன்ஜாமீன் மனு இன்று உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..

———————————————————————————————————————-
ஹாலிவுட் பாணியில் தயாராகி வருகிறது கமல்ஹாசன் இயக்கி, நடிக்கும் “விஸ்வரூபம்”
———————————————————————————————————————-
தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படம் வந்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு நடிகர் கமல்ஹாசன் இயக்கி, நடிக்கும் “விஸ்வரூபம்” படம் ஹாலிவுட் பாணியில் தயாராகி வருகிறது. சானு வர்கீஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சங்கர் லீசான் ராய் இசையமைக்கிறார்.

கமல்ஹாசன் படங்களில் தேவர் மகன், அபூர்வ சகோதரர்கள், தசாவதாரம் போன்ற படங்களை மைல் கற்கள் என்று சொல்வதுண்டு. அந்த படங்களை தூக்கி சாப்பிடுகிற மாதிரி, “விஸ்வரூபம்” இருக்கும் என்றும், தொழில்நுட்ப ரீதியில், தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படம் வந்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு அமையும் என்றும் “விஸ்வரூபம்” படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் கூறுகிறார்கள். இதில் டைரக்ஷன் எல்லோராலும் பாராட்டப்படும் வகையில் இருக்கும் என்கிறார்கள்.

ஹாலிவுட் படங்களை தொடங்கும்போது, அந்த படங்களின் திரைக்கதை புத்தகம் தொழில்நுட்ப கலைஞர்கள் அத்தனை பேருக்கும் வழங்கப்படுவது வழக்கம். அந்த நடைமுறை, “விஸ்வரூபம்” படத்தில் பின்பற்றப்பட்டு இருக்கிறது. இந்த படத்தின் திரைக்கதை புத்தகம் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், ஆர்ட் டைரக்டர் உள்பட அத்தனை தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வழங்கப்பட்டு இருப்பது கூடுதல் தகவல்.
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
———————————————————————————————————————-
என் நடிப்பை வெளிப்படுத்த மொட்டையடிக்கவும் தயார் :: கவர்ச்சி குயின் மும்மைத்கான்
———————————————————————————————————————-
என் நடிப்பை வெளிப்படுத்த நல்ல கதை, நல்ல படம், நல்ல கேரக்டர் என்று அமைந்தால் மொட்டையடித்து கூட நடிக்கத் தயாராக இருக்கிறேன் என்று கவர்ச்சி குயின் மும்மைத்கான் தெரிவித்துள்ளார்.

கந்தசாமியில், என் பேரு மீனா குமாரி…. வில்லு படத்தில், டாடி மம்மி வீட்டில் இல்ல… உள்ளிட்ட பல பாடல்களில் குத்தாட்டம் போட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து அளித்தவர் நடிகை மும்மைத்கான்.

தற்போது தியாகராஜன் இயக்கத்தில், பிரசாந்தின் நடிக்கும் மம்பட்டியான் படத்தில் ஜெயமாலின் கேரக்டரில் மும்மைத்கான் நடித்து வருகிறார். தன்னுடைய நடிப்பிற்கு மம்பட்டியான் படம் தான் சரியான வாய்ப்பு என்று கூறும் மும்மைத், இதுபோன்று நல்ல கதை, நல்ல டைரக்டர் அமைந்தால் மொட்டையடித்து நடிக்க கூட தயங்கமாட்டேன் என்கிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் மும்மைத், நல்ல கேரக்டருக்காக காத்திருக்கிறாராம்.
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
……………………………………………………………………………………………………….
தெலுங்கு படங்களில் தமிழ் முன்னணி நடிகைகளுக்கு நடிக்க தடை
……………………………………………………………………………………………………….
15 நாட்களுக்குள் கட்டணம் செலுத்தி உறுப்பினராகாவிட்டால், தெலுங்குப் படங்களில் நடிக்க முடியாது என நடிகைகள் சினேகா, த்ரிஷா, ஸ்ரேயா உள்ளிட்டோருக்கு தெலுங்கு நடிகர்கள் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழ் படங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக வேண்டும் என்று கடந்த வாரம் சென்னையில் கூடிய நடிகர் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அக்டோபர் 30-ந்தேதிக்குள் உறுப்பினராக கெடு விதிக்கப்பட்டு உள்ளது. இது போல் தெலுங்கு நடிகர் சங்கமும் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

சம்பளம் அதிகம் என்பதால் இந்தி, தமிழ், மலையாள நடிகைகள் பலர் தெலுங்கு படங்களில் நடிக்கின்றனர். ஆனால் அவர்கள் தெலுங்கு நடிகர்கள் சங்கத்தில் இதுவரை உறுப்பினராகவில்லை இதையடுத்து உறுப்பினராகாத நடிகைகள் பட்டியலை தெலுங்கு நடிகர் சங்கம் தயார் செய்தது.

அவர்களுக்கு இன்னும் 15 நாட்களில் உறுப்பினராக வேண்டும் என்று கெடு விதித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. நடிகைகள் த்ரிஷா, ஜெனிலியா, ஸ்ரேயா, இலியானா, டாப்சி, சினேகா, தமன்னா, நித்யாமேனன் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

இவர்கள் தமிழ் நடிகர் சங்கத்தில் உறுப்பினராகி விட்டனர். ஆனால் தெலுங்கில் இன்னும் உறுப்பினர் ஆகவில்லையாம். 15 நாட்களுக்குள் உறுப்பினராகாவிட்டால் தெலுங்கு படங்களில் நடிக்க தடை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
———————————————————————————————————————-
சோனாவின் சோகம் :: என் மார்பிலே கைவைத்தார் எஸ்.பி.சரண் !
———————————————————————————————————————-

பாடக‌‌ர் எ‌ஸ்.‌பி.பாலசு‌ப்‌பிரம‌‌ணிய‌ன் மக‌‌ன்எஸ்.பி.சரண் மீது நடிகை சோனா செ‌க்‌‌ஸ் புகார்கூ‌றியு‌ள்ளா‌ர்.செ‌ன்னை‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், “மங்காத்தா” படம் வெற்றி பெற்றதற்காக, அந்த படத்தில் நடித்திருந்த வைபவ் வீட்டில் க‌ட‌ந்த 14ஆ‌‌ம் தே‌தி இரவு, பார்ட்டி நடந்தது. அதில் வெங்கட்பிரபு, பிரேம்ஜி, அரவிந்த், அஸ்வின், ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன், டான்ஸ்மாஸ்டர் அஜய்ராஜ் உள்பட “மங்காத்தா” படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டன‌‌ர்.

நடிகர் – தயாரிப்பாளர் எஸ்.பி.சரணும் அந்த பார்ட்டிக்கு வந்திருந்தார். வெங்கட்பிரபு என் நண்பர் என்பதால், என்னையும் அழைத்திருந்தார்கள். அவர்கள் அழைப்பை ஏற்று நானும் பார்ட்டியில் கலந்துகொண்டேன்.

அங்கு மது விருந்து நடந்தது. திடீரென்று எஸ்.பி.சரண் என் மீது பாய்ந்து, என்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். நான் வெட்கத்தாலும், அதிர்ச்சியாலும் கூனிக்குறுகி போய்விட்டேன். என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.

நான் ஒரு கவர்ச்சி நடிகைதான். பிழைப்புக்காக நான் கவர்ச்சியாக நடிக்கிறேன். ஆனால், நான் விலை மாது அல்ல. ஏற்கனவே ஒருமுறை, எஸ்.பி.சரண் என்னிடம் தவறாக பேசினார். அதில் இருந்து நான் அவருடன் பேசுவதில்லை. இதுபற்றி நான் பாண்டிபஜார் காவ‌ல்துறை‌யி‌ல் புகார் கொடுத்து இருக்கிறேன்.

காவ‌ல்துறை என்ன நடவடிக்கை எடுப்பார்களோ, எடுக்கட்டும். அதோடு எஸ்.பி.சரண் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இன்னும் 10 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால், என் சாவுக்கு அவர்தான் காரணமாக இருப்பார் எ‌ன்று நடிகை சோனா கூறினார்.இது தொடர்பாக சோனா நேற்‌றிரவு பாண்டிபஜார் காவ‌ல்துறை‌ உத‌வி ஆ‌ய்வாள‌ர்அழகுவை சந்தித்து புகார் கொடுத்தார்.

எஸ்பிபி சரண் பதில்

நடிகை சோனாவின் பாலியல் புகார் குறித்து எஸ்.பி.சரண் கூறுகையில், “வைபவ் வீட்டில் மது விருந்து நடந்தது உண்மை. ஆனால், சோனா சொல்வது போல் எதுவும் நடக்கவில்லை. நான், சோனாவிடம் பிஸினஸ் பற்றிதான் பேசினேன். அவர் வெங்கட்பிரபு இயக்கத்தில் ஒரு படம் தயாரிக்க திட்டமிட்டு இருந்தார். பிறகு அந்த திட்டத்தை கைவிட்டுவிட்டதாக கேள்விப்பட்டேன். அதனால் வெங்கட்பிரபுவை வைத்து நான் படம் தயாரிக்க முடிவு செய்து, அது தொடர்பாகத்தான் சோனாவிடம் பேசினேன் என்று கூறியுள்ளார்.

நடிகை சோனாவைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள இந்த வீடியோவைப்பாருங்கள்
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..

———————————————————————————————————————
ரஜினி பற்றி தவறான காட்சிகள் – சில்க் ஸ்மிதாவின் உண்மைக் கதையான தி டர்ட்டி பிக்சர்
———————————————————————————————————————-
சில்க் ஸ்மிதாவின் உண்மைக் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இந்திப் படமான தி டர்ட்டி பிக்சரில், சூப்பர் ஸ்டார் ரஜினி பற்றி காட்சிகள் உள்ளதாகவும், அவை ரஜினியை அவமதிக்கும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் பரவியதையடுத்து ரசிகர்கள் கொதிப்பில் உள்ளனர்.

உடனடியாக அந்தக் காட்சிகளை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏக்தா கபூர் தயாரிப்பில், வித்யா பாலன் – நஸ்ருதீன் ஷா நடிக்கும் படம் தி டர்ட்டி பிக்சர். இந்தப் படம் மறைந்த தமிழ் நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது.

இந்தப் படம் தொடங்கப்பட்டதிலிருந்து பல்வேறு சர்ச்சைகளுக்குக் காரணமாகியுள்ளது. இப்போது எழுந்துள்ள சர்ச்சை, படத்தில் ரஜினியை அவமானப்படுத்தியுள்ளனர் என்பது.

இந்தப் படத்தில் வயதான முன்னணி நடிகராக தோன்றுகிறார் நஸ்ருதீன் ஷா. அவரும் சில்க்கும் இணைந்து வருகிற காட்சிகளும் வசனங்களும் ரஜினியை அவமானப்படுத்துவது போல உள்ளனவாம்.

எனவே இந்தக் காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ரஜினியின் பெரும்பாலான படங்களில் சில்க் ஸ்மிதா முக்கிய இடம்பெற்றிருப்பார் என்பது நினைவிருக்கலாம்.

ஆனால் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் விளக்கம் வேறு மாதிரி உள்ளது. அவர் கூறுகையில், “தி டர்ட்டி பிக்சரில் நஸ்ருதீன் ஷா சீனியர் நடிகராக வருவார். ஆனால் சில்க் ஸ்மிதா காலத்தில் ரஜினி இளமையான சூப்பர் ஸ்டார். இந்த வித்தியாசத்தை ரசிகர்கள் புரிந்து கொண்டால் கோபப்பட மாட்டார்கள். ரஜினியை நாங்கள் அவமானப்படுத்தவில்லை. அவர் மட்டுமல்ல, யாரையுமே இந்தப் படத்தில் தவறாக சித்தரிக்கவில்லை,” என்றார்
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..

———————————————————————————————————————-
தபாங் ரீமேக்கில் ஒரு பாடலில் அனுஷ்காவின் குத்தாட்டம் !
———————————————————————————————————————-

அனுஷ்கா சிரஞ்சீவியின் ஸ்டாலின் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார்.இப்போது மீண்டும் ஒரு படத்தில் ஒரேயொரு பாடலுக்கு ஆடவிருக்கிறார்.

சல்மான் கானின் தபாங் படத்தை கப்பர் சிங் என்ற பெய‌ரில் தெலுங்கில் ‌ரீமேக் செய்கின்றனர். பவன் கல்யாண் நடிக்கிறார். இந்தப் படத்தில் வரும் குத்துப் பாடலொன்றுக்கு அனுஷ்காவை ஒப்பந்தம் செய்துள்ளனர். தபாங்கில் மலைக்கா அரோரா ஆடிய இந்தப் பாடல் சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..

———————————————————————————————————————-
அஜித் லிஸ்டில் அடுத்துவரும் பெரும் தலைகள் !
———————————————————————————————————————-
ஒவ்வொரு முறை தன் படம் வெளிவரும் போதெல்லாம் நிருபர்களை அழைத்து ஒரு ஹாய் சொல்வது அஜீத்தின் வழக்கம். தனிப்பட்ட முறையில் பேட்டி கொடுத்தா மற்றவங்க கோவிச்சுக்கிறாங்க. அதனால் எல்லாருக்கும் ஒரே நேரத்தில் பேட்டி கொடுப்பதுதான் சரியா இருக்கும். கேளுங்க… என்பார் அப்போதெல்லாம். ஆனால் எல்லா விதிகளையும் அவரே மீறியது போலாகிவிட்டது மங்காத்தா விஷயங்கள்.

முன்னணி நாளிதழ்களுக்கும், வார இதழ்களுக்கும் மட்டும் பேட்டியளித்தவர், இரண்டாம் தரப்பு மேகசீன்களை கண்டு கொள்ளவே இல்லை. இந்த சோகம் பலருக்கும் இருப்பதால், சென்னையில் இருக்கும் அவரது மேனேஜரிடம் என்னங்க இப்படி பண்ணிட்டாரே என்று குறை கூற, விஷயம் கோவாவில் இருக்கும் அஜீத்தின் காதுக்கு போனதாம்.

பில்லா-2 படப்பிடிப்பில் இருந்ததால்தான் இப்படி ஆகிடுச்சு. இம்மாத இறுதியில் சென்னைக்கு வருவேன். நிச்சயம் எல்லாரையும் சந்திப்பேன். விரிவான பேட்டிக்கு நான் ரெடி என்று கூறியிருக்கிறாராம். இதற்கிடையில் இன்னொரு செய்தியும் கசிகிறது கோடம்பாக்கத்தில். பில்லாவுக்கு பின்பு வெங்கட்பிரபுவுடன் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இசைந்திருக்கிறாராம். அவரது ஹிட் லிஸ்ட்டில் இருக்கிற மேலும் இரு இயக்குனர்கள் ஜெயம் கொண்டான் கண்ணன், ஆரண்ய காண்டம் தியாகராஜன் குமார ராஜா.
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
———————————————————————————————————————-
கணவன் எதிர்ப்பு , மனைவி மறைமுக ஆதரவு
———————————————————————————————————————-
சன் பிக்சர்ஸ் சார்பில் வெளியிடப்பட்ட மங்காத்தா படத்தை ராதிகாவின் ராடன் டி.வி நிறுவனம்தான் திரையரங்குகளில் வெளியிட்டது. வரப்போகும் 7-ம் அறிவு படத்தைக்கூட இதே பாணியில் வெளியிடப் போவதாக செய்திகள் கசிகின்றன. ஒருபுறம் திமுக வை எதிர்க்கிறார் சரத்குமார். இன்னொருபுறம் அதே திமுக குடும்பத்தினர் தயாரித்த படங்களை அவரது மனைவி ராதிகா திரையிடுகிறார். இதென்ன முரண்பாடு என்ற கேள்வி எழுந்திருக்கிறது திரையுலகத்தில். இது குறித்து தெளிவாகவே விளக்கம் அளித்திருக்கிறார் ராதிகா.

அரசியல் வேறு. பிசினஸ் வேறு என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். என்னை பற்றி அம்மாவுக்கு நல்லா தெரியும். அவங்களுக்கு நிறைய வேலை இருக்கு. இதுவரை அவங்க தரப்பிலிருந்து எங்கிட்ட யாரும் எதவும் கேட்கலை. தொழில்ல கோடிக்கணக்கில் முதலீடு போடறவங்க நஷ்டம் வந்திடக் கூடாதுன்னுதான் நினைப்பாங்க. திரைப்படத்துக்கு அந்த லாஜிக் பொருந்தும்தானே. அது யாரோட படம். அதன் பன்னணி என்பதை பற்றியெல்லாம் ஆராய்ச்சி பண்ணிக்கிட்டிருக்கிறது வேஸ்ட். இது ஒரு பிராசஸ்டு வென்ச்சர். எங்கள் நிறுவனம் மூலமா படத்தை வெளியிடுறீங்களான்னு கேட்டாங்க. நான் சரின்னு ஒத்துக்கிட்டேன். அவ்வளவுதான். நான் முன்பே சொன்னது போல அதனை பிசினஸ் ரீதியாக மட்டுமே பார்க்கிறேன்.

சந்தேகம் தீர்ந்ததா?..
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..

———————————————————————————————————————-
தங்களுக்கு தாங்களே கிசு கிசுக்களை பரப்பிவிடுவது கோடம்பாக்கத்தில் வழக்கமாகிவிட்டது
———————————————————————————————————————-
மங்காத்தா படத்தில் அறிமுகமான நடிகர் மகத்தும் ஆடுகளம் நாயகி டாப்ஸியும் காதலில் விழுந்துள்ளதாக கோடம்பாக்கம் கிசுகிசுக்க ஆரம்பித்துள்ளது.

பொதுவாக கிசுகிசுக்கள் நடிகர்களாலேயே கிளப்பிவிடப்படுவது வழக்கம். அதுவும் வளரும் நடிகர்கள் என்றால், தாங்களே கிசுகிசுக்களை மீடியாவுக்கு “எடுத்துக் கொடுப்பது” தமிழ் சினிமாவில் சமீப காலமாக அதிகரித்துள்ளது.

பிரபலமான ஹீரோயினுடன் இணைத்து இளம் நடிகர்கள் கிசு கிசு பரப்புவார்கள். அது கொஞ்ச நாளைக்கு மீடியாவில் அவர்களை உயிர்ப்புடன் காட்டும். சில நடிகைகளும் இதைச் செய்வது வழக்கம்.

ஆடுகளம் என்ற படத்தில் அறிமுகமாகி, இப்போது வந்தான் வென்றானில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்துள்ள டாப்ஸிக்கும், மங்காத்தாவில் ஒரு கேரக்டர் ரோலில் வந்துள்ள சிம்புவின் நண்பர் மகத்துக்கும் காதல் ஏற்பட்டுள்ளதாக கிசுகிசு பரவி வருகிறது.

தயாரிப்பாளர் தயாநிதி அழகிரிக்கும் நெருங்கிய நண்பர் மகத். தயாநிதிதான் இவரகை நடிகராக்க பலமாக சிபாரிசு செய்தவர்.

டாப்சியும் மகத்தும் ஓட்டல்களில் அடிக்கடி காணப்படுவதாகவும், டாப்ஸியின் படப்பிடிப்பில் மகத்தையும் பார்க்க முடிவதாகவும் கூறுகிறார்கள். டாப்ஸிக்கு மகத்தான் தமிழ் கற்றுக் கொடுக்கிறாராம்.

இந்தத் தகவல்கள் மீடியாவுக்கு கிடைத்தது யார் மூலம் என்புது தெரிந்தால், இந்த கிசுகிசு எந்த அளவுக்கு நிஜம் என்பது தெரிந்துவிடும் என்கிறார்கள் அனுபவம் வாய்ந்த நிருபர்கள்! தகவல் கொடுத்தது மகத்தா… டாப்ஸியா?
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..

———————————————————————————————————————-
கள்ளத்தொடர்பு நயன்தாரா வைத்திருந்தால் குற்றமில்லை, நிகிதாவுக்கு மட்டும் என் ஓரவஞ்சனை?
———————————————————————————————————————-
அந்தரங்க வாழ்க்கையில் ஒழுக்கம் முக்கியம் என்று கன்னட தயாரிப்பாளர்கள் சங்கம் பிரகடனம் செய்திருப்பதை கேட்டு அதிர்ந்து போயிருக்கிறது திரையுலகம். அதிர்ச்சியிலா ஆனந்தத்திலா என்பது உடனடியாக தெரியவில்லை. நடிகர் தர்ஷனின் குடும்ப சண்டையால் விளைந்த ஞானோதயம் அந்த அறிவிப்பு. உடன் நடிக்கும் கதாநாயகி நிகிதாவுடன் தர்ஷன் நெருக்கமாக பழகுவதை மனைவி விஜயலட்சுமி கண்டிக்க, வாக்குவாதம் வலுத்திருக்கிறது.

தர்ஷன் துப்பாக்கியை காட்டி தன்னையும் குழந்தையையும் மிரட்டியதாக போலீசில் புகார் கொடுத்தார் மனைவி. மகளிர் அமைப்புகள் அழுத்தம் கொடுத்ததால் தர்ஷன் கைதானார். தலைசுற்றுவதாக சொன்ன அவரை ஸ்பெஷல் வார்டில் சேர்த்துள்ளனர். அங்கு கணவனை பார்த்து பேசிய விஜயலட்சுமி, புகாரை வாபஸ் பெற்றிருக்கிறார். பின்னர் கர்நாடக தயாரிப்பாளர்கள் சங்கம் அவசரமாக கூடி, நிகிதா மூன்று ஆண்டுகள் கன்னட படங்களில் நடிக்க தடை விதித்து தீர்மானம் போட்டுள்ளது.

அமைதியான குடும்பத்தில் தலையிட்டு புயலை ஏற்படுத்திவிட்ட நிகிதா மீது எடுக்கும் நடவடிக்கை மற்றவர்களுக்கும் பாடமாக இருக்க வேண்டும்� என கூறியிருக்கிறார் சங்க தலைவர் முனிரத்னம். படத்தில் நடிப்பதை தவிர தர்ஷனோடு தனக்கு எந்த உறவும் கிடையாது என்று நிகிதா மறுத்திருக்கிறார். என் தரப்பு என்ன என்று கேட்காமல் தடை விதிப்பது என் தொழிலை சீர்குலைக்கும் முயற்சி; அடிப்படை உரிமையை மீறும் செயல் என்று கொதிக்கிறார்.

கோடானு கோடி அதில் குளிப்போம் விளையாடி.. என்ற பாடல் காட்சி மூலம் தமிழிலும் பிரபலமான நிகிதா, தர்ஷன் மனைவியின் உரிமைக்காக குரல் கொடுத்த அதே மகளிர் அமைப்புகளின் ஆதரவை நாட இருக்கிறார்.

நடிகர்களின் இல்லற வாழ்க்கையில் இம்மாதிரி புயல் வீசுவது புதிய விஷயமல்ல. உலகம் முழுவதும் நடப்பது இங்கே கொஞ்சம் அதிகம். தமிழில் மவுனப்பட காலத்திலேயே தொடங்கிவிட்டது. லேட்டஸ்ட் பிரபுதேவா & ரமலத் & நயன்தாரா விவகாரம். நடிகை நிகிதாவுக்கு மட்டும் தடை விதித்த திரை உலகம், ஏனோ பிரபுதேவா & நயன்தாரா விவகாரத்தை மட்டும் கண்டு கொள்ளவேயில்லை. தனிநபர் ஒழுக்கம் மெச்சத் தகுந்தது. அதை காப்பாற்றும் குறிக்கோள் போற்றத் தக்கது. எனினும் ஒரு கை மட்டும் ஓசை எழுப்ப முடியாது. ஒருதரப்பான இத்தகைய நடவடிக்கைகள் ஆணாதிக்கத்தின் இன்னுமொரு அடையாளமாகவே விமர்சிக்கப்படும்.
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
———————————————————————————————————————-
ஓரங்கட்டப்பட்ட உயர அழகியும் உள்வாங்கப்பட்ட ஒல்லி இடுப்பழகியும்!
———————————————————————————————————————-
நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தெலுங்கில் ரெபெல் என்ற படத்தை எடுக்கிறார். இதில் கதாநாயகியாக நடிக்க அனுஷ்காவை அணுகினார். ரெபெல்லில் உயர அழகி அனுஷ்காவை ஓரங்கட்டிவிட்டு பிரபாஸுடன் ஜோடி சேர்ந்துள்ளார் ஒல்லி அழகி தமன்னா.


முதலில் ஓகே சொன்னவர் ராகவா லாரன்ஸுடன் ஏற்பட்ட லடாயால் வாக் அவுட் செய்துவிட்டார். ஏற்கனவே அனுஷ்கா காஞ்சனா படத்தில் நடிக்கவும் மறுத்துவிட்டவர் என்பது நினைவிருக்கலாம். அதன் பிறகுதான் அஜால் குஜால் லக்ஷ்மி ராயை படத்தில் சேர்த்தார் லாரன்ஸ்.

இந்த நிலையில், ரெபெல் படத்திற்கு நாயகியாக வந்து சேர்ந்துள்ளார் தமன்னா. கார்த்தி கல்யாணத்திற்குப் பிறகு தமன்னாவை அதிகம் தமிழில் காண முடியவில்லை. தமிழில் படங்கள் இல்லாமல் ஆந்திரக் கரையிலேயே இருக்கும் தமன்னாவுக்கு அடித்தது அதிர்ஷ்டம். ரெபெல் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். பிரபல நடிகர்பிரபாஸுடன் ஜோடி சேர்கிறார்.

வரும் 15-ம் தேதி ஹைதராபாத்தில் படப்பிடிப்பு துவங்குகிறது. படக்குழுவினர் விரைவில் பாங்காக் பறக்கவிருக்கின்றனர். இந்த படத்தில் தீக்ஷா சேத் இரண்டாவது கதாநாயகியாக வருகிறார். படத்திற்கு இசை எஸ். எஸ். தமன். ஸ்ரீ பாலாஜி சினி ஆர்ட்ஸ் மீடியாவைச் சேர்ந்த ஜே பகவான், ஜே புல்லா ராவ் தான் தயாரிப்பாளர்கள்.
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
———————————————————————————————————————-
அமலாபாலின் உடலழகை பார்த்து நயன்தாரா அனுப்பிய SMS
———————————————————————————————————————-
ப்ரியங்கா சோப்ரா மாதிரி அழகாக இருக்கிறீர்கள் என்று நடிகை அமலா பாலை பாராட்டியுள்ளார் நடிகை நயன்தாரா.பொதுவாக இரு நடிகைகள் சினேகமாக இருப்பது அபூர்வமான விஷயமாகிவிட்டது சினிமாவில். அதிலும் ஒருவருக்கொருவர் பாராட்டிக் கொள்வது மிக அரிதான விஷயமாகிவிட்டது.

இந்த நிலையில், சமீபத்தில் ஒரு பத்திரிகையில் வெளியான அமலா பால் புகைப்படங்களைப் பார்த்த நயன்தாரா, “உங்கள் தோற்றம் அசத்தலாக உள்ளது. அப்படியே பிரியங்கா சோப்ராவை பார்ப்பது போல உள்ளது,” என்று
எஸ்எம்எஸ் அனுப்பினாராம்.


இதில் நெகிழ்ந்துபோன அமலாபால், “நயன்தாராவை நினைத்தால் எனக்குப் பெருமையாக உள்ளது. எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த (மலையாளப் பெருமையாம்!) நயன்தாரா, ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் இந்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர். அவர் வாயால் என்னைப் பாராட்டிதை பல விருதுகளைப் பெற்றதற்கு சமமான உணர்கிறேன். அவர்தான் இனி எனக்கு முன்னோடி,” என்றார்.

நடிப்பில் மட்டும் முன்னோடியா எடுத்துக்கங்க… அதான் நல்லது!
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..

———————————————————————————————————————-
அசிங்கப்படுத்திவிட்டார்கள்! இனிமேல் என்னை யார் திருமணம் செய்து கொள்வார்?
———————————————————————————————————————-

தர்ஷனுடன் காதல் என்பது அடிப்படையில்லாதது… பொய்யானது. ஆனால் அதை வைத்து என்னை தடை செய்வதாக அறிவித்து அசிங்கப்படுத்திவிட்டார்கள். இனிமேல் என்னை யார் திருமணம் செய்து கொள்வார். இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா?,” என்று கேள்வி எழுப்பியுள்ளார் நடிகை நிகிதா.

கன்னட நடிகர் தர்ஷனுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி 3 ஆண்டுகள் கன்னடப் படங்களில் நடிக்க தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது. இதனால் அதிர்ச்சியாகியுள்ளார் நிகிதா.

இவர் தமிழில் 2003ல் வெளியான குறும்பு படத்தில் அறிமுகமானார். சத்ரபதி, வெற்றி வேல் சக்தி வேல், சரோஜா போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது சேரன் மற்றும் பிரசன்னாவுடன் முரண் படத்தில் நடித்து வருகிறார். கன்னடத்தில் மூன்று படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார். தெலுங்கிலும் நிறைய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

தடை காரணமாக புதிய கன்னட படங்களில் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் மற்ற மொழிகளில் அவரை யாரும் தடுக்கவி்ல்லை.

ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் தான் மிகவும் அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக நிகிதா வருந்துகிறார்.

இது குறித்து நிகிதா இன்று அளித்த பேட்டியில், “எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. யாருடனும் எனக்கு தவறான தொடர்பும் கிடையாது. நான் அப்படிப்பட்ட பெண் அல்ல.

நடிகர் தர்ஷினுடன் என்னை இணைத்துப் பேசுவதால் சொந்த வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. தர்ஷனுடன் காதல் என்பது அடிப்படையில்லாதது. பொய்யானது. இந்த பொய் குற்றச்சாட்டை வைத்து என்னை அசிங்கப்படுத்திவிட்டார்களே, இனிமேல் என்னை யார் திருமணம் செய்து கொள்வார்? இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா?

நான் ஒரு பெண் என்பதை தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ளவர்கள் மறந்து விட்டனர். அவர்களின் தடை உத்தரவு என் சினிமா வாழ்க்கையை மட்டும் பாதிக்கவில்லை. சொந்த வாழ்க்கையையும் நிர்மூலமாக்கி விட்டது. எனது குடும்பத்தினரும் இதனால் மனம் உடைந்து போயுள்ளனர்.

தர்ஷனுக்கும் அவரது மனைவிக்கும் தகராறு என்பது அவர்களின் குடும்ப பிரச்சினை. அதில் என்னை ஏன் இழுத்தார்கள் என்று புரியவில்லை. நான் வெளி மாநிலத்தில் இருந்து வந்த நடிகை, என்பதால் என்னை தண்டித்துள்ளனர்.

தர்ஷனுடன் எனக்கு தகாத தொடர்பு இருந்ததாக தயாரிப்பாளர் சங்கத்தில் நிரூபிக்க முடியுமா? சில இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் நான் தவறு செய்ய வில்லை என்ற உண்மை தெரியும். அவர்கள் என்மேல் அனுதாபம் காட்டுகின்றனர். யார் உண்மையான குற்றவாளி என்பது விரைவிலேயே தெரியும். அப்போது நான் பட்ட அவமானத்துக்கு இழப்பு தர முடியுமா இவர்களால்?”, என்றார்.
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
———————————————————————————————————————-
வேலாயுதம் பற்றி இயக்குனர் ராஜாவின் கருத்து !
———————————————————————————————————————-
விஜய், ஹன்சிகா, ஜெனிலியா மற்றும் பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் படம் வேலாயுதம். இப்படத்தினை ஜெயம் ராஜா இயக்க, விஜய் ஆண்டனி இசையமைக்கிறார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்து வருகிறார்.

இப்படம் குறித்து ஜெயம் ராஜா ” விஜய் சார் குழந்தைகளுக்கும் குடும்பத்தினருக்கும் பிடித்தவர்.குழந்தைகள் மற்றும் குடும்பதினரை நோக்கியே என் படமும் இருக்கும். இந்த ஒத்த சிந்தனையால் எங்களுக்குள் கண்ணுக்கு தெரியாத இணக்கமும் நெருக்கமும் இறுக்கமும் வந்து விட்டன.

வேலாயுதம் தீபாவளிக்கு வருகிறது. விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் கொண்டாட்டமான ஒரு படமாக இருக்கும். ஹீரோயிசத்தை சரியாகப் பயன்படுத்தி வெளிப்படுத்தியிருக்கும் படமாக இது இருக்கும்.

ஜெனிலியா, ஹன்சிகா என இரு நாயகிகளுக்குமே என்மேல் கடைசி வரை ஒரு சந்தேகம் இருந்தது. படத்தில் யாருக்கு முக்கியத்துவம் என்கிற சந்தேகம் அது. படத்தில் இருவருக்கும் சமவாய்ப்பு இருக்கிறது. படம் வெளியான பிறகு வகையில் இருவரும் பேசப்படுவார்கள்.

நட்சத்திரங்களின் ஒத்துழைப்பைப் போல தொழில் நுட்ப கலைஞர்களும் ஈடுபாட்டுடன் உழைத்து இருக்கிறார்கள்.இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி வேட்டைக்காரன் பாடல்களைத் தாண்டி பேசப்பட வேண்டும் என்று கடுமையாக பாடுபட்டார். அதனால் தான் அவர் போட்டுக் காட்டிய 6 மெட்டுகளும் முதல் முறையிலேயே பிடித்துப் போய் பாடலாயின. அதனால்தான் ஆடியோ விற்பனையிலும் வேலாயுதம் சாதனை படைத்தது.

தயாரிப்பாளர் ரவிசார் பற்றி சொல்ல வேண்டியதில்லை. படம் நன்றாக வர அவர் ஆகாயம் வரை மேலே போவார். பாதாளம் தாண்டியும் கீழே செல்பவர். ஒரு காட்சிக்கும் ஒரு லட்சம் பேர் தேவைப்பட்டது. ஏன் எதற்கு என்று கேட்கவில்லைல் ஏற்பாடு செய்து விட்டார்.. அதுவும் கேரளாவில்… அசந்து போய் விட்டேன்.

இதுவரை 150 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது. பொள்ளாச்சி, சென்னை, கொச்சி, லடாக், ஹைதராபாத், விசாகப்பட்டினம், ஒரிசா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. பாக்கியுள்ள ஒரு பாடலுக்காக காஷ்மீர் செல்ல இருக்கிறோம்.

தமிழ் ரசிகர்களுக்கு புத்தம் புது அனுபவமாக வேலாயுதம் அமையும் வகையில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ” என்று தெரிவித்துள்ளார்.
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
———————————————————————————————————————-
சினிமாவை தவிர்த்து ரசிகர்களுக்கு வேறொரு வாழ்க்கை இருக்கிறது.
———————————————————————————————————————-
சினிமாவை தவிர்த்து ரசிகர்களுக்கு வேறொரு வாழ்க்கை இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் அரசியல் கருத்துக்களை வெளியிட உரிமை இருக்கிறது. என் ரசிகர்களை பொறுத்தவரை அவர்கள் என் படங்களை பார்த்து ரசிக்க வேண்டும். சுதந்திரமான சிந்தனை கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காகவே மன்றங்களைக் கலைத்தேன், என்கிறார் அஜீத்.

நடிகர் அஜீத்குமார் தனது ரசிகர் மன்றங்களை கடந்த மே மாதம் கலைத்துவிட்டார். அஜீத் அரசியலுக்கு வருவார் என எதிர்ப்பார்த்துக் காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு மன்றத்தை அஜீத் கலைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனாலும் மங்காத்தா படத்துக்கு பேனர்கள், கொடி தோரணங்கள் கட்டி கொண்டாடினார்கள். மன்றத்தைக் கலைத்ததால் படம் ஓடாது என்று சிலர் கூறி வந்த நிலையில், அதைப் பொய்யாக்கி மங்காத்தா ஹிட் படமாகியுள்ளது.

இந்த நிலையில் ரசிகர் மன்றத்தை கலைத்தது ஏன் என்பது பற்றி அஜீத் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், “சினிமாவுக்கும் அரசியலுக்கும் உள்ள பந்தம் இறுகி வருகிறது. ரசிகர்கள் வெவ்வேறு வாழ்க்கை முறைகளில் இருந்து வருகிறார்கள். அவர்கள் நலன் எனக்கு முக்கியமாக படுகிறது. சினிமாவை தவிர்த்து அவர்களுக்கு வேறொரு வாழ்க்கை இருக்கிறது. சினிமா என்பது பொழுதுபோக்கு சார்ந்தது. அதை தனிப்பட்டவர்கள் சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ளக்கூடாது.

ஒவ்வொருவருக்கும் அரசியல் கருத்துக்களை வெளியிட உரிமை இருக்கிறது. என் ரசிகர்களை பொறுத்தவரை அவர்கள் என் படங்களை பார்த்து ரசிக்க வேண்டும். இவைகளையெல்லாம் கருத்தில் கொண்டுதான் ரசிகர்மன்றத்தை கலைத்தேன்.

எனது முடிவை பலரும் பாராட்டினார்கள். அரசியல் முடிவுகளை தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு அமைப்பில் இருந்துதான் செய்ய வேண்டும் என்பது அல்ல.

சமூகத்தில் இரண்டு பிரிவு மக்கள் உள்ளனர். ஒரு பிரிவினர் நேரடியாக களம் இறங்குவார்கள். இன்னொரு பிரிவினர் தனி மனிதனாக இருந்து கொண்டு என்ன செய்யலாம் என்று கேட்பவர்கள். நான் இதில் இரண்டாவது வகை.

எனக்கு அரசியல் ஆர்வம் கிடையாது. என் சக்திக்கேற்ப மக்களுக்கு முடிந்த உதவிகளை செய்து வருகிறேன். ஒவ்வொருவரும் இதுபோல் செயல்பட்டால் உலகம் சிறப்பாக மாறும்.

மங்காத்தா படத்தில் நரைத்த தாடியுடன் வந்தேன். பில்லா-2 படத்தில் இளமையாக வருகிறேன்.

இப்படத்துக்கு பின் என் வயதுக்கேற்ற வேடங்களைத் தேர்வு செய்து நடிப்பேன்,” என்றார் அஜீத்.
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
———————————————————————————————————————-
அடடா வாய் திறந்தது வம்பா போச்சே …! லக்ஸ்மி ராய் போட்ட பந்தில் திரிஷா அவுட்
———————————————————————————————————————-
மங்காத்தாவில் அஜீத் ஜோடி மற்றும் வில்லி கேரக்டரில் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்யுமாறு தன்னிடம் இயக்குனர் வெங்கட் பிரபு கூறியதாக லக்ஷ்மி ராய் தெரிவித்ததால் த்ரிஷா கடுப்பாகியுள்ளார். ராயைப் போட்டுத் தாக்கியுள்ளார்.

மங்காத்தாவில் த்ரிஷா நடித்த கேரடக்டருக்கு தன்னைத் தான் வெங்கட் பிரபு முதலில் அணுகினார் என்றும், அஜீத் ஜோடி, வில்லி கேரக்டரில் எது வேண்டுமானாலும் தேர்வு செய்யுமாறு கூறியதாகவும் நடிகை லக்ஷ்மி ராய் தெரிவித்துள்ளார். ஆனால் இதை இயக்குனர் வெங்கட் பிரபு மறுத்துள்ளார். தான் த்ரிஷாவைத் தான் அஜீத் ஜோடியாக நடிக்கக் கேட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த த்ரிஷா கடுப்பாகிவிட்டாராம். என்ன இந்த லக்ஷ்மி ராய் இப்படி அல்பத்தனமாக நடந்து கொள்கிறாரே என்று எரிச்சல் அடைந்துள்ளாராம். அம்மாடி இப்படி பொய் சொல்கிறாரே லக்ஷ்மி ராய் என்று மங்காத்தா யூனிட்டும் கூட கடுப்பாகியுள்ளதாம்.

மங்காத்தா படத்தில் நடிக்கப் போய் இப்படி திரிஷாவை காஞ்சனா ரேஞ்சுக்கு மாற்றி விட்டாரே லக்ஷ்மி ராய்.
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
———————————————————————————————————————-
காஜல் கொடுத்தது நிர்வாண போஸ் அல்ல – விளக்கம் தருகிறார் காஜலின் தங்கை
———————————————————————————————————————-

தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், ஹிந்தியில் வெளியான “சிங்கம்” படத்தில் நடித்திருக்கிறார். இந்த பிரபலத்தை பயன்படுத்திக் கொள்ள நினைத்து, மும்பையில் இருந்து வெளியாகும் பிரபல “எப்.எச்.எம்.” என்ற பேஷன் பத்திரிகையில், காஜல் அகர்வால் மேலாடை இல்லாமல் அரை நிர்வாண போஸ் கொடுத்து இருப்பதாக பரபரப்பு போட்டோவை வெளியிட்டது. இது குறித்து சினிமா உலகினர் அதிர்ச்சியும், ஆச்சர்யமும் அடைந்தனர். இந்நிலையில் காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வால் என் அக்கா நிர்வாண போஸ் கொடுக்கவில்லை என்றார்.
இதுகுறித்து நிஷா அகர்வால் மேலும் கூறியதாவது;

“எனது அக்காவான காஜல் அகர்வால் அரை நிர்வாண போஸ் கொடுக்கவில்லை. அவரது படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டுள்ளனர். மலிவான விளம்பரத்துக்காக இதை செய்து உள்ளனர். ஆபாச படத்தை பார்த்து என் அக்கா மனம் நொந்துள்ளார். இதற்கு சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். படத்தை பார்த்து நிறைய பேர் போன் செய்து பேசுகிறார்கள். நண்பர்கள் உறவினர்கள் எல்லாம் விசாரிக்கிறார்கள். எங்கள் குடும்பத்தினர் மிகவும் வருத்தத்தில் உள்ளனர்.” என்றார்.
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
———————————————————————————————————————-
பக்தி பொங்கும் பரவசக்காட்சிகளில் மட்டுமே நடிப்பாராம் நயன்தாரா!
———————————————————————————————————————-
பொதுவாக தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வெளியில் பேசுவதைத் தவிர்ப்பவர் பிரபுதேவா. அவரையும் நயன்தாராவையும் இணைத்து கிசுகிசுக்கள் பரபரப்பாக வெளியானபோதும் அமைதி காத்தார்.

முதல்முறையாக இப்போது நயன்தாராவுடன் திருமணம் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.

இதுகுறித்து பிரபுதேவா தனது பிஆர்ஓ நிகில் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நான் என்னுடைய தனிப்பட்ட விஷங்களைப் பற்றி யாரிடமும் பகிர்ந்துக்கொள்ள விரும்பாதவன். ஆனால், எனக்கும் நயன்தாதாராவுக்கும் நடக்க இருக்கும் திருமணத்தைப் பற்றி பல தவறான செய்திகள் பரவி வருகின்றன.

இந்த நேரத்தில், இந்த நாளில் நயன்தாராவை திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என்று நேரம் குறித்து பத்திரிக்கையில் செய்தி வெளியானதைப் படித்தேன். அதன் பின்னரே இந்த விஷயத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேச முன்வந்தேன்.

மறைப்பதற்கு எதுவுமில்லை…

எனக்கும் நயன்தாராவுக்கும் நடக்க இருக்கும் திருமணம், உலகுக்கு வெளிப்படையாக இந்த நேரத்தில், இந்த நாளில் என சொல்லப்பட்ட பின்பே நடக்கும். இனிமேல் இந்த விஷயத்தில் மறைப்பதற்கு எதுவும் இல்லை. எங்களுடைய திருமணத்திற்கு இருவீட்டாரின் பெற்றோர்களின் ஆசீர்வாதத்துடன் தான் நடக்கும்.

எனக்காக தியாகம் செய்தார் நயன்தாரா…

என் மேல் வைத்திருந்த காதலுக்காக திரையுலகில் நடிப்பதை தியாகம் செய்தவர் நயன்தாரா. அவர் சீதைப் படத்தில் நடித்திருக்கும் தெலுங்கு படமான ஸ்ரீராம ராஜ்யம் படத்தில் கிடைத்த வாய்ப்புகள் மாதிரி புனிதமான கதாபாத்திரங்கள் கிடைத்தால் திருமணத்திற்கு முன்பு நடித்துக் கொடுக்க இப்போதும் தயாராக இருக்கிறார்,” என்று கூறியுள்ளார்.
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..

———————————————————————————————————————-
உண்மையான ஆம்பிளையா இருந்த நேர்ல வா – கவர்ச்சி பிரளயம் ஷகீலா
———————————————————————————————————————-

பிரபல கவர்ச்சி பிரளயம் நடிகை ஷகீலாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. போனில் பேசும் மர்ம நபர்கள் ஆபாசமான வார்த்தைகளால் தன்னை திட்டுவதாகவும் ஷகீலா புகார் கூறியுள்ளார். போலி சாமியார்களிடம் இருந்து அப்பாவி மக்களை எப்படி காப்பாற்றுவது? என்பதை கருவாக வைத்து, `ஆசாமி என்ற படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில், கவர்ச்சி நடிகை ஷகீலா போலி சாமியாராக நடிக்கிறார். அவருடன் சந்தானபாரதி, பாண்டு, அனுமோகன், நெல்லை சிவா ஆகியோரும் போலி சாமியார்களாக நடிக்கிறார்கள்.

சாமியார் வேடத்தில் இந்த 5 பேர்களும் ஒரு ஆசிரமத்துக்குள் புகுந்து, அங்கு ஒரு அரசியல்வாதியால் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் ரூ.100 கோடியை கொள்ளையடிப்பது போல் படத்தின் கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. கே.செந்தாமரை கண்ணன் என்பவருடன் இணைந்து படத்தை தயாரிப்பதுடன், இயக்கவும் செய்கிறார் ஆண்டாள் ரமேஷ்.

படத்தில், போலி சாமியார்களில் ஒருவராக நடித்து வரும் ஷகிலாவுக்கு போனில் கொலை மிரட்டல் வந்து இருக்கிறது. இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், “கடந்த 4 நாட்களாக என் வீட்டுக்கு மர்ம போன் வந்து கொண்டிருக்கிறது. போனை எடுத்ததும், யாரோ ஒரு ஆள் மோசமான வார்த்தைகளால் திட்டுகிறான்.”நீ போலி சாமியாராக நடிக்கிறாயாமே…நடித்துவிட்டு வெளியே வந்துடுவியா? அந்த படம் வந்தால், நீ வெளியே நடமாட முடியாது என்று மிரட்டுகிறான். “நடிப்பது என் தொழில். எந்த வேடம் கொடுத்தாலும் நான் நடிப்பேன். அந்த வேடத்தில் நடிக்கக்கூடாது, இந்த வேடத்தில் நடிக்கக்கூடாது? என்று சொல்வதற்கு நீ யார்? தைரியம் இருந்தால் நேரில் வா என்று நான் சொன்னதும் போனை வைத்து விட்டான். இன்னொரு ஆள், ஆபாசமான வார்த்தைகளால் திட்டிவிட்டு போனை வைத்து விடுகிறான். இப்படியே 4 நாட்களாக மர்ம போன்கள் வருகின்றன. யாரோ ஒரு சாமியார் கும்பலை சேர்ந்தவர்கள்தான் பேசுகிறார்கள் என்பதை புரிந்து கொண்டேன். இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன், என்று கூறியுள்ளார்.
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
———————————————————————————————————————
இயக்குனர் சங்கரை பின்னுக்கு தள்ளினார் முருகதாஸ் 10 நிமிடத்திற்கு 10௦ கோடி (காணொளி)
———————————————————————————————————————-
“நடிகர் சூர்யா நடித்து வெளியாக உள்ள “7ம் அறிவு” படத்தின் முதல் 10 நிமிட காட்சிக்காக மட்டும் 10 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது என படத்தின் இயக்குனர் முருகதாஸ் கூறினார்.

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சூர்யா, ஸ்ருதிஹாசன் நடித்து வெளிவர இருக்கும் 7ம் அறிவு திரைப்படம் �செவன்த் சென்ஸ்� என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. இதன் லோகோ வெளியீட்டு விழா ஐதராபாத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. அதில் இயக்குனர் முருகதாஸ் பேசுகையில் கூறியதாவது: இந்த திரைப்படம் கஜினியை விட சிறந்ததாக அமைய வேண்டும் என கடந்த 8 மாதங்களாக கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. இந்த உலகத்துக்கு நாம் என்ன கொடுத்தோம், என்ன கொடுக்க மறந்து விட்டோம் என்ற கருவே 7ம் அறிவு படமாக உருவாக்கப்பட்டது.

படத்தில் வரும் முதல் 10 நிமிட காட்சிகளுக்காக மட்டும் 10 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. படத்தில் வரும் குங்பூ காட்சிகள் ரசிகர்களை மிகவும் கவரும். இவ்வாறு அவர் கூறினார். நடிகர் சூர்யா கூறுகையில், கஜினி படம் மாபெரும் வெற்றியடைந்தது. அதைத் தொடர்ந்து மீண்டும் முருகதாசுடன் இணைவதால் இந்த படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முருகதாஸ் என்னிடம் மீண்டும் ஒரு படம் செய்யலாம் என கூறியபோது, சாதாரண படம் என்றால் வேண்டாம். நமது இருவரின் கூட்டணி மீண்டும் பேசப்படும் அளவுக்கு இருக்க வேண்டும் என்றேன். இந்திய திரைப்பட வரலாற்றில் இதுபோன்ற ஒரு சினிமாவை நான் கேள்விபட்டதும் இல்லை. பார்த்ததும் இல்லை என்றார்.
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..

———————————————————————————————————————-
உடலின் அங்கங்கள் தெரியும்படி நடிப்பது முறையல்ல – மதுமிதா 2011-09-13 00:11:20
———————————————————————————————————————-
கிளாமராக மட்டும் நடிக்க மாட்டேன், நான் எப்போதுமே அப்படி நடித்ததில்லை ? திருமணத்துக்கு பிறகு மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கிறார் மதுமிதா.

இது குறித்து அவர் கூறியதாவது: தமிழில் “யோகி”க்கு பிறகு நல்ல வாய்ப்புகள் அமையாதது என் துரதிருஷ்டம். வந்த சில வாய்ப்புகள் திருப்தி அளிக்கவில்லை. திருமணம், தேனிலவு என்று சில காலம் ஓடிவிட்டது.

சிறிய இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் தெலுங்கில் நடிக்கத் தொடங்கியிருக்கிறேன். மனோஜ் ஹீரோ. தீட்சிதாவும் நானும் ஹீரோயினாக நடிக்கிறோம். நல்ல குடும்ப பெண் கேரக்டர்.

தமிழில் ஒரு படத்தில் நடிக்க பேச்சு நடக்கிறது. ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்று நிபந்தனை விதிப்பதில்லை. நல்ல கேரக்டராக இருந்தால் போதும். ஆனால் கிளாமராக மட்டும் நடிக்க மாட்டேன்.உடலின் அங்கங்கள் தெரியும்படி நடிப்பது முறையல்ல திருமணமாகிவிட்டதால் சொல்லவில்லை. எப்போதுமே அப்படி நடித்ததில்லை
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
———————————————————————————————————————-
“வெடி” படத்தில் விஷாலுக்கும் சமீராவுக்கும் ஒரு முத்தக்காட்சி
———————————————————————————————————————-
பத்திரிகையாளர்களை கண்டாலே “ஒன் ஸ்டெப் பேக்” என்று ஓடிவிடும் பிரபுதேவா அன்று விஷால் நடிக்கும் “வெடி” பிரஸ் மீட்டுக்கு வந்திருந்தது ஆச்சர்யம். வந்தவர் உம்மென்று முகத்தை வைத்திராமல் தனக்கேயுரிய ஹாஸ்யத்துடன் உரையாடியது அதைவிட ஆச்சர்யம்.

தெலுங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சவுரியம் படத்தின் ரீமேக்தான் இந்த வெடி. விஷால்-சமீரா ரெட்டியும் இணையும் இப்படத்தில் காமெடிக்கு பிரபுதேவா தேர்ந்தெடுத்தது விவேக்கை. நீங்களும் வடிவேலுவும் நல்ல ஃபிரண்ட்ஸ்சா இருந்தீங்க. ஏன் வடிவேலுவை விட்டுட்டு விவேக்கை நடிக்க வைக்கணும்? இந்த கேள்விக்கு பதறினார் மாஸ்டர்.

இருந்தீங்க… இல்ல. இப்பவும் இருக்கோம். வடிவேலுன்னா உயிர் எனக்கு. இந்த கதைக்கு விவேக் இருந்தா பெட்டரா இருக்கும்னு தோணுச்சு. அதனால்தான் என்றார். விஷால் தொடங்கி விஜய் ஆன்ட்டனி வரைக்கும் பாராட்டி தள்ளிய பிரபுதேவா, இப்படி ஒரு டீம் எனக்கு கிடைச்சது சந்தோஷம் என்றார்.

பின்னாலேயே பேச வந்த விஷால், ஏன் இந்த ரீமேக் கதைக்கு பிரபுதேவா மாஸ்டரை அழைத்தோம் என்பதை தன்னிலை விளக்கமாக்க, நிருபர்களின் சந்தேகம் நிமிடத்தில் தீர்ந்தது.

தெலுங்கில் வெளிவந்த சவுரியம் படத்தை பார்த்ததும் அதை தமிழ்ல தயாரிக்கணும் என்று முடிவு செய்தோம். இருந்த மாதிரியே இருக்கட்டும் என்று நினைச்சிருந்தா டூப் நெகட்டிவ்னு சொல்வாங்க. அதுமாதிரி சில காட்சிகளை ரிமூவ் பண்ணிட்டு நான் வர்ற காட்சிகளை மட்டும் ஷ�ட் பண்ணி எடுத்திருக்கலாம். ஆனால் அதில் புதுசு புதுசா யோசிச்சு செய்ய நிறைய வாய்ப்புகள் இருந்தது. அதுக்கு மாஸ்டர் சரியா இருப்பார்னு நினைச்சேன். அவரிடம் எனக்கு பிடிச்சது அவரோட ஹியூமர் டச். அதுக்காகவே இந்த படத்தை இயக்க அவரை அழைத்தேன். மாஸ்டரும் சம்மதிச்சார். அவருக்கு நன்றி என்ற விஷால் சொன்ன இன்னொரு விஷயம் கிளுகிளு ஏரியா.

இந்த படத்தில் விஷாலுக்கும் சமீராவுக்கும் ஒரு முத்தக்காட்சி இருக்கிறதாம். இதில் முப்பது டேக் வாங்கினார்களாம் இருவரும். சீன் படி பாத்ரூமிலிருந்து ஓடி வந்து முத்தம் கொடுக்கணும் அவங்க. ஆனால் அவங்களுக்கு லாங்வேஜ் புரியாது. அதனால் நிறைய டேக் வாங்கினாங்க. அதுவே எனக்கு சாதகமா அமைஞ்சுருச்சு என்றார் அடக்க முடியாத சிரிப்புடன்.

இதெல்லாம் இருக்கட்டும்… சமீரா ரெட்டியிடம் கேட்டார்களே ஒரு கேள்வி. எங்க ஊர்ல எந்த நடிகர் நடிகைகளும் சாதி பெயரை பின்னாடி சேர்த்துக் கொள்வதில்லை. ஆனால் நீங்க மட்டும் என்ன சமீரா ரெட்டின்னு ரெட்டியை சேர்த்துக்கிறீங்க?

அதற்கும் பதில் சொன்னார் சமீரா. எங்க குடும்பமே ரெட்டி குடும்பம்தான். நான் பிறந்ததிலிருந்தே என்னை சமீரா ரெட்டின்னுதான் கூப்பிடுறாங்க. இப்படி சொல்லிக்கிறதில் எனக்கு மிகவும் பெருமை என்றார்.

சாச்சுப்புட்டாங்களே மச்சான்…
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
———————————————————————————————————————-
கொஞ்சும் அழகு தமிழில் பேசி நிகழ்ச்சி நடத்தும் சிம்ரன் 2011-09-08 00:57:16
———————————————————————————————————————-
அரசியலில் எனக்கு இன்ட்ரஸ்ட் இல்லை, அரசியலில் நுழையும் எண்ணமும் இல்லை என்று நடிகை சிம்ரன் கூறியுள்ளார். குஷ்புவின் கொச்சைத் தமிழில் சின்னத்திரையை கலக்கிய ஜெயா டிவியின் ஜாக்பாட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பொறுப்பை ஏற்றிருக்கிறார் சிம்ரன். குஷ்பு திமுகவில் இணைந்ததால் நிகழ்ச்சியில் இருந்து தூக்கப்பட்டு, அவருக்கு பதிலாக நதியா நியமிக்கப்பட்டார். ஆனால் ஏனோ… நதியா பாதியிலேயே மும்பைக்கு பறந்து விட்டார். முந்தைய 2 பேரையும் விட தெளிவாகவும், கொஞ்சும் அழகுத் தமிழிலும் பேசி நிகழ்ச்சியை நடத்தி, பலரது பாராட்டுக்களையும் பெறத் தொடங்கி விட்டார் சிம்ரன்.

தான் நடத்தும் இந்த நிகழ்ச்சி ஜெயா டிவியின் டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்தியிருப்பதால் ஏக குஷியில் இருக்கும் சிம்ரனிடம், இதற்கு முன்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய குஷ்பு அரசியலுக்கு போய் விட்டார். நீங்கள் எப்படி? என்று கேட்டால், எனக்கு அரசியலில் இன்ட்ரஸ்ட் இல்லை; அரசியலில் நுழையும் எண்ணமும் எனக்கு இல்லவே இல்லை, என்று கூறுகிறார்.

அம்மணி இதற்கு முன்பு அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தவர்தான் என்பது நினைவு கூறத்தக்கது.
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
———————————————————————————————————————-
பேஸ்புக், டுவிட்டர் மீது நடவடிக்கை எடுப்பேன்! (விஜயகாந்த்) 2011-09-08 07:03:32
———————————————————————————————————————-
பேஸ்புக், டுவிட்டர், எப்.எம் ரேடியோ போன்ற ஊடகங்களில், தான் பேசுவது போன்று பொய்யான நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவதற்கு, தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: சமீபகாலமாக பேஸ்புக், டுவிட்டர், எப்.எம் ரேடியோ போன்ற ஊடகங்களில், நான் பேசுவது போன்று பொய்யான நிகழ்ச்சிகள் ஒலிபரப்பட்டு வருகின்றன என்று, என் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்டுள்ள ஊடகங்களில் நான் பேசவோ, பேட்டி அளிக்கவோ இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன்.

இனி மேலும் இத்தகைய செயலில் ஈடுபடும் ஊடகங்கள், இந்த அறிக்கையை கண்டு, இத்துடன் தங்கள் ஒலிபரப்பை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதற்கு மேலும், இத்தகைய ஊடகங்கள் எனது பெயரை தவறான நோக்கத்தோடு பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுத்து, வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
———————————————————————————————————————-
இவ்வருடம் வெளியான அனைத்து படங்களையும் பின்தள்ளியது மங்காத்தா 2011-09-06 23:22:02
———————————————————————————————————————-
இந்த வருடம் வெளியான அனைத்துப் படங்களின் ஓபனிங்கையும் அடித்து நொறுக்கியிருக்கிறது சன் பிக்சர்ஸின் மங்காத்தா. அ‌ஜீத்தின் சினிமா கே‌ரிய‌ரி‌ல் இந்த படமும் மகத்தான வெற்றியை பெற்றுள்ளது.

பண்டிகை தினத்தில் மங்காத்தா வெளியானது. அடுத்தடுத்த தினங்களும் பண்டிகை. கூடுதலாக வார இறுதி. திரையரங்கில் கூட்டம் அம்முகிறது. எந்திரன் திரைப்படத்துக்குப் பிறகு இப்படியொரு கூட்டத்தை திரையரங்கு இப்போதுதான் அனுபவப்படுகிறது. ஏபிசி என்ற பார்டர்களைத் தாண்டி எல்லா சென்டர்களிலும் மங்காத்தா பிய்த்துக் கொண்டு செல்கிறது. அதுமட்டுமின்றி இதுவரை எந்த ஒரு அஜீத் படத்திற்கும் கிடைக்காத ஓபனிங் இந்த படத்தில் கிடைத்துள்ளது. தல அஜீத்தின் 50வது படமான மங்காத்தா மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளதை அடுத்து ரசிகர்கள் உற்சாகத்தில் மூழ்கியுள்ளனர்.

மங்காத்தா உள்நாடு வெளிநாடு இரண்டு இடங்களிலும் மகத்தான வெற்றியை‌ப் பெற்றிருக்கிறது. விரைவில் இந்தப் படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது. தெலுங்கில் மங்காத்தாவுக்கு கேம்ப்ளர் என்று பெயர் வைத்துள்ளனர். ஆந்திர ரசிகர்களுக்கு அ‌‌ஜீத் ஏற்கனவே அறிமுகமானவர். த்‌ரிஷா அங்கு மிகப் பிரபலம். கூடவே அர்ஜுன் இருப்பது படத்தின் வேல்யூவை அதிகப்படுத்தும். இந்த வருடம் தெலுங்குக்கு சென்ற படங்களில் கோ மிகப் பெ‌ரிய வெற்றியை‌ப் பெற்றது. அதனை கேம்ப்ளர் முறியடிக்கும் என எதிர்பார்க்கலாம்.
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..

———————————————————————————————————————-
வருகிற மாதம் 3ஆம் திகதிமுதல் ராணா ஆரம்பம்! 2011-09-07 06:18:31
———————————————————————————————————————-
வரும் அக்டோபர் 3-ம் தேதி முதல் மீண்டும் ரஜினியின் ராணா படப்பிடிப்பு தொடங்குகிறது என்ற செய்தி கோடம்பாக்கத்தை உற்சாகம் கொள்ள வைத்துள்ளது.ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கும் பிரமாண்ட சரித்திரப் படம் ராணா. ரஜினியின் கனவுப் படம் இது. ரஜினியே எழுதிய கதை இது.

கேஎஸ் ரவிக்குமார் திரைக்கதை எழுதி இயக்கும் இந்தப் படத்தில் தீபிகா படுகோன் பிரதான நாயகியாக நடிக்கிறார்.

படத்தின் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன் ஏவிஎம்மில் தொடங்கியது. இதில் பங்கேற்ற கையோடு ரஜினியின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. மே, ஜூன் மாதங்களில் அவர் சென்னை மற்றும் சிங்கப்பூர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றார். ஜூலை 13-ம் தேதி சென்னை திரும்பிய அவர், தொடர்ந்து ஓய்வு எடுத்து வருகிறார்.

மீண்டும் ராணா படப்பிடிப்பை தொடங்குவது குறித்து இயக்குநர் ரவிக்குமார் மற்றும் குழுவினருடன் தீவிரமாக ஆலோசனை செய்து வந்தார் ரஜினி.

இந்த நிலையில், வரும் அக்டோபர் 3-ம் தேதி முதல் மீண்டும் ராணா படப்பிடிப்பைத் தொடங்க ரஜினி முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது கோடம்பாக்கத்தில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. “இந்தப் படம் மூலம் பல ஆயிரம் கலைஞர்களுக்கு வேலை கிடைப்பது ஒருபக்கம், மறுபக்கம் திரைப்பட வர்த்தகத்தில் இருக்கும் தேக்க நிலை நீங்குவதற்கான வாய்ப்பு போன்றவற்றால் ஏற்பட்டுள்ள மகிழ்ச்சி இது,” என்றார் பெப்சி அமைப்பச் சேர்ந்த ஒரு நிர்வாகி.

ராணா படப்பிடிப்பை மூன்று கட்டங்களாக 200 நாட்களுக்கு நடத்த இயக்குநர் ரவிக்குமார் திட்டமிட்டுள்ளார். முதல்கட்டப் படப்பிடிப்பு ஏவிஎம்மில் நடக்கிறது. சில தினங்களில் வெளிநாடு செல்லும் படக்குழு, மீண்டும் இந்தியா திரும்பி, ஆக்ரா, சித்தூர் உள்ளிட்ட பல்வேறு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களில் படப்பிடிப்பை நடத்த உள்ளது.

படத்தின் பாடல்களுக்கு இசையமைக்கும் பணியை முழுவதுமாக முடித்துவிட்டார் ஏ ஆர் ரஹ்மான். இப்போது பாடல்களை மாஸ்டரிங் செய்யும் பணியையும் துவங்கிவிட்டாராம்.
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
—- —————————————————————————————————————–
தமிழ் சினிமாவின் வசூல் விபரம் :: இதய நோயாளர்கள் பார்க்க தடை! 2011-09-10 00:18
———————————————————————————————————————-
தமிழ் சினிமா வளர்ச்சியடைந்துள்ளதாக சில சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் இது போலித்தனமானது.சினிமாவுக்கு நல்லதல்ல, என்றார் தமிழ் சினிமா ஜாம்பவான்களில் ஒருவரான பஞ்சு அருணாச்சலம்.

சூப்பர் டீம் சினிமாஸ் தயாரிக்கும் “நந்தா நந்திதா” படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேபில் நடந்தது. முதல் இசைத் தட்டை பஞ்சு அருணாசலம் வெளியிட, தயாரிப்பாளரும் இயக்குநருமான கேயார் பெற்றுக்கொண்டார்.

விழாவில், பஞ்சு அருணாசலம் பேச்சு, திரையுலகினருக்கே ஒரு புதிய சிந்தனையை ஏற்படுத்துவதாக அமைந்தது.

அவர் பேசுகையில், “முன்பெல்லாம் வருடத்துக்கு 60 படங்கள்தான் திரைக்கு வரும். அதில், 30 படங்கள் நஷ்டம் அடையாது. 20 படங்கள் நூறு நாட்கள் ஓடும். 5 படங்கள் வெள்ளிவிழா ஓடும். 5 படங்கள் மட்டும் நஷ்டம் அடையும். ஒரு படம் தயாரிக்க முப்பதாயிரத்தில் இருந்து நாற்பதாயிரம் அல்லது சில லட்ச ரூபாய்தான் ஆகும். முப்பது அல்லது நாற்பது நாட்களில் படம் தயாராகி விடும்.

ஆனால் இப்போது, வருடத்துக்கு 160 படங்கள் திரைக்கு வருகின்றன. அதில், மூன்று அல்லது நான்கு படங்கள்தான் ஓடுகின்றன. ஒரு படம் தயாரிக்க 80-ல் இருந்து 200 நாட்கள் வரை ஆகிறது. முன்பு திறமைக்கு மதிப்பு இருந்தது. இப்போது பணத்துக்குத்தான் மதிப்பு இருக்கிறது. பணத்தை வைத்துதான் வெற்றி நிர்ணயம் செய்யப்படுகிறது. போலித்தனமான வெற்றிகள் அதிகமாகி விட்டன. இந்த போலித்தனமான வெற்றியும் வளர்ச்சியும் சினிமாவுக்கு உதவுமா?

இளையராஜா சம்பளம்

“அன்னக்கிளி” படத்துக்கு இசையமைக்க இளையராஜாவுக்கு நான் கொடுத்த சம்பளம் வெறும் மூவாயிரத்து ஒன்றுதான். அவர், 100 படங்களுக்கு இசையமைத்த பின்புதான் ஒரு லட்சம் சம்பளம் வாங்கினார். அதுவரை ரூ 25 ஆயிரம் பெற்றுக் கொண்டார். சம்பளத்தை விட சாதனையைத்தான் அவர் பெரிதாக நினைத்தார்.

ஆனால் இப்போது, படம் இரண்டு வாரம் ஓடி கொஞ்சம் வசூல் செய்தால் போதும். அந்த படத்தின் கதாநாயகன், கதாநாயகி, டைரக்டர் தங்களின் அடுத்த படத்துக்கு 75 லட்சத்தில் இருந்து 80 லட்சம் வரை சம்பளம் கேட்கிறார்கள். இசையமைப்பாளர்கள் கோடிகளில் சம்பளம் பேசுகிறார்கள்.

யார் திறமைசாலி என்பதில் போட்டி இல்லை. யார் அதிக சம்பளம் வாங்குவது? என்பதில்தான் இப்போது போட்டி இருக்கிறது. இது நல்லதா… சினிமா எப்படி வளரும்?,” என்றார்.

தயாரிப்பாளர்களை கரை சேர்ப்பேன்

படத்தின் இயக்குநர் ராம் ஷிவா பேசுகையில், “நான் சினிமாவில் மிகுந்த கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தேன். கதை, திறமை எல்லாம் இருந்தும் அதைக் காட்ட வழியின்றி தவித்தபோது, என் நண்பர்கள் எம்.கோவிந்தராஜ், எம்.நாகராஜ், ஜி.பூபால் ஆகிய மூவரும் படம் தயாரிக்க முன்வந்தார்கள்.

அவர்கள் என்னிடம் இரண்டு வாய்ப்புகளை முன் வைத்தனர். ரூ 25 லட்சம் தருகிறோம். மனைவி மக்களோடு ஊருக்குப்போ. பணத்தை திருப்பிக் கூட தர வேண்டாம். அல்லது ரூ 40 லட்சம் தருகிறோம், படம் பண்ணு என்றனர். அவர்களிடம், இன்னும் கொஞ்சம் மேலே பணம் போட்டு, நீங்களே தயாரிப்பாளராக இருங்கள். நான் ஒரு படம் செய்கிறேன். நிச்சயம் ஜெயித்துக் காட்டுகிறேன், என்றேன். நம்பி வந்தனர். நான் நேராக கேயாரிடம் அழைத்துப் போய் வழிகாட்டச் சொன்னேன். அவரது வழிகாட்டுதலில் படம் நல்லபடியாக முடிந்துவிட்டது.

என்னை நம்பி வந்த அந்த மூன்று தயாரிப்பாளர்களையும் நஷ்டமில்லாமல் கரை சேர்த்துவிடுவேன் என்ற நம்பிக்கை வந்துவிட்டது,” என்றார்.

நடிகர் நாசர், கேயார், இயக்குநர் ஜனநாதன், இசையமைப்பாளர் எமில், ஒளிப்பதிவாளர் சீனிவாசரெட்டி, படத்தின் கதாநாயகன் ஹேமச்சந்திரன் ஆகியோரும் விழாவில் பேசினார்கள்.

பட அதிபர்கள் எம்.கோவிந்தராஜ், எம்.நாகராஜ், ஜி.பூபால் ஆகிய மூவரும் வரவேற்றார்கள்.
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
———————————————————————————————————————-
என்னை கடவுளுடன் ஒப்பிட்டால் கடுப்பாவேன் :: ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை 2011-09-04 23:33:35
———————————————————————————————————————-

சமீபத்தில் மக்கள் இயக்கம் சார்பில் நற்பணி விழாவும், வேலாயுதம் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் மதுரையில் நடந்தது. அப்போது எனது ரசிகர்களில் சிலர் என் மீதுள்ள அன்பின் மிகுதியால், என்ன கடவுளாக சித்தரித்து சுவரொட்டிகள் ஒட்டியிருந்தார்கள்.

அதைப்பார்த்த அடுத்த வினாடியே ரசிகர்களை அழைத்து, இப்படியெல்லாம் போஸ்டர்கள் ஒட்டக்கூடாது. அதை அகற்றி விடுங்கள் என்று கண்டிப்புடன் கூறினேன். என் வார்த்தைக்கு கட்டுப்பட்டு ரசிகர்கள் உடனே அதனை அகற்றி விட்டனர்.

இனி இப்படி செய்ய மாட்டோம் என்றும் உத்தரவாதம் தந்தார்கள். முடிந்து போன இந்த விஷயத்தை சிலர் விஷமாக்க முயற்சிக்கிறார்கள். நாங்கள் இதயத்தால் ஒன்றிணைந்தவர்கள். எங்களிடையே சாதி, மதம், இனம் போன்ற பேதங்களை உருவாக்கி, எங்களை பிரிக்கவோ, பிளவுபடுத்தவோ யாராலும் முடியாது.
நான், சாதி, மத, இனத்துக்கு அப்பாற்பட்டு மனிதர்களை மனிதர்களாக பார்ப்பவன். ஆயிரம் பேர்களை படிக்க வைத்துக்கொண்டிருக்கிறேன். அவர்கள் என்ன சாதி- மதம் என்று எனக்கு தெரியாது. என்னிடம் ஐம்பது பேர் வேலை பார்க்கிறார்கள். எனக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ஆயிரக்கணக்கில் நற்பணி இயக்கம் மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் என்ன சாதி-மதம் என்று எனக்கு தெரியாது. எனக்கு தெரிந்ததெல்லாம் தமிழ், தமிழினம் ஒன்றேதான். ஒரு மனிதரை கடவுளாக சித்தரிப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அப்படி ஆர்வம் மிகுதியால் என் ரசிகர்கள் செய்த அந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். இனி, வருங்காலங்களில் கடவுளோடு ஒப்பிட்டு சுவரொட்டிகளோ, நோட்டீசுகளோ வெளியிட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் கூறியிருக்கிறார். (ஆ ஊன்னா அறிக்கை விடுறாங்களே…)
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
———————————————————————————————————————-
கார்த்திகாவுக்கு அம்மா ராதா எச்சரிக்கை

———————————————————————————————————————

கோ” படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி, முதல் படத்திலேயே நல்ல பெயரை எடுத்திருப்பவர் நடிகை கார்த்திகா. மாஜி நடிகை ராதாவின் மகளான இவரைத் தேடி நிறைய பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தன் மகளுக்கு நடிகை ராதா சில அட்வைஸ்களை தெரிவித்திருக்கிறாராம்.

இதுபற்றி ராதா அளித்துள்ள பேட்டியொன்றில், கர்த்திகாவை பெரிய டான்சர் ஆக்க வேண்டும் என்பதுதான் என் ஆசையாக இருந்தது. அதே சமயம் அவளுக்குப் பிடித்த துறையைத் தேர்ந்தெடுக்கும் அளவுக்குச் சுதந்திரமும் கொடுத்திருந்தோம். அவளும் சிறு வயதிலிருந்தே முறையாக பரத நாட்டியம் கற்றுக்கொண்டாள். படிப்பிலும் சுட்டி. அவளுடைய முதல் பரதநாட்டிய அரங்கேற்றம் சிதம்பரம் நடராஜர் கோயிலில்தான் நடைபெற்றது. பல சினிமா வாய்ப்புகள் வந்தன. தமிழில் நல்ல டைரக்டர், நடிகர் படத்தில் அறிமுகமாக வேண்டும் என விரும்பினேன்.

ஆனால் அதற்குள் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா நடித்த “ஜோஷ் படத்தில் அறிமுகமாக வேண்டிய சூழ்நிலை. படம் ஓரளவு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. அதன் பிறகுதான் “கோ பட வாய்ப்பு கிடைத்தது. அது சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியுள்ளதில் குடும்பமே சந்தோஷத்தில் உள்ளோம். நான் கார்த்திகாவிடம் அடிக்கடி சொல்லும் விஷயம்… “”நான் 1980 முதல் 92 வரை 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டேன். அப்போது எனக்கு இருந்த புகழ் என்னவென்று எனக்கே தெரியவில்லை. இப்போது ஒரு முன்னணி நடிகையே, மூன்று அல்லது நான்கு ஆண்டுகள்தான் தாக்குப் பிடிக்க முடிகிறது. அதனால் வெற்றி வந்தவுடன் கர்வம் கொள்ளாமலும், எல்லை தாண்டாமலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறைந்தது பத்து படங்களில் நடித்து முடிக்கும் வரையில் நாம் இன்னமும் ஒரு புதுமுகம்தான், என நினைத்துக்கொண்டு ஃபீல்டில் கவனம் செலுத்த வேண்டும். கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் நடிக்காமல் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்பதுதான் அது.
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
———————————————————————————————————————-
சென்னை மேயராகிறாரா நடிகை குஷ்பு  

———————————————————————————————————————-

ஒரு கொள்கையில் நின்றால், அதில் முள்ளு குத்தினாலும் சரி, கல்லு தடுக்கினாலும் சரி. ஒரு கை பார்த்துவிடலாம் என்கிற குணம் படைத்தவர் குஷ்பு. திருமாவளவனோடு சரிக்கு சரி சண்டைக்கு நின்றதை மக்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள். (அதே திருமா வீட்டின் துக்க காரியம் ஒன்றில் முதல் ஆளாக நின்றவர் குஷ்பு என்பதையும் மறந்துவிடலாகாது)அவர் திமுக வில் சேர்ந்தது திடீர் திருப்பம் என்றால், தேர்தலில் சுற்றி சுற்றி பணியாற்றியது அதைவிட பெரிய சுவாரஸ்யம். ஏனென்றால் கடந்த தேர்தலில் நட்சத்திர அந்தஸ்து குஷ்புவுக்கா, வடிவேலுக்கா என்பதில் பெரும் போட்டியே நடந்தது. ஆனால் குஷ்புவின் சிவப்பை, வடிவேலுவின் கருப்பு வென்றது தனிக்கதை. (அப்புறம் ஏன் கருப்பு, சிவப்பு தோற்றுச்சாம் என்றெல்லாம் கேள்வி கேட்டு வெறுப்பேற்றக் கூடாது, ஆமாம்…)

சரி விஷயத்துக்கு வருவோம். சென்னை மாநகராட்சி தேர்தல் விரைவில் வரப்போகிறது. இதில் திமுக சார்பாக யாரை நிறுத்தலாம் என்று பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற பிறகும் வடிவேலு மாதிரி அமைதியாக இருக்காமல், முன்பு போலவே ஆக்டிவாக செயல்படும் குஷ்புவை நிறுத்தினால் என்ன என்று யோசித்துக் கொண்டிருக்கிறதாம் தலைமை.

கடந்த தேர்தலிலேயே எம்.எல்.ஏ சீட் கொடுத்திருக்க வேண்டியது. தவறிவிட்டது. இந்த முறை மேயருக்கு நிற்க வைக்கலாம் என்று பேசி வருகிறார்களாம். ஆனால் கட்சியை தாண்டி நடுத்தரமானவர்களிடமும் நல்ல பெயர் வாங்கியிருக்கும் தற்போதைய மேயரையும் விட்டுவிட தயாரில்லை தலைமை. என்ன நடக்கப் போகிறதோ?

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
———————————————————————————————————————-
எல்லாத்தையும் முடித்து ஏப்பம் விட்டனர் நயன்-பிரபு தம்பதி

———————————————————————————————————————-

நயன்தாரா, பிரபுதேவா திருமணம் மும்பையில் ரகசியமாக நடந்துவிட்டதாக புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது.நயன்தாராவை மணப்பதற்காகவே முதல் மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்தார் பிரபுதேவா. நயன்தாராவும் இரு வாரங்களுக்கு முன் கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்துக்கு மாறினார்.

இதையடுத்து இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. மும்பையில் அல்லது திருப்பதி கோவிலில் திருமணம் நடக்கலாம் என்றும் கூறப்பட்டது. சிலர் இந்தத் திருமணம் கொச்சியில் நடப்பதாகக் கூறிவந்தனர்.

ஆனால் தற்போது ரகசியமாக இருவரும் திருமணம் செய்து கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது. இத்திருமணத்தில் இருவரின் பெற்றோர்களும் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்து முறைப்படி புரோகிதர்கள் வைத்து வேள்வி வளர்த்து இந்த திருமணம் நடந்தது என்கின்றனர்.

நயன்தாராவுடனான திருமணத்தை அழைப்பிதழ்கள் அச்சிட்டு ஆடம்பரமாக நடத்தினால், ரம்லத்துக்கும் தனக்கும் பிறந்த மகன்கள் மனதளவில் பாதிக்கப்படுவார்கள் என்று கருதியதால் திருமணத்தை எளிமையாக நடத்தி முடித்து விட்டதாக பிரபுதேவாவுக்கு நெருங்கியவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

திருமணத்தை மும்பை பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்த பின்னர் நெருக்கமான நடிகர், நடிகைகளுக்கு நட்சத்திர ஓட்டலில் விருந்து அளிக்க முடிவு செய்துள்ளார்களாம்.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
———————————————————————————————————————-
ஜாக்கெட் போடாமல் படம் முழுக்க பரவசப்படுத்த வரும் சினேகா

———————————————————————————————————————-

பவானியில் முறைப்பும் விறைப்புமான சினேகாவை பார்த்தவர்களுக்கு அப்படியே நேரெதிர் கிளாமர் சினேகாவை பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பு. தெலுங்கு படமொன்றில் ஜாக்கெட் அணியாமல் ஆதிவாசி பெண் வேடத்தில் சினேகா நடிக்கிறார்.

நாகார்ஜுன் தயா‌ரித்து நடிக்கும் இந்தப் படம் தெலுங்கானா பிரச்சனையை முன்னிறுத்தியது. இதில் நாகார்ஜுன் ஜோடியாக சினேகா நடிக்கிறார். ஆதிவாசி பெண் கேரக்டர்.

இந்த கதாபாத்திரத்துக்காக சேலை மட்டும் அணிந்து, ஜாக்கெட் போடாமல் படம் முழுக்க வருகிறார் சினேகா. படம் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்படும் என்கிறார்கள்.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
———————————————————————————————————————-
கார்த்திக் மகனுக்கு ஜோடியாக கமல் மகள் அக்ஷ்ரா!!

———————————————————————————————————————-

சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கியிருந்த நடிகர் கமல்ஹாசனின் 2வது மகள் அக்ஷரா, இப்போது புதிய படம் ஒன்றில் ஹீரோயினாக களம் இறங்க இருக்கிறார். ராவணன் படத்தை தொடர்ந்து டைரக்டர் மணிரத்னம் அடுத்து, கார்த்தியின் மகன் கவுதமை வைத்து ஒருபடம் இயக்க போகிறார் என்பது அனைவரும் அறிந்த செய்திதான்.

படத்தில் கவுதமுடன் யார் ஜோடி சேரப்போகிறார் என்ற கேள்வி அனைவரும் மத்தியில் எழுந்தது. இப்போது அந்த கேள்விக்கு விடை கிடைத்திருக்கிறது. அவர் வேறு யாரும் அல்ல. கமலின் 2வது மகள் அக்ஷரா தான். அப்பா கமல் மற்றும் அக்கா ஸ்ருதியோடு மட்டும் நடிப்பு இருக்கட்டும்,

நமக்கெல்லாம் சினிமா ஒத்து வராது என்று ஒதுங்கியிருந்த அக்ஷராவை, வலுக்கட்டாயமாக சினிமாவில் நடிக்க வைக்க சம்மதிக்க வைத்தாராம் ஸ்ருதி கமல். மும்பையில் அம்மாவுடன் தங்கி உதவி இயக்குனராக பணியாற்றி வந்த அக்ஷ்ராவை கன்னியாக்குமரி கடல் பகுதியில் விட்டு படமெடுக்கப் போகிறார்களாம்.
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
———————————————————————————————————————-
ஐஸ்வர்யா ராய்க்கு இவ்வளவு பணத்தாசை கூடாது

———————————————————————————————————————-

ஐஸ்வர்யா ராய் தற்போது 6 மாத கர்ப்பமாக உள்ளார். இருப்பினும் அவர் வழக்கம் போல விளம்பரப் படங்களில் நடித்து வருகிறார். தான் கர்ப்பமானதால் மதுர் பந்தர்கரின் ஹீரோயின் என்ற படத்தில் இருந்து விலகினார். படங்களில் தான் நடிக்கவில்லை விளம்பரப் படங்களிலாவது நடிக்கலாமே என்று நினைத்து நடித்து வருகிறார்.

அன்மையில் லக்ஸ் விளம்பரப் படத்திற்காக லண்டன் சென்று வந்தார். இதைப் பார்க்கும் பாலிவுட் மக்கள் பாரு ஐஸ்வர்யா ராயை, கர்ப்பமா இருக்கும்போது கூட ஓய்வு எடுக்காமல் விளம்பரப் படங்களில் நடிக்கிறார். இருந்தாலும் இவருக்கு இவ்வளவு பணத்தாசை கூடாது என்று கிசுகிசுக்கின்றனர்.

அது காத்து வழியாக ஐஸ்வர்யா காதுகளை எட்டியது. கர்ப்பமானா நடிக்கக் கூடாதா என்ன? அதுக்காகப் போய் என்னை பணத்தாசை பிடிச்சவன்னு பேசுறாங்களே என்று கடு்பபாகிவி்ட்டார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

கர்ப்பம் என்பது ஒன்று நோயன்று. சினிமாவில் நடிக்க ஆரோக்கியமாக இருந்ந்தால் போதும். நான் ஆரோக்கியமாக இருக்கிறேன், அதனால் நடிக்கிறேன் என்றார்.

மதுர் பந்தர்கரிடம் ஹீரோயின் படத்திற்காக வாங்கிய அட்வான்சைக் கூட ஐஸ்வர்யா திருப்பி கொடு்ததுவிட்டார்.

ஐஸ்வர்யாவுக்கு நான் கொடுத்த காசோலையை திருப்பி கொடுத்துவிட்டார். அவர் கொடு்ககாவிட்டாலும் நான் கேட்டிருக்க மாட்டேன். இதில் இருந்தே அவருக்கு பணத்தாசை இல்லை என்பதை தெரிந்து கொள்ளலாம் என்றார் மதுர் பந்தர்கர்.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
———————————————————————————————————————-
ராகவா லாரான்ஷுக்கு ”நோ” சொன்னார்: நடிகை தமன்னா

———————————————————————————————————————-

தெலுங்கில் தமன்னா மிகவும் பிரபலமான முன்னனி நடிகையாக வலம் வந்துக் கொண்டிருக்கின்றார்.

தமிழ் பட வாய்ப்பை ஏற்று நடிக்க தமன்னா தயங்குவதாக கூறுகிறார்கள்.

காஞ்சனா பட வெற்றிக்கு பிறகு, ராகவா லாரன்ஸ் தனது புது படத்திற்காக தமன்னாவை இழுக்க முயற்சி செய்தாராம்.

அனுஸ்காவுடன் மோதல் ஏற்பட்டதால் லாரன்ஸ் பார்வை தமன்னா பக்கம் திரும்பியதாம்.

லாரன்சின் தெலுங்கு படத்தில் நடிக்க தமன்னாவை அணுகியதாக சொல்கிறார்கள்.

தமன்னா தனது ‘தேதிகளை’ ஏற்கனவே படப்புள்ளிகளுக்கு வாரி வழங்கி விட்டதால் லேட்டஸ்ட் தமிழ், தெலுங்கு படங்களை ஒப்புக்கொள்ள தயக்கம் காட்டுகிறாராம்.ஆனாலும் தனக்கு பொருத்தமான வேடங்களில் மட்டுமே நடிக்க தமன்னா ஆர்வம் காட்டுவாராம்.

இந்நிலையில் லாரன்ஸ் எடுக்கும் படங்களில் நடிக்கும் நடிகைகள் பற்றிய விபரம் இனி வெளியாக வாய்ப்புள்ளதாக கூறுகிறது பட வட்டாரம்.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
———————————————————————————————————————-
கமல்ஹாசனுடன் நடிக்காதே : அனுஷ்காவை தடுத்த ஹீரோ!!

———————————————————————————————————————-

விஸ்வரூபம்” படத்தின் கமல்ஹாசனும், அனுஷ்காவும் ஜோடி சேர விடாமல் ஆந்திர பிரபல ஹீரோ ஒருவர் தடுத்து விட்டாராம். விஸ்வரூபத்தில் கமல்ஹாசன் ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார் என்ற செய்தியை கேட்டதும் கமல் ரசிகர்கள் எல்லோரும் சந்தோஷத்தில் ஆழ்ந்தார்கள்.
அந்த சந்தோஷத்தை ஒரு வாரத்திற்கு கூட நீடிக்க விடாமல் புதிய செய்தியொன்று வெளியாகியிருக்கிறது. விஸ்வரூபத்தில் அனுஷ்கா நடிக்கவில்லை என்ற செய்திதான் அது.

அனுஷ்காவை கமல் உடன் ஜோடி சேர விடாமல் தடுத்திருப்பது ஆந்திர பிரபல ஹீரோ நாகார்ஜூனா என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். கமல் படத்தில் இவர் நடிக்கப் போகிறார் என்றதுமே, வேண்டாம் போகாதே… என்று கூறிவிட்டாராம் நாகார்ஜுனா.

அனுஷ்கா நடிக்கிறார் என்ற செய்திகள் கசிந்ததே தவிர இன்னும் அக்ரிமென்ட் எதிலும் சைன் பண்ணவில்லையாம் அனுஷ்கா.

இதனிடையே அனுஷ்கா சொதப்பினால் என்ன செய்வது? என்று நினைத்ததால்தானோ என்னவோ முன்கூட்டியே எமி ஜாக்சனிடமும் ஒரு வாய்ப்பு கேட்டிருந்தாராம் கமல். அனேகமாக அனுஷ்கா இடத்தை எமி பிடிப்பார் என்று கூறப்படுகிறது.

Advertisements

About prasanthmani

i'm an engineering student

Discussion

Comments are closed.

Advertisements